"உடலுறவு.." ஒரே நேரத்தில் இரு ஆணுறைகளை அணிவது பாதுகாப்பை அதிகரிக்குமா? நீங்க எதிர்பார்க்காத பதில்
மும்பை: இந்த காலத்தில் ஆணுறைகள் பயன்பாடு என்ன தான் அதிகரித்து வந்தாலும், அவை குறித்துத் தெளிவான புரிதல் யாருக்குமே இல்லை. ஆணுறைகள் குறித்த பல சந்தேகமும் உள்ளன. அதில் முக்கியமானது ஒரே நேரத்தில் இரு ஆணுறைகளைப் பயன்படுத்தலாமா என்பது தான்.! இதுபோல ஒரே நேரத்தில் இரு ஆணுறைகளைப் பயன்படுத்தும் போது அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும் எனச் சிலர் நம்புகிறார்கள். இது உண்மை தானா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.!
குழந்தை பிறப்பைத் தடுப்பதைத் தாண்டி ஆணுறைகளுக்கு பல்வேறு பயன்கள் உள்ளன. குறிப்பாக பாலியல் நோய்கள் பரவுவதைத் தடுப்பதில் ஆணுறைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எச்.ஐ.வி, கிளமிடியா, கோனோரியா மற்றும் ஹெர்பெஸ் என அனைத்து பாலியல் நோய் பரவலையும் தடுக்கும் ஒரு கேடயமாக ஆணுறைகள் செயல்படுகின்றன. அவை தனி நபர்களுக்கு பாலியல் சுதந்திரத்தையும் வழங்குகிறது.

ஆணுறைகள்
ஆணுறைகள் பொதுவாக லேடெக்ஸ் மூலம் வடிவமைக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு லேடெக்ஸ் ஒத்துக்கொள்ளாது. எனவே அவர்களுக்கு மட்டும் பாலியூரிதீன் ஆணுறைகள் சந்தையில் இருக்கும். ஆனால், பிரதானமாக லேடெக்ஸ் மூலம் செய்யப்பட்ட ஆணுறைகளே சந்தையில் அதிகம் இருக்கிறது. இவை விந்தணுக்கள் பெண்களின் உடலில் செல்வதைத் தடுக்கிறது. மேலும், நேரடியான கான்டெக்ட்டை தவிர்ப்பதால் தொற்றுகள் பரவும் அபாயத்தைக் குறைக்கின்றன.
ஆணுறைகள் குறித்துக் கடந்த காலங்களில் அரசுகளே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. அப்போது மக்கள் தொகை அதிகரிப்பு என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. இதனால் மக்கள் தொகையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதற்காக ஆணுறைகள் குறித்த விழிப்புணர்வை அரசே ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே இந்தியாவில் ஆணுறைகள் பயன்பாடு அதிகரித்தன.
இரு ஆணுறைகள்
அதேநேரம் இன்னுமே கூட ஆணுறைகள் குறித்துப் பல வித பொய்யான நம்பிக்கைகள் மக்களிடையே உள்ளது. அதில் முக்கியமானது ஒரே நேரத்தில் ஒரு ஆணுறைக்குப் பதிலாக இரண்டு ஆணுறைகளைப் பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பை வழங்கும் எனப் பலரும் கருதுகிறார்கள். குறிப்பாக இளைஞர்களும் ஆணுறைகள் குறித்த தெளிவான புரிதல் இல்லாதவர்களும் இப்படி நினைக்கிறார்கள்.
எதிர்பார்க்காத பதில்
ஆனால், உண்மையில் ஒரே நேரத்தில் இரு ஆணுறைகள் பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பைத் தராது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஆபத்தை அதிகரிக்கவே செய்யும். அதாவது இரு ஆணுறைகளை அணியும் போது அவற்றுக்கு இடையே ஏற்படும் உராய்வு காரணமாக ஆணுறைகள் கிழிய வாய்ப்புகள் அதிகம். இந்த உராய்வு வெப்பத்தை உருவாக்கி ஆணுறைகளைப் பலவீனப்படுத்துகிறது.. இதனால் உடலுறவின் போது அவை கிழிந்து போகவோ அல்லது நழுவவோ வாய்ப்புள்ளது.
அதாவது ஒரே ஒரு ஆணுறையைச் சரியாகப் பயன்படுத்தினால் அது பாதுகாப்பைத் தரும்.. அதேநேரம் அதை இரண்டாக மாற்றினால் பாதுகாப்பைக் குறைக்கவே செய்யும். உலகெங்கும் உள்ள மருத்துவர்களும் கூட இந்த ஆபத்தைச் சுட்டுக்காட்டியே ஒரே நேரத்தில் இரண்டு ஆணுறைகளைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள்.
அதிகபட்ச பாதுகாப்பிற்கு என்ன செய்யணும்
உங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு தேவை என்றால் ஆணுறைகளைச் சரியாகப் பயன்படுத்தினால் போதும். மேலும், காலாவதி தேதியை செக் செய்வது, ஆணுறைகளைச் சரியாக வைத்திருப்பது உள்ளிட்ட அடிப்படை விஷயங்களைச் சரியாகச் செய்தாலே ஆணுறைகள் அதிகபட்ச பாதுகாப்பைத் தரும். அதை விட்டுவிட்டுக் கூடுதல் பாதுகாப்புக்கு 2 ஆணுறைகள் யூஸ் செய்கிறேன் என்றால் அது ரிஸ்க்கை அதிகரிக்கவே செய்யும்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டால்.. உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகவும்.












Click it and Unblock the Notifications