சிறுவர், சிறுமியர்கள் இளம் வயதில் நெஞ்சு வலியால் இறக்க காரணம் என்ன? டாக்டர் பாரூக் விளக்கம்
சென்னை: இளம் வயதில் மரணங்கள் ஏற்படுவதற்கு மாரடைப்பு காரணமா, இல்லை இதய செயலிழப்பு காரணமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இள வயது மரணங்களுக்கு மாரடைப்பு காரணமா??? முதலில் மாரடைப்பு மற்றும் இதய முடக்கம்/செயலிழப்பு ஆகியவற்றுக்கான வித்தியாசத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாரடைப்பு (MYOCARDIAL INFARCTION) என்பது இதயத்தின் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் தமனிகளில் திடீர் என அடைப்பு ஏற்படுவது. இதய முடக்கம் / செயலிழப்பு என்பது CARDIAC ARREST இதில் ரத்த நாள அடைப்பு மரணத்திற்கு காரணமன்று.
மாறாக இதயத்தின் நார்மலான துடிப்புக்கான இயங்குவியல் மற்றும் அதற்கு சக்தி தரும் மின்சார சர்க்யூட்டில் ஏற்படும் பிரச்சனையில் நிகழ்வதாகும் பொதுவாக மாரடைப்பு / இதய ரத்த நாள அடைப்பு போன்றவை மிக இளம் வயதில் மிக மிக அரிதான ஒன்று.
எனினும் இளம் வயதில் திடீரென இதயச் செயல் முடக்கம்/ செயலிழப்பு ஏற்பட்டு மரணமடையவே வாய்ப்பு அதிகம். இதை SUDDEN DEATH IN YOUNG ADULTS என்கிறோம். அதாவது "சிறார் சிறுமியிடத்தில் ஏற்படும் திடீர் மரணம்" என்று பொருள்.
இதற்கு SUDDEN CARDIAC ARREST காரணமாக இருக்கலாம். "திடீர் இதய செயலிழப்பு" என்பது திடீரென்று இதயத்தின் துடிக்கும் விதத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து அதனால் இதயத்தின் செயல்தன்மை பாதிக்கப்படுவது அல்லது நிற்பது என்று கொள்ளலாம். மிக இளம் வயதில் திடீர் இதய செயலிழப்பு நிகழ்வதற்கு காரணங்கள் என்ன?
இதயத்தின் துடிக்கும் விதத்தில் பிரச்சனைகள் இருந்தால் இதயத்தால் முழு செயல்திறனுடன் ரத்தத்தை உடல் முழுமைக்கும் உந்தித் தள்ள இயலாது. இதன் விளைவாக இதயத்தின் தசைகள் அதிக வேலைப்பளுவுக்கு உள்ளாகி தடிமனாகும். இதை HYPERTROPHIC CARDIOMYOPATHY என்கிறோம்.
இன்னும் சிலருக்கு இதயத்தின் துடிப்பு தறிகெட்டு இருக்கும். சராசரியாக துடிக்கும் விகிதத்தை விட அதிகமாகத் துடிக்கும். இது அந்த இதயத்தில் உள்ளார்ந்த துடிக்கும் திறனில் ( CARDIAC RHYTHM) பாதிப்பை உண்டாக்கும். Congenital Long QT Syndrome பிறவியிலேயே ஏற்படும் இதய துடிப்பில் வரும் பிரச்சனை இது. அல்லது ACQUIRED LONG QT SYNDROME இது இதயத்தில் ஏற்பட்டுள்ள வேறு பிரச்சனைகளால் அல்லது உட்கொள்ளும் சில மருந்துகளால் ஏற்படலாம்.
BRUGADA SYNDROME ( ப்ருகடா சிண்ட்ரோம்) WOLFE PARKINSON WHITE SYNDROME (வுல்ஃப் பார்கின்சன் வொய்ட் சிண்ட்ரோம் ) ARVC ( ARRHYTHMOGENIC RIGHT VENTRICULAR CARDIOMYOPATHY) மார்பு பகுதியில் ஏற்படும் பலத்த காயம் ( BLUNT CHEST INJURY) திடீரென விளையாடும் போதோ அல்லது சாலை விபத்திலோ மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்படும் போது இதயம் திடீரென செயலிழந்து விடும் இதை COMMOTIO CORDIS (கொமோசியோ கார்டிஸ்) என்கிறோம்.
இவையன்றி இதயத்தின் அறைகளில் ஓட்டைகள் / இதயத்தின் அறைகளில் தேவையற்ற இணைப்புகள் போன்ற பிறவியிலேயே தோன்றும் பிரச்சனைகளாலும் இதய செயலிழப்பு ஏற்படலாம். இதைப்படித்த உடன் மேற்சொன்ன பிரச்சனைகள் நமது பிள்ளைக்கும் இருக்குமோ என்ற அச்சம் தேவையில்லை, காரணம் மேற்சொன்ன பிரச்சனைகள் மிக மிக அரிதானவை.
ஆயினும் சில இதயம் சார்ந்த அறிகுறிகள் குறித்த நாம் விழிப்புணர்வுடன் இருப்பது இது போன்ற இதயம் சார்ந்த பிரச்சனைகளை கண்டுகொண்டு முறையான சிகிச்சை எடுத்து மரணத்தை தவிர்க்க உதவும்.
- விளையாடும் போதோ ஓடும் போதோ உடற்பயிற்சி செய்யும் போதோ தலைசுற்றினால் அல்லது தலை சுற்றி கீழே விழுந்திருந்தால் ( SYNCOPE) அது இதய செயல்திறன் பிரச்சனையாக இருக்கலாம். - மூச்சுத்திணறல்( SHORTNESS OF BREATH) , அதிலும் உடற்பயிற்சி செய்யும் போது அதிகமான மூச்சுத் திணறல் ஏற்படுவது. கவனிக்க - உடல் பருமன் இருக்கும் சிறார்கள் / ஆஸ்துமா போன்ற நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் வரலாம். எனினும் மருத்துவரை சந்திக்கும் போது மெய்யான காரணம் தெரியவரும்.
- குடும்பத்தில் ஏற்கனவே இள வயது மரணங்கள் ஏற்பட்டிருக்கிறதா ? அப்படி ஏற்பட்டிருந்தால் இன்னும் அதிக கவனம் தேவை.
இதயம் சார்ந்த பிரச்சனைகள் முன்னமே கண்டறியப்பட்டால் அதீத உடல் பயிற்சியை தவிர்க்கலாம். இதயத்தின் துடிக்கும் விதத்தை சீராக வைத்திருக்கும் மாத்திரைகள் மருந்துகளை முறையாக உட்கொண்டு வரலாம். இதயத்தின் அறைகளில் ஓட்டை / அறைகளுக்கிடையே ஒழுங்கற்ற இணைப்புகள் இருந்தால் அவற்றை காலத்தே அறுவை சிகிச்சை செய்து சீர் செய்யலாம்.
இதயத்தின் துடிக்கும் விதத்தில் பிரச்சனை இருப்பவர்களுக்கு இதயத்திலேயே பொருத்தப்படும் தானியங்கி இதய துடிப்பு சீராக்கி ( IMPLANTABLE CARDIOVERTER DEFIBRILLATOR) கருவியை பொருத்திக் கொள்ளலாம். ஒருவேளை இதய துடிக்கும் விதத்தில் மாறுபாடு/ ஒழுங்கின்மை தோன்றினால் அதை இந்தக் கருவி தாமாகக் கண்டறிந்து இதயத்துடிப்பை சீர் செய்து விடும்.
இக்கட்டுரை வழி நான் கூற விழைவது இளம் வயதில் குறிப்பாக 35 வயதுக்குட்பட்டு அதிலும் இது போன்ற 12 வயது சிறுமி இறந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
இந்தச் சிறுமிக்கு இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. எனவே இதை மாரடைப்பு என்று கூறுவது தவறாகும். திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம்.
குழந்தைப் பருவத்தில் இருந்து குழந்தைகள் நல மருத்துவர் / குடும்ப நல மருத்துவரிடம் முறையாக குழந்தைகளையும் சிறுவர் சிறுமியரையும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் பழக்கம் இருப்பவர்களுக்கு, மருத்துவர் இது போன்ற பிரச்சனைகளை உடனடியாக ஸ்டெதஸ்கோப் வைத்து இதயம் எழுப்பும் ஒலிகளைக் கொண்டு கண்டறிந்துவிடுவார்.
இது போகவும் மேற்சொன்ன அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அணுகி பிரச்சனை எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து கொண்டு இதயத்தின் செயல்திறனில் பிரச்சனை கண்டறியப்பட்டால் அதற்கென பிரத்யேகமாக பயின்ற இதய நோய் சிறப்பு நிபுணர்களிடம் மேல்பரிந்துரை பெற்று சிகிச்சை பெற்று வருவது இது போன்ற இளம் வயது மரணங்களைத் தடுக்கும்.
பின்குறிப்பு - ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று கூற வேண்டுமெனில் இறப்பதற்கு முன்பு அவ்வாறு அடைப்பு ஏற்பட்டதைக் காட்டும் ஈசிஜி மாற்றங்கள், இதயத்தின் தசைகளில் காயம் ஏற்பட்டிருப்பதைக் காட்டும் நொதிகள் ( ட்ரோபோனின்) ஆகியவை அதிகரித்தல் ஆகியவை பார்க்கப்பட்டிருக்க வேண்டும்.
மேற்கூறியவை பார்க்கப்படாமல் ஒருவர் திடீரென இறந்து விட்டால் அவர் "இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு தான் இறந்தார்" என்பதை
இறந்த பிறகு செய்யும் பிரேதக் கூறாய்வுக்குப் பின்பு மட்டுமே உறுதி செய்ய முடியும்.
பிரேதக் கூறாய்வில் இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டதைக் காண முடியும். அதுவரை அவருக்கு ஏற்பட்டது மாரடைப்பு என்பதை உறுதி படக் கூறிவிட இயலாது. காரணம் கண்டறியப்படாத இதய செயல் முடக்கம் (CARDIAC ARREST ) என்றே அதைக் கூற வேண்டும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications