அதென்ன சர்க்கரை நோயாளிகள் கொய்யா பழத்தை மட்டும் சாப்பிடலாம்! ஆனால் வாழைப்பழம் கூடவே கூடாது! ஏன்?
சென்னை: நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடலாமா என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: டயாபடிக் மக்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா ? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதற்கு மருத்துவ சகோதரர்களிடையேவும் மாறுபட்ட கருத்துகள் உண்டு. இதில் நீங்கள் படிக்கப் போவது எனது பக்க அறிவியல் சார்ந்த பார்வை.

பொதுவாக பழங்களில் நிறைந்திருப்பது ஃப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் மாவுச்சத்து ஆகும். இதில் சுக்ரோஸில் அடங்கியிருப்பது க்ளூகோஸும் ஃப்ரக்டோஸும் ஆகும். ஒரு பழம் அதிகமாக பழுக்கப் பழுக்க அதில் உள்ள ஃப்ரக்டோஸ் அளவுகள் குறைந்து சுக்ரோஸ் அளவுகள் அதிகரித்து காணப்படும். எனவே பழுத்த பழங்களை உண்ணும் போது சுக்ரோஸ் தரும் இனிப்பு அதிகமாக இருக்கும்.
அதன் விளைவாக ரத்த சர்க்கரை அதிகமாக ஏற்றும். அடுத்து பழங்களுக்கு ஆதரவாக வைக்கப்படும் வாதம் - பழங்களில் க்ளைசீமிக் இண்டெக்ஸ் குறைவு என்பதாகும். கூடவே பழங்களில் நார்ச்சத்து வைட்டமின் சத்துகள் உள்ளன என்பதுமாகும். பழுத்த வாழைப்பழத்தைப் பொருத்தவரை க்ளைசீமிக் இண்டெக்ஸ் 62 ஆகும்.
நாம் போட்டுக் கொள்ளும் சீனி/ நாட்டு சர்க்கரையின் க்ளைசீமிக் இண்டெக்ஸ் 63. ஒப்பீட்டளவில் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று தான் என்பது புலப்படும். க்ளைசீமிக் இண்டெக்ஸ் என்பது உணவு சாப்பிட்ட பிறகு அது எவ்வளவு துரிதமாக ரத்த க்ளூகோஸ் அளவுகளை ஏற்றும் என்பதை தோராயமாக அளவிடும் கணக்கு. எனினும் நீரிழிவு நோயர்களைப் பொருத்தவரை க்ளைசீமிக் இண்டெக்சுடன்
க்ளைசீமிக் லோடு எனும் மற்றொரு பதத்தையும் சேர்த்தே பார்த்தாக வேண்டும்.
க்ளைசீமிக் லோடு என்பது ஒரு உணவுப் பொருளில் எவ்வளவு கிராம் மாவுச்சத்து உள்ளது என்பதை அதன் க்ளைசீமிக் இண்டெக்சுடன் பெருக்கினால் கிடைக்கும் கணக்காகும். ஒரு வாழைப்பழத்தில் இருக்கும் க்ளைசீமிக் லோடு 13 நீரிழிவு நோயர்களைப் பொருத்தவரை பத்துக்கு கீழ் க்ளைசீமிக் லோடு இருக்கும் உணவுகளை அதன் அளவறிந்து உண்பது சாலச்சிறந்தது.
க்ளைசீமிக் இண்டெக்ஸ் பொருத்தவரை 50 க்கும் கீழ் உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது நீரிழிவு நோயர்க்கு நலம் பயக்கும். இன்னும் சொல்லப் போனால் க்ளைசமிக் இண்டெக்ஸ் 25 க்கும் குறைவாக இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சேர்த்தால் இன்னும் கூடுதல் சிறப்பு. நிலக்கடலையின் க்ளைசீமிக் இண்டெக்ஸ் 18 மட்டுமே.
கேரட்டின் க்ளைசீமிக் இண்டெக்ஸ் 33 மட்டுமே, கீரைகளின் க்ளைசீமிக் இண்டெக்ஸ் 15 மட்டுமே, கொய்யாகாயின் க்ளைசீமிக் இண்டெக்ஸ் வெறும் 12 மட்டுமே. வெள்ளரிக்காயின் க்ளைசீமிக் இண்டெக்ஸ் 15, பல நார்ச்சத்து மிகுந்த பச்சைக் காய்கறிகளின் க்ளைசீமிக் இண்டெக்ஸ் 25 க்கும் குறைவாக உள்ளது. எனவே நார்ச்சத்து விட்டமின் வேண்டுமென்றால் நீரிழிவு நோயர்கள் பாதுகாப்பான தேர்வாக காய்கறிகளையும் மேற்கூறிய பழங்களையும் தேர்ந்தெடுக்கலாம்.
ஆனால் வாழைப்பழம் , மாம்பழம் , பலாப்பழம், இனிப்பு மிகுந்த ஆப்பிள் போன்றவற்றில் ஏன் நாட்டம் ஏற்படுகிறது? இதற்கான முக்கிய காரணம் அவற்றில் உள்ள இனிப்பு சுவை மட்டுமே. இனிப்பு சுவையை நீக்கி விட்டால் பழங்களை மனித இனம் சீண்டப்போவதில்லை என்பதே உண்மை. இனிப்போடு ஆபத்தும் எப்போதும் உண்டு.
இனிப்பு சுவை தரும் பழங்கள் ரத்த க்ளூகோஸை வேகமாக உயர்த்தி டயாபடிஸ் கட்டுப்பாட்டில் பாதகம் விளைவிக்கும். ஃப்ரக்டோஸ் எனும் சர்க்கரை கல்லீரலில் சென்று உடலில் சேமித்து வைக்கும் கொழுப்பாக மாற்றமடையும். எனவே அதிகம் இனிப்பான பழங்கள் உண்பவர்களுக்கு கல்லீரல் கொழுப்பு படியும் நோய் / நீரிழிவு / உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் கூடவே அதிகமான ட்ரைகளிசரைடுகள் ரத்தத்தில் சேரவும் வாய்ப்பு அதிகம்.
நீரிழிவின் தன்மை என்பது அனைவருக்கும் பொதுவாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பிரச்சனை இருக்கும்.
எனவே அனைத்து நீரிழிவு நோயரும் இனிப்பான பழங்கள் சாப்பிடலாம் என்ற பொதுவான கருத்தை நான் ஏற்பதில்லை. என்னைப் பொருத்தவரை நீரிழிவு நோய் கண்டறியப்பட்டுள்ளன. நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் இனிப்பு சுவை மிகுந்த பழங்களைத் தவிர்த்து நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் தேவைக்கு பச்சைக் காய்கறிகள் மற்றும் கொய்யாகாய் / வெள்ளரிக்காய் / நெல்லிக்காய் போன்றவற்றை உண்ணலாம் என்பது அடியேனின் கருத்து.
நீரிழிவு நோயரைப் பொருத்தவரை இனிப்பு சுவை கொண்ட அனைத்துமே அவர்களின் உடல்நலனைக் கெடுக்கும் என்பதை உணர்ந்தால் வள்ளுவனின் குறளைக் கூட காயிருப்ப கனி கவர்ந்தற்று என்றே படிக்க விரும்புவார்கள். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications