Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸ்திரேலியாவில் பரவும் தோல் புற்றுநோய்கள் ஏற்படுவது எப்படி.. டாக்டர் பரூக் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்திரேலியாவில் வடதுருவத்தில் மெலனோமா எனும் தோல் புற்றுநோய் ஏற்படுவது எதனால் என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் நியூசிலாந்தில் வட துருவத்திற்கு அருகில் இருக்கும் ஸ்காண்டிநேவியன் நாடுகளில் மெலனோமா எனும் தோல் புற்றுநோய் தாக்கம் அதிகம்.
அங்குள்ள வெள்ளை நிற தோல் கொண்ட மனிதர்களுக்கு தோலில் "கருமை நிறம் தரும் நிறமி" மெலனின் குறைவாக இருக்கும்.

 Dr Farook abdulla explains about skin disease in Australia

எனவே வெயிலில் அதிகம் செல்ல வேண்டாம் என்ற அறிவுரையும் அவ்வாறு வெளியில் சென்றால் தோலை புற ஊதாக் கதிர்களிடம் இருந்து பாதுகாக்கும் களிம்புகளைப் பூசிக் கொண்டு வெளியே செல்ல அறிவுறுத்தப்படுவர். அந்த நாட்டில் வசிக்கும் கருமை நிற தோல் கொண்ட மெலனின் நிரம்பிய மக்களுக்கு வெயிலில் அலைந்தாலும் இந்த தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிக குறைவு என்று அறியப்பட்டுள்ளது.

இதை அந்த நாட்டு வெள்ளை நிறத் தோல் கொண்ட மக்கள் இவர்கள் நம்மை அச்சமூட்டுகிறார்கள்.
அச்சமூட்டுவதால் தான் இந்த நோய் வருகிறது என்று அலட்சியம் செய்து கருமை நிற தோல் கொண்டவர்கள் சுற்றுவது போல நாமும் வெளியே சுற்றினால் என்ன? என்று அவர்கள் சுற்றுவார்களானால் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு அவர்களுக்கு அதிகமாகும்.

அப்படியே நம் நாட்டுக்கு வருவோம் வீட்டுக்கு ஒருவர் இருவருக்கு நீரிழிவு, ரத்தக் கொதிப்பு இருக்கிறது.
நீரிழிவு ரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு நமது மரபணுக்களில் அதிகமாக உள்ளது. அதுவே ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் நம்மை விட நீரிழிவு ரத்தக் கொதிப்பு நேரும் விகிதங்கள் மிக மிகக் குறைவாக உள்ளன. இது அவர்களது மரபணு தரும் பாதுகாப்பு. கூடவே நம்மை விட அவர்கள் மாவுச்சத்தை அளவில் குறைவாக உண்கிறார்கள்.

இந்த நிலையில் மாவுச்சத்தையும் நேரடி இனிப்பு சுவை கொண்ட சீனியையும் சர்க்கரையையும் சுத்தீகரிக்கபட்ட தானியங்களையும் அதிகமதிகம் உட்கொள்ளும் போது நீரிழிவு ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது என்பது அறிவியல் உண்மை இது அச்சமூட்டி எச்சரிப்பதே ஆகும். எதிரே வரும் பாதசாரியிடம் அவர் செல்லும் வழியில் ஒரு பெரிய பள்ளம் உள்ளது என்று எச்சரித்தால் தான் அவர் விழாமல் எச்சரிக்கையுடன் வேறு பாதையை நாடுவார் அல்லது விழாமல் ஓரமாக நடப்பார்.

இல்லை.. அச்சமூட்டி எச்சரிப்பதால் தான் இந்த நோய்கள் அனைத்தும் வருகின்றன என்று எண்ணும் போக்கில் இருப்பது அசாதாரணமான போக்காகும். காரணம் மனிதன் இன்றளவும் இந்த பூமியில் நிலை கொண்டு இருப்பதற்கு தொடர்ந்து தனது இருப்பு குறித்த எச்சரிக்கை உணர்வும் அச்ச உணர்வுமே காரணம். நமது மூளை தொடர்ந்து சில விசயங்களை நமக்குக் கூறிக் கொண்டே இருக்கும். இதை செய், இதை செய்யாதே என்று கட்டளை இடும்.

பல நேரங்களில் நாம் கொண்டுள்ள இந்த அச்ச உணர்வும் எச்சரிக்கை உணர்வும் ஒரு தானியங்கி நுண்ணறிவு போல நம்மை வழிநடத்தும் இதற்கு "இண்ஸ்டிண்க்ட்" என்று பெயர். தமிழில் "உள்ளுணர்வு" இது. அதுவரை நாம் கற்ற ஏட்டுக் கல்வி நாம் வளர்க்கப்பட்ட போது பெற்ற அனுபவக் கல்வி / நமது பெற்றோர் முன்னோர் காலங்காலமாக வழங்கி வரும் கேட்டறிவு . இது எழுத்தில் எழுதப்பட்டு இருக்காது ஆனால் பரம்பரை பரம்பரையாக வாய்வழி செவிவழி கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்.

 Dr Farook abdulla explains about skin disease in Australia

சில தவறுகள் செய்து கற்றுக் கொண்ட பட்டறிவு இவற்றின் மொத்த சாராம்சமாக நம்மை அறியாமல் நம்மை ஒரு செயற்கை நுண்ணறிவு போல வழிநடத்திச் கொண்டிருக்கும். எனவே நான் எச்சரிக்கை இன்றி இருக்கிறேன். அச்சமின்றி இருக்கிறேன் என்று யாருமே கூற இயலாது. கூறினால் அது நார்மலும் கிடையாது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் முக்கிய உதவியே ஒருவரை ஒருவர் தவறான வழிகளில் இருந்து எச்சரிக்கை செய்வதும் அதில் சென்றால் நேரும் தீவினை குறித்து அச்சமூட்டுதுமே ஆகும். டீ காபியில் இனிப்பை நிறுத்துங்கள், மாவுச்சத்தை குறையுங்கள் , புரதச்சத்து போதுமான அளவு சாப்பிடுங்கள், மாமிசம் முட்டை உண்பதால் பிரச்சனை இல்லை.

அதிகமாக தானியங்கள் / இனிப்புகள் / தின்பண்டங்கள் உண்பதால் தான் பிரச்சனை என்று நான் கூறுவதும் , அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவேயன்றி வேறில்லை உறங்குவோரை எழுப்ப பறையோசை போதும் உறங்குவது போல நடிப்பவரை எழுப்ப இடியோசையாலும் இயலாது. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+