மட்டன் சாப்பிட்டாதான் ஹயிட் வெயிட் ஏறும்னு இல்ல! இத்தனை அயிட்டங்கள் இருக்கே! லிஸ்ட் பெருசா இருக்கே!
சென்னை: வயதுக்கேற்ற எடையும் உயரமும் இருந்தால் மட்டுமே அது சரியான வளர்ச்சி என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கிளினிக்கில் முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் பெண்மணி அவரது மகளுடன் வந்திருந்தார். இருவருமே அவரவர்க்கு தேவையான உயரமும் இல்லை எடையும் இல்லை இது போன்று உயரமும் சரியாக வளராமல் எடையும் சரியாக இல்லாமல் இருப்பதை STUNTING வளர்ச்சி முடக்கம் என்று கூறுவோம்.

தொடர்ந்து பல ஆண்டுகள் நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைக்காத நிலையில் தான் இப்படி உயரமும் உடல் எடையும் நலிந்து காணப்படும். அவரிடம் புரதச்சத்து உட்கொள்ளல் குறித்து கேட்டறிய விரும்பினேன். தாயும் மகளும் இங்கிருக்க தந்தை வெளிநாட்டில் கட்டடக் கூலி வேலை செய்து வருகிறார்.
உரையாடல் தொடங்குகிறது,
"மா.. நீங்க வாரம் ஒரு தடவயாச்சும் ஏதாச்சும் அசைவம் சாப்டுவீங்களா?"
"எப்பவாச்சும் ஒரு தடவ மீன் எடுப்போம் நண்டு எடுப்போம் சார். வாரம் ஒரு தடவனு கணக்கெல்லாம் இல்ல சார்"
"மட்டன் மா?"
"மட்டன் லாம் விலை ஜாஸ்தி சார். கிலோ 800 ரூபாய்க்கு விக்குது. அதெல்லாம் சாப்டுட்டு கொல்ல காலம் ( வெகுநாட்கள்) ஆச்சு சார்"
"அப்ப நண்டு எவ்வளவு ?"
" அது கிலோ 130 ரூபாய் சார். அதை வாங்கி வச்சு சாப்டுவோம்"
"கோழி மா?"
" எனக்கு மூலம் இருக்கு சார் அதனால ப்ராய்லர் சாப்ட மாட்டேன். நாட்டுக் கோழி எடுக்க மாட்டோம். விலை அதிகம் சார்"
"நீங்க சாப்டாட்டி என்ன மா.. உங்க மகளுக்கு கோழி வாங்கி வாரம் ஒரு தடவ நூறு கிராமாவது கொடுங்க"
" சரி சார்"
"மட்டன் மாசம் ஒரு தடவையாவது ஈரலோட சேர்த்து கால் கிலோ வாங்கி ரெண்டு பேரும் சாப்டுங்க.. தினமும் ஒரு முட்டை சாப்டுங்க"
"சரி சார் இனிமே சாப்டுறோம்"
"இப்ப மூணு வேளை என்னமா சாப்புட்றீங்க"
"மூணு வேளையும் சோறு தான் சார். காலை ஆக்கிட்டா மூணு வேளைக்கு வச்சுப்போம்"
"உங்களுக்கு புரதச்சத்து கண்டிப்பா வேணும் மா . நீங்க தினமும் முட்டை சாப்டுங்க. மட்டன் மாசம் ஒருமுறை .. கோழி வாரம் ஒரு முறை எடுத்து சாப்டுங்க.. தானா எடை போடும்.. நல்ல உயரம் வளரும் பாப்பா"
"சரிங்க சார்"
மக்களுக்கு இருக்கும் வறுமை விலை கூடுதலாக உள்ள மாமிசத்தை அவர்களை நெருங்க விடுவதில்லை. எனவே விலை மலிவான மாமிசத்தையாவது அவர்கள் வாரம் ஒருமுறையேனும் உண்பதும் நாளொரு முட்டை உண்பதும் கட்டாயத் தேவையாக இருக்கிறது.
மாமிசம் உண்ணாத மக்கள் தங்களின் புரதச்சத்துத் தேவைக்கு கடலை, முளை கட்டிய பயறு, கொட்டை வகைகள், பால் மற்றும் பால் பொருட்கள், பருப்பு / பீன்ஸ் வகைகள் , சோயா பயறு/ டோஃபு முதலியவற்றைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களின் பருவமடைதல் காலத்தை ஒட்டி உடல் வளர்ச்சி குறிப்பாக உயரம் வளர்தல் வேகமாக நிகழும். இதை பருவமடைதல் கால அதிவேக உயர வளர்ச்சி என்கிறோம். இந்த காலங்களில் சரியான அளவு புரதச்சத்து என்பது இன்றியமையாதது
ஆண்களுக்கு 14 வயது முதல் 18 வயது வரை பெண்களுக்கு 12 வயது முதல் 16 வயது வரை உயர வளர்ச்சி ஏற்படும்.
பெண்களைப் பொருத்தவரை அவர்கள் பூப்பெய்தியது தொட்டு அதிகபட்சம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு மட்டுமே உயர வளர்ச்சி இருக்கும். இத்தகைய காலங்களில் புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுக்கத் தவறிவிட்டால் வாழ்நாள் முழுவதும் உயரம் குன்றிய நிலையே ஏற்படும். புரதச்சத்து குறித்த விழிப்புணர்வை தெரிந்தவர் தெரியாதவருக்கு பரப்புங்கள் சொந்தங்களே. இவ்வாறு பரூக் அப்துல்லா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications