Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இறப்பு சான்றிதழுக்கு வந்த சிக்கல்.. டாக்டர்களும் சர்டிபிகேட் கொடுக்கக் கூடாதாமே! பரூக் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் கொடுக்கும் போது மருத்துவர்கள் சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை சிவகங்கை அரசு பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அன்பு நண்பர்கள்/சொந்தங்களின் கனிவான கவனத்திற்கு, மரணத்திற்கான காரணத்தை மருத்துவர் விவரித்து சான்றளிக்கும் FORM 4A தொடர்பான பதிவு இது. வீட்டில் ஒருவர் பிறந்தாலோ மரணமடைந்து விட்டாலோ பிறப்பையும் இறப்பையும் அரசிடம் பதிவு செய்வது கட்டாயக் கடமையாகும்.

Dr Farook Abdulla says about Form 4A which to be registrated for death cases

இதில் வீட்டில் ஏற்படும் மரணங்களை DOMICILIARY DEATHS என்றும் கடைசி காலத்தை மருத்துவமனைகளில் கழித்து மருத்துவர்கள் முன்னிலையில் ஏற்படும் மரணங்களை INSTITUTIONAL DEATHS என்றும் அழைக்கிறோம். இதில் மருத்துவமனைகளில் ஏற்படும் மரணங்களுக்கு அந்த மருத்துவமனைகளில் இறந்த நோயாளியை கவனித்துக் கொண்ட மருத்துவர்கள் / நிலைய மருத்துவர் "இறப்பு சான்றிதழை" வழங்கிவிடுவார். இதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

ஆனால் Domiciliary Deaths எனப்படும் வீட்டில் நடக்கும் மரணங்களில் தான் பல சூழ்நிலை சார்ந்த பிரச்சனைகள் உள்ளன. வீட்டில் நிகழ்ந்த மரணங்களில் தங்களது குடும்ப மருத்துவர் வந்து மரணத்தை உறுதி செய்திருந்தால் அந்த நிலையில் FORM4Aவை அவர் வழங்க முகாந்திரம் உண்டு. ஆனால் மருத்துவரின் கண்காணிப்பில் இல்லாமல் வீடுகளில் நிகழும் மரணங்களுக்கு மருத்துவர்கள் இறப்பு சான்றிதழ் வழங்குவதும் /அவர்களிடம் இருந்து இறப்பு சான்றிதழ் பெற உந்துவதும் சட்டப்படி தவறான வழிமுறைகளாகும்.

இந்த சிக்கலுக்கு அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் இதோ. தங்கள் வீடுகளில் மருத்துவரின் கண்காணிப்பில் இல்லாமல் ஒருவரின் மரணம் நிகழ்கிறதென்றால் இறந்த நபருடன் சம்பந்தப்பட்ட அவரது உறவினர்களிடம் இருந்து கைப்பட எழுத்துப்பூர்வமாக இறந்த நபருக்கு அவர் இறப்பதற்கு முன் இருந்த நோய்கள்/ கடைசி தருவாயில் அவர் சந்தித்த அறிகுறிகள் போன்றவற்றை பிறப்பு-இறப்பு பதிவாளர் கடிதமாக பெற்றுக் கொண்டு, அந்த விபரங்களை FORM 2இல் பூர்த்தி செய்து கொள்வார்.

மருத்துவர் அதுவரை பார்க்காத அல்லது மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் நிகழாத மரணங்களுக்கு FORM4A தேவையில்லை. இதை மருத்துவர்களும் அறிந்து கொண்டு தாங்கள் காணாத / தங்களது மேற்பார்வையில் நிகழாத மரணங்களுக்கு
பிறர் தரும் அழுத்தங்களினால் FORM 4A கொடுத்து விட்டு பிறகு மருத்துவம் சார்ந்த சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+