ஒலிம்பிக் போட்டியில் பாக்ஸிங்கில் வென்ற கெலிஃப் பெண்தான்! திருநம்பி கிடையாது! எப்படி தெரியுமா?
சென்னை: ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் பெண்கள் பிரிவில் தங்கம் வென்ற அல்ஜீரிய நாட்டை சேர்ந்த கெலிஃப் பெண்ணே இல்லை என்ற ஒரு சர்ச்சை கிளம்பி வரும் நிலையில் இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒலிம்பிக்கில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. ஒரு திருநம்பி (TRANSGENDER) பெண்களுக்கு நடக்குற மேட்ச்சில ஒரு பெண்ண அடிச்சு ஜெயிச்சுட்டாங்கனு வதந்தி பரப்பிட்டிருக்காங்க. பிரச்சனை இது தாங்க.

அல்ஜீரியாவைச் சேர்ந்த கெலிஃபுக்கும் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்செலா கேரினிக்கும் 66 கிலோ எடைப்பிரிவில் பாக்சிங் போட்டி நடக்குது. அதில் 46 நொடிகள்ல கெலிஃப் கேரினியை வீழ்த்திடறாங்க. போட்டிக்கு இறுதியில் இருவரும் கை கொடுத்துக் கொள்ள வேண்டும் இது தான் நடைமுறை.
ஆனால் இத்தாலி வீராங்கனை கை கொடுக்கல காரணமா அவுங்க நினைக்கிறது , கெலிஃப் ஒரு பெண்ணே கிடையாது. அவுங்க ஒரு ஆண் அல்லது திருநம்பி ( TRANSGENDER). அவுங்கள பெண்கள் கூட விளையாட அனுமதிக்கறதே தப்பு என்கிற ரீதியில் இந்த எதிர்ப்ப காட்டியிருக்காங்க...
இந்த விசயத்தில் உண்மை என்ன? வாங்க பார்ப்போம். அல்ஜீரிய வீராங்கனை கெலிஃப் உடலாலும் பாலின வெளிப்பாட்டாலும் ஒரு பெண் என்பதை முதலில் பதிவு செய்கிறேன்.ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் பிறப்புறுப்பை வைத்து அதற்கு பாலினம் வகுக்கப்படும் இதை GENDER ASSIGNED AT BIRTH பிறப்பால் வழங்கப்படும் பாலினம் என்று கூறுகிறோம்.
இந்த வகையில் கெலிஃப் பிறப்பால் பெண் பாலினம் என்று வழங்கப்பட்டவர். காரணம் அவருக்கு
பெண்ணின் இனப்பெருக்க உறுப்பான வெஜைனா இருந்திருக்கிறது. அடுத்து தன்னை ஆண் என்று எங்கும் அவர் கூறிக் கொண்டதில்லை. இதை பாலின அடையாளப்படுத்துதல் ( GENDER IDENTITY) என்று கூறுகிறோம். அதாவது பெண்ணாகப் பிறந்த அவர் தன்னை பெண்ணாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
இதை சிஸ் ஜென்டர்(cis-gender) என்று கூறுகிறோம். அவர் ஒரு பெண் எனும் போது ஏன் தேவையற்ற சர்ச்சை எழ வேண்டும்? இதற்கு காரணம் அவரது ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான டெஸ்டோஸ்டிரோன் தான். 2023ஆம் ஆண்டு உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில்
இவரது மிதமிஞ்சிய டெஸ்டோஸ்டிரோன் அளவுகளால் விளையாட தடை பெற்றார்.
ஆயினும் தற்போது ஒலிம்பிக்கிற்கு முன்பு நடந்த பரிசோதனைகளில் ஒலிம்பிக் கமிட்டி அனுமதித்த அளவுகளை விட குறைவாக டெஸ்டோஸ்டிரோன் இருந்ததால் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு பெண்களுக்கு ஆண்மைக்கான ஹார்மோனான "டெஸ்டோஸ்டிரோன்" அதிகமாக இருப்பதை "ஹைப்பர் ஆண்ட்ரோஜெனிசம்" HYPER ANDROGENISM என்கிறோம்.
இத்தகைய நிலை பெண்களுக்கு பிசிஓடி போன்ற ஹார்மோன் குளறுபடிகளால் ஏற்படுகிறது , அல்லது
அரிதினும் அரிதான மரபணுக் கோளாறுகளால் ஏற்படலாம். இந்த அல்ஜீரியா வீராங்கனைக்கும் அரிதினும் அரிதான ஸ்வேயர்ஸ் சிண்ட்ரோம் எனும் மரபணுக் கோளாறு இருக்கலாம். இதன் விளைவாக இரண்டு எக்ஸ் க்ரோமோசோம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு எக்ஸ் ஒரு ஒய் குரோமோசோம்கள் இருக்கின்றன.
எனினும் இவரை ஆண் என்று கூற இயலாது. காரணம் இவர் பிறக்கும் போது வகுக்கப்பட்ட பாலினம் பெண்.
வளரும் போதும் தற்போதும் தன்னை பெண்ணாகவே வெளிப்படுத்திக் கொள்கிறார். எனினும் இத்தகைய அரிதினும் அரிதான மரபணுக் கோளாறில் பெண்மைக்கான ஹார்மோனை சுரக்கும் கருப்பை( ஓவரி) சரியாக உருவாகி இருக்காது.
எனவே பூப்பெய்துவதோ மாதவிடாய் ஏற்படுவதோ இருக்காது. அது தான் பூப்பெய்துதலோ, மாதவிடாயோ ஏற்படவில்லையே... அப்பறம் எப்படி இவர் பெண்ணானார்? என்று கேள்வி வருகிறது தானே... இப்போது இதே மாதிரி பிரச்சனை ஆண்களுக்கும் ஏற்படும். இதை ஆண்மைக்குறைவான நிலை ( HYPOANDROGENISM)என்கிறோம்.
இந்த நிலையில் ஆண் குறி இருக்கும் . இதனால் ஆண் என்று பிறக்கும் போது வகுக்கப்படுவார். ஆனாலும் விதைப்பைகள் வளராது. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் போதுமான அளவு இருக்காது. ஆனாலும் அவர்கள் ஆண்கள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள்.
அவர்களும் தங்களை ஆண்கள் என்றே வெளிக்காட்டுவார்கள்.
இவர்களை பெண்கள் என்றோ திருநங்கைகள் என்றோ கூறுவது மருத்துவ ரீதியாக தவறு. அதே போன்று தான் பிறப்பால் பெண்ணை அவருக்கு இருக்கும் ஹார்மோன் பிரச்சனைக்காக ஆண் என்றோ திருநம்பி என்றோ கூறுவது தவறு. ஒலிம்பிக் கமிட்டியின் தற்கால விதிப்படி டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் பரிசோதிக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட அளவுக்கு மேலே டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் கூடினால் தடை விதிக்கப்படுகிறது.
அதுவே அனுமதிக்கப்பட்ட அளவிற்கு குறைவாக டெஸ்டோஸ்டிரோன் இருப்பின் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த விதிகளைக் கொண்டு கூர்நோக்கும் போது அரிதினும் அரிதான மரபணுக் குறைபாடுகளை காரணம் காட்டி ஒருவரை பெண் அல்ல ஆண் என்று கூறுவது மருத்துவ ரீதியாக தவறு.
சரிக்கு சமமான உடல் எடை (66 கிலோ) கொண்ட இரு வீராங்கனைகள் மோதிக் கொண்ட போட்டியில் அல்ஜீரிய வீராங்கனை வென்றுள்ளார். இது குறித்து அவதூறு பரப்புவதும் தவறு. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications