ORS திரவத்தை இப்படியா குடிக்கிறீங்க? அது தப்பு! கலர் கலர் டப்பாவை வாங்கலாமா? டாக்டர் பரூக் அட்வைஸ்
சென்னை: ஓஆர்எஸ் எனும் வாய்வழியே உட்கொள்ளும் நீர்ச்சத்தை ஈடேற்றும் உப்பு கரைசல் திரவத்தை எப்படி குடிக்க வேண்டும் என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நம் வீடுகளில் யாருக்கேனும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஓ.ஆர்.எஸ் ( ORAL REHYDRATION SALT) எனும் வாய்வழி உட்கொள்ளும் நீர்ச்சத்து ஈடேற்றும் உப்புக் கரைசல் திரவமாகும்.
நாம் இதை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள். 20.5 - 21 கிராம் பாக்கெட் வாங்கி அதை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரே நேரத்தில் கலந்து அந்தக் பொடி கரைக்கப்பட்ட நீரை பருகி வர வேண்டும். பலரும் தவறாக செய்வது யாதெனில் சிறிது பொடியை ஒரு டம்பளர் தண்ணீரில் கலக்கி அவ்வப்போது குடித்து வருகின்றனர். இது தவறான வழிமுறையாகும்.

பாக்கெட்டில் கொடுக்கப்பட்ட 21 கிராம் பொடியையும் ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் நீரில் கலந்து வைத்துக் கொண்டு சிறுகச் சிறுக வயிற்றுப் போக்குக்கு ஏற்றவாறு பருகி வருவதே சரியான வழிமுறையாகும். இதற்கடுத்த படியாக இந்த ஓ ஆர் எஸ் பொடியில் சிறிய 4 கிராம் பாக்கெட்டுகள் விலைக்கு விற்கின்றன. இவற்றை வாங்கும் போது அதை 200 மில்லி நீரில் கலந்து பருக வேண்டும் .
அப்போது தான் சரியான கலவை கிடைக்கும். அதைவிடுத்து 4 கிராம் பாக்கெட்டை ஒரு லிட்டர் நீரில் கலந்து சிலர் பருகுகின்றனர். இதுவும் தவறான வழிமுறையாகும். நீங்கள் ஓ ஆர் எஸ் பொடி வாங்கும் போது அதில் WHO RECOMMENDED FORMULA எனும் சொற்கள் இருக்கிறதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். உலக சுகாதார நிறுவனம் வயிற்றுப் போக்கின் போதும் நீரிழிப்பின் போதும் அதை ஈடுசெய்யும் விதமாகவும் தாது உப்புகள் சரியான விகிதத்தில் இருக்குமாறு பார்முலா வகுத்துள்ளனர்.
அதற்குட்பட்டு தயாரிக்கப்படும் ஓ. ஆர்.எஸ் மட்டுமே நீரிழிப்பை சரி செய்ய உதவும். அதை விடுத்து தற்போது குழந்தைகள் முதல் முதியோர் வரை வயிற்றுப் போக்கு மற்றும் நீரிழப்பிற்கு ஓ ஆர் எஸ் அல்லாத ஆனால் செவ்வக டப்பாவில் அடைக்கப்பட்ட பழங்களின் சுவைகளில் கிடைக்கும் சாறுகளை வாங்கி குடிக்கின்றனர்.
அவை மெய்யான ஓ.ஆர்.எஸ் திரவங்கள் அன்று. அவற்றில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் பார்முலாவில் தாது உப்புகள் இருக்காது. அவை இனிப்பு சுவை கொண்ட உடனடி எனர்ஜி தரும் செயற்கை பானங்கள் அவ்வளவே. அவற்றால் நீரிழப்பும் தாது உப்புகளின் இழப்பும் ஏற்படும் வயிற்றுப் போக்கு போன்ற சூழ்நிலைகளில் பாதகங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வாந்தி போன்ற நீரிழப்பு ஏற்படும் போது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த ஓ ஆர் எஸ் ( 20 கிராம்) பாக்கெட் வாங்கி ( அதில் ஆரஞ்சு போன்ற ஃப்ளேவர் இருக்கலாம்) அதை ஒரு லிட்டர் நீரில் கரைத்து கொடுத்து வருவதே சரியானது.
வயிற்றுப் போக்குடன் குடல் பகுதி தொற்று இருக்கும் போது ஓ.ஆர்.எஸ் அன்றி தேவையற்ற இனிப்பு சுவை கொண்ட சாறுகள், செயற்கை நிறமிகள்+ சுவை கூட்டிகள் நிரம்பிய பானங்களை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். முறையான ஓஆர்எஸ் மூலம் நீரிழப்பை சரி செய்வோம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications