Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீகன் டயட்ல இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க.. இன்ஸ்டா பிரபலம் பலியானது ஏன்? டாக்டர் பரூக் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஷ்யாவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஸன்னா ஸம்சுனோவா ரா வீகன் உணவு முறையால் இறந்தது எப்படி என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்லூயன்சர் ஸன்னா ஸம்சுனோவா தனது 39 வயதில் இறந்திருப்பது இணைய உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர் கடந்த பத்து வருடங்களாக "ரா வீகன்" உணவு முறையில் இருந்து வந்துள்ளார்.

Dr Farook Abdulla says about Raw Vegan food

வீகன் என்பது முழுக்க முழுக்க செடிகள் மரக்கறி பழங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட உணவு முறை. இந்த உணவு முறையில் பால் மற்றும் பால் பொருட்கள் கூட தவிர்க்கப்படும். அதிலும் "ரா வீகன்" என்பதில் உணவை சமைக்காமல் பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை பச்சையாக உண்ணும் உணவு முறையாகும். சகோதரி ஸன்னா அவர்கள் இந்த ரா வீகன் உணவு முறையை தான் பின்பற்றியதுடன் பலருக்கும் எடுத்துரைத்து வந்துள்ளது தெரிகிறது.

கடந்த சில வருடங்களாக பலாபழத்தையும் துரியன் பழத்தையும் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இந்த உணவு முறையில் தனது பக்கத்தில் தான் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் இருப்பதாக குறிப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் உடல் சிறிது சிறிதாக மெலிந்து எலும்பும் தோலுமாக காட்சியளிக்கத் துவங்கியிருக்கிறார். சமீபத்தில் இலங்கையில் இவரை சந்தித்து நண்பர்கள்
இவர் பார்க்க ரொம்பவே மெலிந்து போய் இருந்ததும் கால்கள் வயிறு போன்ற இடங்கள் நீர் சுரந்து வீங்கிப் போய் இருந்ததையும் பார்த்து முறையான சிகிச்சை எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளனர். ஆயினும் அவர் செவிமடுக்கவில்லை.

அவரது இறப்பிற்கு "காலரா போன்ற கடுமையான வயிற்றுப் போக்கு" காரணமாக இருக்கலாம் என்று அவரது தாய் தெரிவித்திருக்கிறார். நாம் உண்ணும் உணவில் புரதச்சத்து மிகவும் இன்றியமையாதது. அதற்கடுத்த நிலையில் உடலுக்கு இன்றியமையாத தேவை - கொழுப்பாகும். அதற்கடுத்த நிலையில் மாவுச்சத்து இருக்கிறது. இவற்றுடன் கால்சியம், விட்டமின் பி12, விட்டமின் டி , மெக்னீசியம் போன்ற நுண் சத்துகளும் அவசியம்.

வீகன் போன்ற உணவு முறைகளில் புரதச்சத்து மற்றும் பி12 , கால்சியம் போன்ற சத்துகள் தேவையான அளவு இருப்பதில்லை. இதனால் நாளடைவில் "தீவிர புரதச்சத்து குறைபாட்டு நிலை" ஏற்படுகிறது. இதனால் பசியின்மை , சோர்வு , எதிலும் நாட்டமின்மை, உடல் மெலிந்து எலும்பும் தோலுமாகக் காணப்படுதல், வயிறு மற்றும் கால்களில் நீர் சேர்ந்து வீக்கமாக இருத்தல், தொடர்ந்து உணவு உண்ணாமையால் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

Dr Farook Abdulla says about Raw Vegan food

எனவே தங்களின் உணவில் புரதச்சத்து ( பால் மற்றும் பால் பொருட்கள் வழியாகவாவது முறையாகக் கிடைக்க வேண்டும்) கட்டாயம் தேவை என்பதை உணர வேண்டும். புரதச்சத்து தரும் உணவுகள்,
- முட்டை ( நாட்டுக் கோழி & லேயர்),
- மாமிசம் ( கால்நடைகள்)
- கோழி ( ப்ராய்லர் & நாட்டுக் கோழி)
- மீன்
- பால் மற்றும் பால் பொருட்கள் ( பனீர் , பால், தயிர் , மோர், வெண்ணெய், நெய்)
- பயறு
- கடலை
- பருப்பு
- நட்ஸ்
போன்றவை உணவில் உட்கொள்ள வேண்டும். செடி கொடிகள் மரக்கறி உணவுகளோடு கட்டாயம். பால் மற்றும் பால் பொருட்களையாவது வெஜிட்டேரியன்கள் உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து புரதச்சத்து கொழுப்புச்சத்து குறைபாடுள்ள உணவு முறையில் இருந்தால் பல உடல்நலம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படக் கூடும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+