உட்காரும் இடத்தில் ஷாக் அடிச்ச மாதிரி கடும் வலியா? அப்ப அந்த நரம்பு பாதிச்சிடுச்சினு அர்த்தம்!
சென்னை: பிட்டப் பகுதியில் கடுமையான வலி இருக்கிறதா? அப்படி ஏன் இருக்கிறது தெரியுமா?
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கிளினிக்கில் நீரிழிவிற்காக என்னை சந்திக்கும் இளைஞர் ஒருவருக்கு கடந்த இரு வாரங்களாக வலது பிட்டம் (BUTTOCKS) பகுதியில் இருந்து பின் தொடைப் பகுதி வரை அவ்வப்போது கவ்விப் பிடிப்பது போன்ற வலி இருப்பதாகக் கூறினார்.

அவரிடம் நோயின் வரலாறு குறித்து கேட்கப்பட்டதில் அவர் தினமும் இரண்டு மணிநேரம் பேருந்துப் பயணம் செல்பவர் என்பதை அறிய முடிந்தது. கூடவே பணப்பையை (பர்ஸ்) கால்சட்டையின் பின் பையில் வைக்கும் பழக்கம் இருப்பது தெரிந்தது. "பர்ஸ் ஃபுல்லா இருக்குமா.. ஹெவியா பொடச்சுக்குட்டு இருக்குமா " "ஆமா சார் .. பர்ஸ் பெருசா வச்சுருந்தேன்.."
"பின் பாக்கெட்ல வச்சுட்டு ரொம்ப நேரம் உட்காந்து இருக்கும் போது இந்த பர்ஸ் - பைரிஃபார்மிஸ்ங்குற தசை மேல அழுத்தம் கொடுக்கும் - அந்த தசை , இடுப்பு மற்றும் பிட்டத்தில் இருந்து காலுக்குச் செல்லும் சயாடிக் நரம்பை அழுத்தும். இதனால "சயாடிக் நரம்பு" காயத்துக்கு உள்ளாகும். இதை "சயாடிக்கா" (SCIATICA) னு சொல்லுவோம். பிட்டம் மற்றும் பின்னங்கால் தொடைப்பகுதியில் வலி, மரமரப்பு, எரிச்சல், மின்சாரம் பாயுறது மாதிரி சுண்டி இழுக்குறது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இதை "குண்டான பணப்பை சிண்ட்ரோம்"( FAT WALLET SYNDROME) னு சொல்றோம்.
இனிமே
- பின்னாடி பேண்ட் பாக்கெட்ல பர்ஸ் வைக்காதீங்க
- அப்படியே வைச்சாலும் உட்காரும் போது முன்னாடி பேண்ட் பாக்கெட்டுக்கு கொண்டு வந்துடுங்க
- பர்ஸ்ல இருக்குற தேவையில்லாத அட்டைகளை எடுத்துட்டு ஸ்லிம் ஆக்குங்க
ஒருவேளை இந்த ஃபேட் வாலட் சிண்ட்ரோம் இருக்குறது தெரிஞ்சா எலும்பு நோய் சிறப்பு மருத்துவரை அணுகவும். இதற்குண்டான வேறு காரணங்களினால் வலி இல்லை என்பதை உறுதி செய்து விட்டு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவார்.
கூடவே கண்டிப்பாக பிசியோதெரபி எனும் இயன்முறை மருத்துவம் செய்து விரைவில் மீண்டு வர முடியும்.
பர்ஸ் குண்டாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பின் பக்க பேண்ட் பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் அமரக்கூடாது, ஃபேட் வாலட் சிண்ட்ரோம் கவனம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications