பெண்களுக்கு முகத்தில் தாடியும் மீசையும் ஏன் முளைக்கிறது? இதை சரி செய்வது எப்படி தெரியுமா?
சென்னை: பெண்களுக்கு முகத்தில் தாடியும் மீசையும் வருவது ஏன் தெரியுமா? அவ்வாறு வந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும். அவர்களது உடல்நிலையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: கிளினிக்கில் ஒரு தம்பதியைச் சந்தித்தேன். இல்லற வாழ்க்கையில் இணைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் கருவுற இயலாமையே தம்பதியரின் பிரச்சனை. விரைவில் கருவுற வேண்டும் என்ற ஏக்கம். உண்மையில் இது ஏக்கம் மட்டுமல்ல. சமூகம் தரும் புற அழுத்தத்தினால் உருவான பதட்டமும் சேர்ந்த உணர்வு.

அதற்கு குறை மாவு உணவு முறை உதவும் என்று அவர்களது உறவினர் கூற , என்னை சந்திக்க வந்தனர். திருமணமாகி ஒருவருடம் ஆகியும் இருவரும் ஓரிடத்தில் வசித்து தொடர்ந்து இணை சேர்ந்தும் இயற்கையாக கருவுறுதல் நிகழாமல் போவதை "ஆரம்ப நிலை கருவுற இயலாமை" என்கிறோம். கருவுற பெண்ணிடம் இருந்து கருமுட்டை ஆணிடம் இருந்து விந்தணு தேவை.
பெண்ணிற்கு போதுமான அளவு கருமுட்டைகள் இருக்க வேண்டும். மாதம் ஒருமுறை ஒரு வளர்ந்த கருமுட்டை உடைந்து வெளியேற வேண்டும். வெளியேறிய கருமுட்டை கர்ப்பபைக்கு எந்தத் தடையும் இன்றி வந்து சேர வேண்டும். இவையனைத்துக்கும் உதவும் வகையில் ஹார்மோன்களின் சுரப்பு இருக்க வேண்டும்.
ஆணைப் பொருத்தவரை விதைப்பையில் விந்தணுக்கள் போதுமான அளவில் , விந்து அதன் அங்கங்கள் சரியானதாகவும் முன்னோக்கி முன்னேறிச் செல்லும் வகையிலும் உற்பத்தி இருக்க வேண்டும். விந்தணு வரும் வழியில் அடைப்பு இருக்கக்கூடாது. இணை சேரும் போது ஏற்படும். விரைப்புத் தன்மை சார்ந்த பிரச்சனைகள் இருக்கக்கூடாது. இவற்றை அனைத்தையும் ஆராயும் வண்ணம் பரிசோதனைகள் செய்ததில் பெண்ணுக்கு மாதவிடாய் சீராக இல்லை என்பதை அறிந்தேன்.
எப்போதும் மாதத்திற்கு ஒரு முறை வரவில்லை. ( கருப்பையில் இருந்து முட்டை வளருவதில்/ வெளியேறுவதில் ஹார்மோன் கோளாறு) கூடவே பெண்ணின் முகத்தில் மீசை ரோமங்கள் இருந்தன. ( இது ஆண் ஹார்மோன் அதிகமாக இருக்கும் நிலை)
ஆணைப் பொருத்தவரை எல்லாம் நார்மலாக இருந்தது.
பெண்ணின் ஸ்கேனில் கருப்பையில் நீர்க்கட்டிகள் இல்லை. அவரது எடை 50 கிலோ தான். பார்ப்பதற்கு சற்று மெலிதான உருவம். அவருக்கு " பிசிஓடி"இருப்பதாகக் கூறினேன். சகோதரி என்னிடம் கேட்டார் " சார். எனக்கு ஸ்கேன்ல ஓவரி நல்லா தானே சார் இருக்கு. அப்பறம் எப்டி சார் பாலிசிஸ்டிக் ஓவரி டிசீஸ்னு சொல்றீங்க" நான் அவருக்கு விளக்கினேன்.
- ஹைப்பர் ஆண்ட்ரோஜெனிசம்
( ஆண் ஹார்மோன் அதிகமாக இருப்பது - முகத்தில் மீசை தாடி வளர்ச்சி இருக்கும் - ஹிர்சுடிசம் என்கிறோம்)
- கருமுட்டை வளர்ச்சி/வெளியேறுதல் கோளாறு ( இது மாதவிடாய் காலத்தில் நிகழ வேண்டிய ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களில் வரும் கோளாறு)
- ஸ்கேனில் பாலி சிஸ்டிக் ( நீர்க்கட்டிகள்) தென்படுவது ( ஒரே நேரத்தில் பல கருமுட்டைகள் போதுமான வளர்ச்சி அடையாமல் இருக்கும் போது மாலை போல நீர்க்கட்டி தோற்றமளிக்கும்) மேற்சொன்ன மூன்று விஷயங்களும் வெளிப்படும் விதத்தை வைத்து
பிசிஓடி, பெண்களுக்கு நான்கு வகையில் வெளிப்படுகிறது.
ஏ டைப் - முற்றிய பிசிஓடி - இவர்கள் உடல் பருமனாக இருப்பார்கள். இவர்களுக்கு மேலே சொன்ன மூன்று பிரச்சனைகளும் ஒருங்கே இருக்கும் இந்த வகை தான் பெரும்பான்மையினருக்கு ஏற்படும் பிரச்சனையாக உள்ளது.
பி டைப் - ஸ்கேனில் நீர்க்கட்டி இல்லாத பிசிஓடி - இவர்களுக்கு ஆண் ஹார்மோன் அதிகமிருக்கும் அதனால் மீசை, தாடி, பருக்கள், தலைமுடி லேசாகுதல் இதனுடன் கூடவே மாதவிடாய் சுழற்சிக் கோளாறு இருக்கும்.
சி டைப் - மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும் பிசிஓடி - இவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி நார்மலாக இருக்கும். ஆனால் ஆண் ஹார்மோன் அதிகமாகி ஹிர்சுடிசம், கூடவே ஸ்கேனில் நீர்க்கட்டி இருக்கும்.
டி டைப் - இவர்களுக்கு பீரியட்ஸ் நார்மலாக இருக்காது. ஸ்கேனில் பிசிஓ இருக்கும். ஆனால் முகத்தில் பரு/ தாடி/ மீசை இருக்காது. இவர்கள் ஒல்லியான உடல் வாகுடன் இருப்பார்கள். அதனால் இந்த வகையை லீன் பிசிஓடி என்று அழைக்கிறோம். இப்போது அந்த சகோதரியிடம் கூறினேன்.
"மா... உங்களுக்கு பி டைப் பிசிஓடி இருக்கிறது. அதனால் தான் முகத்தில் ரோமங்களும் பருவும் கூடவே பீரியட்ஸ் பிரச்சனையும் இருக்கிறது" "சரி செய்ய முடியுங்களா?" "முயற்சி செய்வோம்.. நீங்க உங்க லேடி டாக்டர் பார்த்தீங்களா?" "ஆறு மாசம் உண்டாகலன்னு உடனே போய் பார்த்தோம் சார். இன்னும் கொஞ்சம் வெய்ட் பண்ணலாம்னு சொன்னாங்க"
"அவுங்க சரியாதான் சொல்லிருக்காங்க.. இப்போ ஒரு வருசம் ஆகுது. திரும்ப அவுங்களையும் பாருங்க. நான் உங்களுக்கான உணவு முறை பரிந்துரை மட்டும் தரேன்" "சார்.. நான் ஏற்கனவே 50 கிலோ தான் இருக்கேன் . பேலியோல எடை குறையும்னு சொன்னாங்களே சார்" "ஆமாம்மா நீங்க இருக்குறது நார்மல் வெய்ட்னு நீங்க தான் நினைச்சுட்டு இருக்கீங்க ஆனா உங்க உடம்பு நினைக்கலையே"
"அப்ப வெய்ட் இன்னும் குறைக்கணுங்களா?" "ஆமாம் மா" "எத்தனை கிலோ சார்?" "அதை நம்ம முடிவு பண்ண முடியாது. உங்க ஹிஸ்டரி தான் முடிவு பண்ணும். உங்களுக்கு இப்போ பீரியட்ஸ் ரெகுலரா இல்ல. ஆனா இதுக்கு முன்னாடி நார்மலா இருந்துருக்கும்ல அது எப்போ?" "கல்யாணமானதுக்கு அப்பறம் தான் சார் இந்த பிரச்சனை.. ஒரு வருசமா.." "சரி அப்போ கல்யாணத்துக்கு முன்னாடி உங்க எடை எவ்வளவு?"
"43 கிலோ தான் சார் இருப்பேன். ஒல்லியா எலும்பா .. தயவு செஞ்சு அந்த வெய்ட்டுக்கு போகணும்னு சொல்லிராதீங்க .. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த வெய்ட்டுக்கு வந்துருக்கேன்" "நீங்க விரும்பி எடை கூடிருக்கீங்க. ஆனா அதை உங்க உடம்பு ஏத்துக்கல மா.. நீங்க மீண்டும் 43 கிலோவுக்கு போகணும்." மூன்று மாதங்கள் முன்பு இந்த நிகழ்வு நடந்து அவருக்கான குறை மாவு உணவுப் பரிந்துரை
கூட தினமும் உடல் பயிற்சி செய்யக் கூறினேன்.
அவரும் எடை குறைப்பதில் அதிகநாட்டமில்லாமல் அதே சமயம் கருவுற்றாக வேண்டும் என்ற அழுத்தத்தில் சிறப்பாக உணவு முறையைக் கடைபிடித்தார். குறை மாவு உணவு முறை மூலம் அவரது அடிப்படை சிக்கலான "இன்சுலின் எதிர்ப்பு நிலை" ( இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்) கட்டுக்குள் வரவே அவருக்கு இருந்த ஹார்மோன் கோளாறுகள் குறைந்தது. மீண்டும் நான்காவது மாதம் தான் கருவுற்றிருப்பதாகவும்
இனியும் உணவு முறை உடல் பயிற்சியைத் தொடர வேண்டுமா?
அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கும் பொருட்டு என்னை ரிவியூ செய்தார். உணவு முறை + உடல் பயிற்சியை கருவுற்றிருக்கும் காலம் முழுவதும் தேவைக்கேற்ப மாற்றங்களுடன் தொடரத் தான் வேண்டும். இனி கட்டாயம் மகப்பேறு மருத்துவரின் அறிவுரை மற்றும் பரிந்தைரையை ஏற்று நடக்க வேண்டும் என்று கூறி "பிசிஓடியில் பேலியோ குறைந்த எடை கொண்ட பெண்களிலும் சிறப்பாக வேலை செய்கிறது" எனும் செய்தியை எனது சக மருத்துவ சகோதரிக்கு கொண்டு செல்லும் விதமாக அவரது மகப்பேறு மருத்துவருக்கு மகிழ்ச்சியாக ரெஃபரல் கடிதம் எழுதினேன்.
பிசிஓடியில் குறை மாவு உணவு முறை அறிவியல் பூர்வமாக ஹார்மோன் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துகிறது. நிலைமையைச் சீர் செய்கிறது எனும் செய்தியை மற்றொரு முறை அறிவிக்கவே இந்தப் பதிவையும் எழுதுகிறேன். இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications