என்னாது காபி குடித்தால் ஃபேட்டி லிவர் சரியாகுமா? என்ன டாக்டர் சொல்றீங்க? அதுவும் தினமும் 3 கப்பா?
சென்னை: இன்று பெரும்பாலானோருக்கு ஃபேட்டி லிவர் பிரச்சினை இருக்கிறது. இதை சரி செய்ய பல மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இது நாளடைவில் கல்லீரலை செயலிழக்க வைக்கும் என்பதால் இந்த ஃபேட்டி லிவர் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஃபேட்டி லிவர் என்பது கல்லீரலில் அதிகமான கொழுப்பு தேங்குவதுதான். அமிலத்தன்மையை கூட செரிமானம் செய்யும் ஒரு உறுப்பு ஆகும். முன்பெல்லாம் மது அருந்துவோருக்குத்தான் இந்த ஃபேட்டி லிவர் வரும். ஆனால் தற்போது உடல் பருமன், வாழ்வியல் மாற்றம் உள்ளிட்டவைகளால் மது குடிக்காதவர்களுக்குக் கூட ஃபேட்டி லிவர் பிரச்சினை ஏற்படுகிறது.

ஃபேட்டி லிவர் பிரச்சினை லிவர் செர்ஹோசிஸாக மாறிவிட்டால் அதை குணப்படுத்துவே முடியாது. எனவே அதற்கான அறிகுறிகளை ஒருவர் கட்டாயமாக தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அடி வயிறு வீங்கி இருத்தல். கால்கள், கணுக்கால் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். நோய் தீவிரமடைந்தால் பாதத்திலும் வீக்கம் ஏற்படும். கைகளும் வீக்கத்துடன் காணப்படும். பெண்களுக்கு மார்பக திசுக்கள் பெரிதாக தெரியும். இதனால் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் போதல் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இதுகுறித்து டாக்டர் ஐசக் அப்பாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த காபியை குடித்தால் ஃபேட்டி லிவர் பிரச்சினை தீரும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? காபியில் இருக்கும் CAFFIENE உள்ளிட்ட மற்ற பொருட்கள் இயற்கையாகவே லிவர் பைப்ராஸிஸ் வளர்ச்சியை கட்டுப்படுத்தி ஃபேட்டி லிவரை குறைக்கிறது.

காபி பவுடர், அதாவது இன்ஸ்டன்ட் பவுடரை பயன்படுத்தாமல் காபி கொட்டையில் அரைத்த பவுடரை பயன்படுத்த வேண்டும். இதை தினமும் 2 முதல் 3 கப்புகளில் அருந்தி வந்தால் நன்மை கிடைக்கும். ஆனால் ஒரு கண்டிஷன், காபியில் பால் சேர்க்கக் கூடாது.
அது போல் உடல் பருமன் உள்ளவர்கள் அதிக எடையை குறைக்கும் போது கல்லீரலில் சேர்ந்திருக்கும் கொழுப்பும் குறைந்து இந்த நிலை சரியாகும். எனினும் தசைகளுக்கு உடற்பயிற்சி புரிந்து தசைகளை பலப்படுத்துவது இந்த ஃபேட்டி லிவர் பிரச்சினைக்கு முக்கியமானதாகும்.
ஏனென்றால் உடல் பருமன் உள்ளவர்களுக்கு மட்டுமில்லை. மெலிந்த தேகத்துடன் போதிய தசைகள் இல்லாமல் இருப்போருக்கும் இந்த ஃபேட்டி லிவர் பிரச்சினை ஏற்படுகிறது. நொறுக்குத் தீனிகள், நூடுல்ஸ், பாஸ்தா, இனிப்பு உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம்களை தவிர்த்து நல்ல காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் கட்டாயமானதாகும். மது, சிகரெட்டை கனவிலும் நினைக்கவே கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications