கன்னிச்சவ்வு கிழிவதற்கு உடலுறவு மட்டுமே காரணமா.. பிறப்புறுப்பு தளர்வாவது ஏன்? டாக்டர் விளக்கம்
சென்னை: பெண்களுக்கு கன்னிச்சவ்வு கிழிதலும் பிறப்புறுப்பு இறுக்கம் இல்லாமல் இருப்பதற்கும் உடலுறவுதான் காரணமா என்பது குறித்து டாக்டர் பிரசாந்த் அருண் விளக்கியுள்ளார்.
கன்னிச்சவ்வு என்பது பெண்களின் பிறப்புறுப்பு வாயின் அருகே இருக்கிறது. இது ஒரு மூடிய சவ்வாகும். இது இழை போன்று இருக்கும். இது முழுமையும் மூடாமல் இருக்கும். இதனால் கன்னி பெண்களுக்கும் மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு வெளியேறும்.
இந்த சவ்வின் பயன்கள் குறித்து இன்னும் பலருக்கு தவறான புரிதல்களே உள்ளன. பொதுவாக உடலுறவின்போது இந்த சவ்வு கிழியும் என்றும் உடலுறவு கொள்ளாத கன்னிப்பெண்களுக்கு இந்த சவ்வு கிழியாமல் இருக்கும் என்றும் கருதுகிறார்கள்.

மேலும் பல ஆண்கள் முதலிரவின் போது பெண்களின் கன்னித்தன்மையை சோதிக்கிறேன் என்ற பெயரில் இந்த சவ்வு கிழிந்திருக்கிறதா இல்லையா என்பதை பார்க்கிறார்கள். இது கிழிந்திருந்தால் அந்த பெண்ணுடன் வாழாமல் விவாகரத்து வரை போய் அந்த பெண்ணுக்கு களங்கம் கற்பித்து அவரது வாழ்வையே நாசம் செய்கிறார்கள்.
ஆனால் மருத்துவ ரீதியாக இது தவறான கருத்தாகும். ஒரு பெண்ணின் சவ்வு அவர் விளையாட்டு வீராங்கனையாக இருந்தாலும் அவருக்கு கன்னிச்சவ்வு என்பது கிழியும். அது போல் சிலருக்கு பிறக்கும் போதிலிருந்தே அந்த சவ்வு இல்லாமல் கூட இருக்கும். இதை வைத்து தவறான முடிவுக்கு வரக் கூடாது என்பதுதான் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.
இதுகுறித்து டாக்டர் பிரசாந்த் அருண் கூறுகையில் பிறப்புறுப்பில் லூசாக உள்ளதை இறுக்கமாக மாற்ற முடியுமா என்றும் கிழிந்த கன்னிச்சவ்வை சரி செய்ய முடியுமா என்றும் நிறைய பெண்கள் கேட்கிறார்கள். இதுகுறித்து டாக்டர் மதுவிடம் கேட்கலாம் என்றார். இதுகுறித்து டாக்டர் மது கூறுகையில் கிழிந்த கன்னிச்சவ்வை மீண்டும் Hymenoplasty என்ற சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.

கன்னிச்சவ்வு கிழிவது உடலுறவால் மட்டுமில்லை. உடற்பயிற்சி, நடனமாடுதல், சைக்கிளில் செல்லுதல், மாதவிடாய் காலத்தில் நாப்கினுக்கு பதிலாக கப்புகளை வைத்தல், சுய இன்பம் உள்ளிட்டவையின் போது அந்த சவ்வு கிழிகிறது. இது போல் பிறப்புறுப்பில் திசுக்கள் லூசாக இருந்தால் உடலுறவினால் என எண்ணக் கூடாது. அதற்கும் menstrual cup வைப்பது, குழந்தை பிறத்தல் போன்றவைகளால் லூசாகும்.
பிறகு நாளாக நாளாக இறுக்கமடையும். பெண்ணுக்கு எப்போது எலாஸ்டிக் தன்மை குறைகிறதோ அப்போது பிறப்புறுப்பில் இறுக்கம் இல்லாமல் போய்விடும். இவ்வாறு மது தெரிவித்ததாக டாக்டர் பிரசாந்த் அருண் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications