ஆட்டிறைச்சியில் இதை மட்டும் சேருங்க. இரத்தசோகை தீர்க்க உதவும் மட்டன் ஈரல்.. ஆட்டுக்கறி எலும்பு சத்து
சென்னை: ஆட்டுக்கறியிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க வேண்டுமானால், அதை பக்குவமாக சமைத்தாலே போதும் என்கிறார்கள்.. அதேபோல, மட்டன் வாங்கும்போது, நெஞ்செலும்பு அல்லது ஆட்டு ஈரல் இருக்கும்படி வாங்கினால், சத்துக்கள் கூடுதலாக கிடைக்கும். ரத்தசோகை உள்ளவர்கள் ஆட்டு ஈரல் சாப்பிடலாமா?
ஆட்டிறைச்சியில், வைட்டமின் B12, நியாசின், இரும்பு, செலினியம் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. பெரும்பாலும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே, அதிக மசாலா, அதிக எண்ணெய்யை தவிர்த்து சமைக்க வேண்டும். அதிலும் மட்டன் எலும்புகளில் குழம்புகளில் சேர்த்து சமைத்தால், உடலுக்கு பலம் கிடைக்கும். அல்லது எலும்புகளை தனியாக ரசம் வைத்து சாப்பிடும்போது, முழுமையான சத்துக்கள் கிடைக்கும்.

மட்டன் ரசம்: சுத்தம் செய்யப்பட்ட மட்டனை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 2 கப் தண்ணீரை ஊற்றி நன்றாக குக்கரில் வேகவைக்க வேண்டும். இதில், மட்டனிலுள்ள சூப் மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு மிக்சியில் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகத்தை விழுதாக அரைக்க வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, சோம்பு, தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த விழுதையும் கொட்டி மீண்டும் வதக்க வேண்டும்.. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி, மட்டன் சூப்பை கொட்டி கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும், கொத்தமல்லியை தூவினால், மட்டன் ரசம் தயார். குக்கரில் வேகவைத்திருக்கும் மட்டனில், மசாலா குறைவாக சேர்த்து கிரேவி செய்து கொள்ளலாம்.
ஈரல் சத்துக்கள்: அதேபோல, மட்டன் வாங்கும்போது, ஈரலையும் தவிர்க்க கூடாது.. ஆட்டு கல்லீரலில் கலோரிகள் குறைவாகும்.. கோழி, மாட்டிறைச்சியின் கல்லீரலைவிட, ஆட்டு கல்லீரலில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளதால், உடலுக்கு நன்மையை தருகிறது. அனீமியா தொந்தரவு உள்ளவர்கள், ஆட்டு ஈரலை தவறவிடக்கூடாது.
கல்லீரலில் உள்ள வைட்டமின் B, மன அழுத்ததிற்கு இந்த கல்லீரலே பெஸ்ட் உணவாகும். ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள், உடலில் பலமின்றி இருப்பவர்கள் வாரம் ஒருமுறையாவது ஈரலை சாப்பிடலாம். ஆட்டு ஈரலிலுள்ள வைட்டமின் A சத்துக்கள், நுரையீரல், இதயம், சிறுநீரகம் செயல்பாடுகளை ஊக்குவிக்கக்கூடியது.
ஹார்மோன்: நம்முடைய உடலுக்கு அனைத்து புரதச்சத்துக்களும் உண்டாகக்கூடிய அமினோ அமிலம் இந்த ஈரலில் உள்ளது.. இந்த சத்துக்கள், தசை நிறை பராமரிப்பு, திசு சரிசெய்தல், ஹார்மோன் உற்பத்தி, தோல் மற்றும் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்கிறது.
ஆனால், குறைவான அளவே ஈரலை சாப்பிட வேண்டும். ஏனென்றால், கல்லீரலில் ஆரோக்கியமான மோனோ- மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இருந்தாலும், ஆரோக்கியமற்ற டிரான்ஸ் கொழுப்புகளும், நிறைவுற்ற கொழுப்புகளும் இருக்கின்றன. இவை இதய நோயுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதால், இதய நோய் உள்ளவர்கள், பக்கவாதம் பாதிப்பு உள்ளவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், கல்லீரல் சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்க்கலாம்.
கர்ப்பிணிகள்: மாதவிடாய் நின்ற பெண்கள் ஆட்டு ஈரலை வாரம் ஒருமுறையாவது சாப்பிடலாம். ஆனால், அதிக அளவு வைட்டமின் A உள்ளதால், கர்ப்பிணிகள் டாக்டர்களின் ஆலோசனையின்றி சாப்பிட வேண்டாம்.












Click it and Unblock the Notifications