கொஞ்சூண்டு தண்ணீல போட்டா போதும்! பொசு பொசுனு எழும்பும்.. கேன்சரை பிசுபிசுக்க வைக்கும் பாதாம் பிசின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாதாம் பிசினை பயன்படுத்தி உடல் சூடு முதல் ஆண்மை கோளாறு வரை பலவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

பிசின் என்றால் ஒரு வகை கோந்து போல் இருக்கும். அதென்ன பாதாம் பிசின் என்கிறீர்களா? இது பாதாம் மரத்திலிருந்து வடிவதுதான் அந்த பாதாம் பிசின் ஆகும். இதற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

Excellent health benefits of Badam Pisin

பாதாம் மரத்திலிருந்து வடியும் பிசினை காய வைத்து இந்த பாதாம் பிசின் தயாரிக்கப்படுகிறது. இதில் புரத சத்து நிறைந்திருக்கிறது. ஆண்மையை அதிகரிக்கும். ஒல்லியாக இருப்பவர்களின் உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது.

இந்த பாதாம் பிசின்கள் குளிர்பானங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது ஜெல்லி மிட்டாய் தயாரிப்பிலும் சர்பத், ஜிகர்தண்டா செய்யவும் பயன்படுகிறது. ஆண்களுக்கு ஆண்மை பிரச்சினையை நீக்குவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளையும் குழந்தை பிறப்பிற்கும் வழி வகுக்கிறது.

பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு பாதாம் பிசினை கொடுக்க வேண்டும். இதனால் பெண்களின் உடலில் உள்ள ஊட்டச்சத்துகள் மீண்டும் திரும்ப பெறப்படுகிறது. அது போல் அடுத்த மாதவிடாய் சுழற்சி வருவதற்கும் வழி செய்கிறது. எனவே இந்த பிசினை கொண்டு லட்டு தயாரிக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேல் இது உடல் சூட்டை தணிக்கிறது. உடல் சூடு தணிந்தாலே உடலில் பாதி வியாதிகள் குறையும். வயிற்று பிரச்சினைகளையும் சரி செய்கிறது. இந்த பாதாம் பிசினை பால், சர்க்கரையுடன் சேர்த்துக் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

தேவையில்லாத பதற்றத்தை தணிக்கிறது. பாதாம் பிசினில் அதிகபடியான ஜிங்க் உள்ளது. இது ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்ரோனை அதிகரிக்கிறது. விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த பாதாம் பிசின் நெஞ்சு எரிச்சலை போக்குகிறது. எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. நீண்ட நாளாக நோய்வாய்பட்டவர்கள் மெலிந்து காணப்படுவார்கள். அவர்களுக்கு இந்த பிசினை வாரத்திற்கு 3 நாட்களுக்கு கொடுத்து வந்தால் சத்து கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

இந்த பிசின் ஒரு காலத்தில் காய்ச்சல், சளிக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இது பொடுகை தடுக்கிறது. சருமத்தை வயோதிகம் அடைய விடாமல் பாதுகாக்கிறது. இது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ரத்த ஓட்டத்தை தூண்டும். தலை முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. குடலில் நல்ல பாக்டீரியாக்களை பாதுகாக்கிறது. செரிமான பிரச்சினைகளை தடுக்கிறது.

இதயத்திற்கும் இந்த பாதாம் பிசின் நன்மை செய்கிறது. இதய நோய்க்கு வித்திடும் கொழுப்பை கரைக்கிறது. நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைக்கும். மேலும் இது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பாதாம் புற்றுநோயிலிருந்து காக்கிறது. இது கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாக கருதப்படுகிறது. இந்த பாதாம் பிசினை சிறிது அளவு தண்ணீரில் ஊற வைத்தால் ஜெல்லி போல் கிடைக்கும். அதை குளிர்பானங்களில் சேர்த்து பயன்படுத்தலாம்.

ரோஸ் மில்க், பாதாம்கீர், தர்பூசணி, கிர்னி உள்ளிட்டவைகளை கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது ஊற வைத்த பிசினை அதில் சேர்த்து ஜூசரில் ஒரு அடி அடித்து பருகினால் அமிர்தம்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+