Mookirattai: மூட்டு வலியா? மூக்கிரட்டை கீரை பற்று போடுங்க! 1 வாரத்தில் பெயின் இருந்த தடமே தெரியாதே!
சென்னை: மூட்டு வலி பிரச்சினை குணமாக வேண்டும் என்றால் மூக்கிரட்டை கீரையை அரைத்து பற்று போட்டால் ஒரே வாரத்தில் மூட்டு வலி பறந்து போயிடுமே! டிரை செய்து பாருங்க!
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த கீரையை வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் போதும்... கல்லீரல் பிரச்சினை முதல் உடல் பருமன் வரை குணப்படுத்துமாம்!!*

மூக்கிரட்டை தாவரம் தரையோடு படரும் கொடி இனத்தைச் சேர்ந்தது. இந்த தாவரம் மருத்துவ குணம் கொண்டது. இதன் இலைகள் கீரையாக சமைத்து உண்ணப்படுகிறது.
மேலும் இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது. குறிப்பாக கல்லீரல் பிரச்சினை, உடல் பருமன், சிறுநீர்ப்பாதை தொற்று, நீரிழிவு, இதய நோய்கள், கண் நோய்கள் அத்தனையையும் விரட்டுகின்றது.
இந்த கீரையை வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் போதும். தற்போது இந்த கீரையை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம். மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சிறுநீர்ப் பாதை தொற்று அதிகமாகவே இருக்கும். அந்த சமயங்களில் இந்த கீரை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.
மூக்கிரட்டை கீரை உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கி, உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய பொட்டாசியம், எலக்ட்ரோலைட்ஸ்களை சேமித்து எடையைக் குறைக்க உதவுகிறது.
கோடை காலத்தில் நீர்க்கடுப்பு அதிகமாகவே இருக்கும். அதைத் தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது.
மூக்கிரட்டை இலையில் இருக்கும் சாறு ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதோடு நமக்குத் தேவையான பிளாஸ்மா இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்து, நீரிழிவு நோயைத் தடுக்கிறது.
மூக்கிரட்டை கீரை கண் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளைத் தீர்க்கிறது. குறிப்பாக, இந்த செடியின் வேர்ப் பகுதியை இடித்து, அந்த சாறினை ஜூஸ் போல குடித்து வந்தால், மாலைக்கண் நோய் போன்ற பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருந்து மூக்கிரட்டை வேர் காப்பாற்றும். ஏனென்றால் இது இதயத்துக்குச் செல்லும் அழுத்தத்தைத் தவிர்க்கும்.
மூக்கிரட்டை இலையை மை போல அரைத்து மூட்டுப் பகுதிகளில் பற்று போடுங்கள். ஒரே வாரத்தில் மூட்டுவலி பறந்து போய்விடும்.
வயிற்றுப் பிரச்சினைகள், ஜீரணக் கோளாறு, வயிற்றுப் புழுக்கள் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்து விடும் ஆற்றல் இந்த மூக்கிரட்டை கீரைக்கு உண்டு. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications