மட்டன் குழம்பை விடுங்க.. சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற முரல் மீன், மத்தி மீன், சங்கரா, அயிலை.. அடேங்கப்பா
சென்னை: மீன்கள் என்றாலே, மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்றாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த பலனை தரக்கூடிய மீன்கள் எது தெரியுமா? நீரிழிவு நோயாளிகள் மீன்களை எந்த அளவு சாப்பிட வேண்டும் தெரியுமா?
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக காணப்படுவது கடல்வாழ் மீன்களில்தான்.. இந்தவகையான கொழுப்பு மீன்கள், நீரிழிவு ஆபத்தை குறைக்கிறதாம்.. அந்தவகையில், சால்மன், ஹெர்ரிங் போன்ற கொழுப்பு மீன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த வகை மீன்கள் எல்லாம் வைட்டமின் D அளவை, அதிகரிக்க செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நீரிழிவு நோய்க்கான அபாயத்தை குறைப்பதில் வைட்டமின் D -க்கு நிறையவே பங்கு உள்ளது.. உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுவதால், நீரிழிவு ஆபத்தும் குறைகின்றன..
நீரிழிவு நோயாளி: இந்த மீன்கள், நீரிழிவு நோய்க்கான அபாயம் குறைவதுடன், உடலிலுள்ள இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன.. நிறைய புரதச்சத்துக்கள் உள்ள இந்த மீன்கள், வளர்ச்சிதை குறைபாட்டையும் குறைக்கின்றன
அயிலை மீன் என்று சொல்லக்கூடிய கானாங்கெளுத்தி மீன்களிலும் நிறைய புரோட்டீன்கள் உள்ளன.. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க இந்த மீன் உதவுவதால், சர்க்கரை நோயாளிகள் தைரியமாக சாப்பிடலாம்.. இதனால், கண்களில் ஏற்படக்கூடிய கோளாறுகளும் நீங்கும்..
சமையல்: அதேபோல, ஜிலேபி கெண்டை, டுனா மீன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்களை வாரம் ஒருமுறையாவது சமையலில் சேர்த்து கொள்ள வேண்டுமாம்.. இதில் சங்கரா மீனை எடுத்து கொண்டால், ருசி + சத்துக்கள் ஏராளமாக உள்ளன.. இதய செயல்பாட்டை சிறப்பாக நிர்வகிக்க செய்வதில் சங்கரா மீன்களுக்கு பெரும் பங்கு உள்ளதாம்.. இன்சுலின் எதிர்ப்பை குறைக்கவும் சங்கரா மீன்கள் பெரிதும் பயன்படுகின்றன..
முரல் மீன்களை பொறுத்தவரை, வைட்டமின் D, புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் என அத்தனை ஊட்டச்சத்துக்களும் உள்ளதுடன், ஒமேகா-3 அமிலம் அதிகமுள்ள மீன்களில் ஒன்றாக உள்ளது. இதய செயல்பாட்டை இந்த முரல் மீன்கள் சீராக்குகிறன்றன.. அத்துடன், ரத்தத்திலிருக்கும் சர்க்கரையின் அளவையும் குறைக்கின்றன..
புரோட்டீன் முக்கியம்: மஸ்டெலஸ் அண்டார்டிகஸ் போன்ற மீன்களில் உயர்தர புரதங்கள் இருப்பதாக ஆய்வுகளிர் நிரூபணமாகி உள்ளது.. அதாவது, மாட்டிறைச்சி, சிக்கனுடன் ஒப்பிடும்போது பெரிய அளவிலான மன நிறைவை இந்த மீன்கள் தருகின்றனவா.. அதிலும், டுனா போன்ற மீன்கள், வான்கோழி, முட்டையுடன் ஒப்பிடும்போது, கூடுதலான சிறந்த ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றனவா.. எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கு புரதம், இன்சுலின் சுரப்பை மேம்படுத்த இந்த மீன்கள் உதவுகின்றன.
ரத்த சர்க்கரை: அதேபோல, சர்க்கரை நோயாளிகள், தைரியமாக சாப்பிடக்கூடியது மத்தி மீன்கள்.. இதனால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதுடன், நீரிழிவு வராமலும் தடுக்கின்றன.. மத்தி மீன்களை அடிக்கடி சமையலில் சேர்த்து கொள்வதால், இன்சுலின் சுரப்பிகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியுமாம்.
இந்த மீன்கள் எல்லாமே விலை குறைவு என்பதுடன் சத்துக்களும் அதிகம் உள்ளவை.. எனினும், சர்க்கரை நோயாளிகள் சுமார் 140 கிராம் சமைத்த மீன்களை மட்டும் சாப்பிட வேண்டுமாம்.. எனவே, மருத்துவரின் தகுந்த ஆலோசனையின் பேரில், குறிப்பிட்ட அளவு சாப்பிடுவதால் ஆரோக்கியம் இரட்டிப்பாகும்.












Click it and Unblock the Notifications