சர்ருன்னு ஊளைச்சதை கரைய.. இந்த தண்ணீர் போதுமே.. வெள்ளை மிளகை சாதாரணமாக நினைக்காதீங்க.. ஹெல்த் டிப்ஸ்
சென்னை: தூக்கமும், தண்ணீரும் கூட, ஒருவரின் எடை குறைவதற்கும், கூடுவதற்கும் காரணமாக உள்ளதாக சொல்கிறார்கள்.. வெறும் தண்ணீர்தானே என்று நினைக்கக்கூடாது. உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த தண்ணீரை சரியாக பயன்படுத்தினால் போதும்.
அதிக நேரம் தூங்குபவர்களுக்கு உடல் எடை குறையும் என்கிறார்கள். தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியிருக்கிறார். அதாவது தூங்கும்போது உடல் எந்தவேலையும் செய்யாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம் என்கிறார். ஆனால், இரவு அல்லது பகல் நேரத்தில் அதிகமாக தூங்கினால் அது கப தோஷம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும்.

காய்கறிகள்: அதேபோல, தினம் ஒரு காய்கறி என்றில்லாமல், ஒரே நேரத்தில் 3 காய்கறிகளை சேர்த்து சாப்பிடலாம். இதனால் காய்கறிகளை நிறைய சாப்பிட தோன்றும்.. இதுபோலவே, பழங்களையும் அதிகமாக சாப்பிடலாம். ஆனால்,
ஒவ்வொரு வேளையும் ஒரே வகையான காய்களுக்கு பதில் 3 வகையான காய்களை சாப்பிடலாம். அதை சாலட்கள், வேக வைத்து, சாப்பிடலாம்.. சாப்பிடுவதற்கு முன்பு மிளகு தூள் சேர்த்த சூப் குடிக்கலாம். கெட்டியாக இல்லாமல், தண்ணீர்போல தயார் செய்து, சூப்களை குடிக்கலாம். டம்ளர்கள் சிறியதாக இல்லாமல், நீளமான மெல்லிய டம்ளராக வைத்து கொள்ள வேண்டுமாம். காரணம், டயட்டில் இருக்கும்போது, ஜூஸ், சோடா உட்பட மதுபானங்கள் அளவை எளிதாக குறைக்கும்.
பழங்கள்: இறைச்சியையும் சாப்பிடலாம்... எப்போதுமே, வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட பழகிக்கொண்டால் உடலிலுள்ள கழிவுகள் நீங்கி, உடல் எடையும் குறையும்.
இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிட்டு, குடிக்கும் நீரையும் சரியான அளவில் சரியான வெப்ப நிலையில் குடிக்க வேண்டும். கொதிக்க கொதிக்க குடிப்பதைவிட, வெதுவெதுப்பான நீரை குடிப்பதால், ஜீரணம் எளிதாகி, அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவும். அல்லது வெறும் சுடுநீருக்கு பதிலாக, சீரகத்தண்ணீர், லவங்கப்பட்டை தண்ணீர், சோம்பு தண்ணீர் போன்றவற்றை குடித்தால், அஜீரண கோளாறு ஏற்படாது.
கொதிநிலை: காலையில் 6 முதல் 10 டம்ளர் மிதமான சூட்டில் குடிக்கலாம்.. எப்போதுமே கொதிநிலை கொண்ட சூடான தண்ணீரானது, உணவுக்குழாய்களில் உள்ள திசுக்களை சேதப்படுத்திவிடும். அதுவும் இல்லாமல், சுவை மொட்டுக்களை எரித்து நாக்கிலும் காயத்தை ஏற்படுத்தி விடும். அதற்காக கொதிக்கும் நீரில், குளிர்ந்த நீரை கலந்து குடிப்பதும் தவறு. இப்படி செய்வதால் கிருமிகள் அழியாது. எப்போது சாப்பிட்டாலும், அதற்கு அரைமணி நேரம் முன்பு, ஒரு டம்ளர் வெதுவெது தண்ணீர் குடிக்க வேண்டும்..
அதேசமயம் அதிக தண்ணீர், செரிமான பிரச்சனையை உண்டாக்கிவிடும். ஏனென்றால், வயிற்றில் செரிமானம் நடப்பது அக்னியால்தான்.. அதிகமான தண்ணீர் அந்த அக்னியை அணைக்கும்போது, அது தடைப்படும். தாகம் எடுத்தும் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், நீர்ச்சத்து குறைந்து, சரும வறட்சி, சுருக்கம், முடி உதிர்வு, கருவளையம், காலில் வெடிப்பு போன்றவை ஏற்படும். வெறும் தண்ணீர் என்றாலும் அத்தனையும் ஆரோக்கியம் ஆகும். எனவே, உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் தண்ணீர் அளவை கருத்தில் கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைக்க, பச்சை காய்கறிகளும், கீரைகளும், பழங்களும், முறையான உடற்பயிற்சியும், போதுமான தூக்கமும், நிம்மதியான மனநிலையும் கட்டாயம் தேவை. வாரம் 2 முறையாவது, மிளகு டீ போட்டும்குடிக்கலாம்.. இதனால், கொழுப்புகள் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.. அத்துடன், சளி, இருமல், தொண்டை புண், தலைபாரம், இருந்தாலும் நீங்கிவிடும். ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும்.
வெள்ளை மிளகு: வெள்ளை மிளகும், உடல் எடையை குறைக்க உதவுகிறது. காரணம் இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.. எனவேதான், ஆயுர்வேதத்தில், முக்கியமான இடத்தை பெற்றுள்ளது இந்த வெள்ளை மிளகு. வெள்ளை மிளகில் நார்ச்சத்து உள்ளது. எலுமிச்சம் கலந்து, இந்த டீ குடித்து வந்தால் உடல் எடை குறையும் என்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications