முரல் மீன்கள்.. அடுத்த ஊளி மீனின் ஆச்சரியம்.. மத்தி மீனை விடவா? அள்ள அள்ள ஆரோக்கியம் தரும் மீன்கள்
சென்னை: மீன்களை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள சொல்வது ஏன் தெரியுமா? மீன்களில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து ஆய்வுகள் சொல்வதென்ன?
கடல் உணவுகளில் எப்போதுமே மருத்துவ சத்துக்கள் அதிகம் என்பதால், உடலுக்கு நன்மையை தருகின்றன. அந்தவகையில், ஒவ்வொரு வகையான மீன்களிலும், ஒவ்வொரு சத்துக்கள் உள்ளன.. அதேசமயம் அனைத்து மீன்களிலும், சில சத்துக்கள் ஒரே மாதிரியாகவும் உள்ளன.

கடல் மீன்கள்: கடல் மீன்களில் சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் உடல் எடையை அதிகரிக்க செய்யாது.. மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது. முக்கியமாக மீன் சாப்பிடுவது இதயத்தை பாதுகாக்கக்கூடியதாக உள்ளது. மீன்களை சாப்பிடுவதனால் ரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் சீராவதாகவும், இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்களும் குறைவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன..
இதற்கெல்லாம் மூல காரணம் மீன்களில் அமைந்துள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலம் என்ற மூலப்பொருள்.. ஒமேகா -3 நிறைந்த மீன்களை வாரம் 2 முறைக்கு மேல் சாப்பிட்ட 6-ல் ஒரு பகுதியினருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதும் வெகுவாக குறைந்துள்ளதாக, ஜமா இன்டர்னல் மெடிசின் என்ற இதழில் ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதயநோயாளி: அந்தவகையில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மீனை சாப்பிடுவது பாதுகாப்பு நன்மையை தருகிறது.. ஒமேகா -3 நிறைந்த மீன்களை சாப்பிடுவதன் மூலம் இதய நோய்க்கு குறைந்த ஆபத்து உள்ளவர்கள் CVDயிலிருந்து ஓரளவு பாதுகாப்பை பெற முடியும்.. நினைவாற்றலை வளப்படுத்தும் சக்தி அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது" என்கிறார்.
அதாவது, தடிமனான மீன், கொழுப்பு சதை நிறைந்த மீன்களை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.. சங்கரா, மத்தி, சாளை, நெத்திலி போன்ற குட்டி குட்டி மீன்களை, எண்ணெயில் பொறிக்காமல் குழம்பு வைத்து சாப்பிடுவது சிறந்தது.. மத்தி மீனில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால், நரம்பு மண்டலத்தையும் சிறப்பாக செயல்பட தூண்டுகிறதாம்.
வஞ்சிர மீனில் ஒமேகா 3 என்ற சத்து இருப்பதால், இதயத்திற்கு பலம் சேர்க்கக்கூடிய கொழுப்புகளும் கிடைக்கின்றன.. நெத்திலி, சங்கரா மீன், அயலை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களை, 100 கிராம் முதல் 200 கிராம் வரை வாரம் 2 முறையாவது சாப்பிடலாம் என்கிறார்கள்.
ஊளி மீன்கள்: உடல் எடை குறைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், பயமின்றி சாப்பிடக்கூடிய மீன் ஊளி மீனாகும். கால்சியம் நிறைந்த மீன் என்பதாலும், மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியது என்பதாலும், வளரும் பிள்ளைகளுக்கு கட்டாயம் ஊளி மீன்களை தர வேண்டும்.. ரத்தக் கட்டிகள் உருவாவதை தடுப்பதில் ஊளி மீன்களின் பங்கு மகத்தானது.. மனச்சோர்வு, பதட்டம் நீங்குவதுடன், பிற மனநல கோளாறுகளின் அபாயத்தையும் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
முரல் மீனிலும், வைட்டமின் D, புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.. ஒமேகா-3 அமிலம் அதிகமுள்ள மீன்களில், இந்த முரால் மீனும் ஒன்று. சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட்டு வருவதால், பாதிப்புகள் குறைகின்றன.. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைகின்றன. இதயத்துக்கும் நல்லது.
ஆய்வுகள்: மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஆண்ட்ரூ மென்டே மீன் உணவினால் கிடைக்கும் நன்மைகளை பற்றி ஒருமுறை கூறியிருந்தார்.
"மீன்களில் எளிதாக ஜீரணமாகக்கூடிய சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. சிறந்த புரோட்டீன் உணவாகவும் மீன் திகழ்கிறது... நம்முடைய உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய B12 வைட்டமின் இந்த மீனில் நிறைந்துள்ளன.. இதயத்தை காக்கும் ஒமேகா 3 கொழுப்பு சத்தும் இந்த மீனில் இருக்கிறது. பயறுகளை சாப்பிட முடியாதவர்கள், அந்த சத்துக்கள் அனைத்தையும் இந்த மீனிலிருந்தே பெற்று கொள்ளலாம்" என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications