சுக்காங்கீரை.. பிளட் பிரஷர் அதிகமா இருக்கா? மூட்டு வலி, முழங்கால் வலி தொந்தரவை ஓட்டும் சுக்கான் கீரை
சென்னை: 40 வயதுக்கு மேல எலும்பு தேய்மானம், மூட்டுவலி தொந்தரவு உள்ளவர்கள் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டிய கீரை இந்த சுக்காங்கீரையாகும்.. என்ன காரணம் தெரியுமா?
புளிப்பு சுவையுடன் இருக்கும் இந்த சுக்கான் கீரைகள் சத்துக்களின் இருப்பிடம் என்றே சொல்லலாம்.. ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களும் சரி, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் சரி, இந்த சுக்கான் கீரையை தவறவிடக்கூடாது.

குடல் அழுக்குகள்: குடலிலுள்ள அழுக்கை வெளியேற்றக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு.. பசி மந்தம் உள்ளவர்கள், செரிமான பிரச்சனை இருப்பவர்கள் இந்த கீரையை சமைத்து சாப்பிடும்போது, வயிற்றிலுள்ள கழிவுகள், நச்சுக்கள், வாயுக்கள் வெளியேறிவிடும்.. குடல் மட்டுமல்ல, கல்லீரலும் பலம் பெற வேண்டுமானால், இந்த கீரையை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிடலாம்.
மதுபோதையில் சிக்கி கல்லீரல் பாதிப்புக்கும் ஆளாகியிருப்பவர்களை மீட்டு கொண்டுவர இந்த சுக்காங்கீரை பெரிதும் கை கொடுக்கிறது. கல்லீரலை சுற்றியுள்ள ஆபத்தை நீக்கி, பித்தத்தையும் நீக்கி கல்லீரலையும் பாதுகாக்கிறது. அதனால்தான், மஞ்சள் காமாலை நோயாளிகளுக்கு இந்த கீரையையும் மருந்தாக உட்கொள்ள சொல்வார்கள்.
ரத்த சுத்திகரிப்பு: இந்த கீரையில் சூப் தயாரித்து குடிக்கலாம். ஏதாவது ஒரு பருப்புடன் இந்த கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தாலே ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.. ரத்தமும் சுத்திகரிக்கப்படும்..
ஆனால், எலும்புகளுக்கும் வலுவை தரக்கூடியது இந்த சுக்காங்கீரை. எலும்பு தேய்மானம் பிரச்சனை, ஆர்த்ரைடிஸ் வாத பிரச்சனை உள்ளவர்கள், மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள், தைராய்டு உடையவர்கள், ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள், அனைவருக்குமே இந்த சுக்காங்கீரை மருந்துபோல வினையாற்றுகிறது..
கால்சியம் சத்துக்கள்: இதற்கெல்லாம் முக்கிய காரணம், இந்த கீரையில் கால்சியம் சத்துக்கள் அபரிமிதமாக நிறைந்துள்ளன.. இதனால் எலும்புகள் உறுதியாகும்.. பற்களும் பலம்பெறும். அதனால்தான், இந்த கீரையை நிழலில் உலர்த்தி பவுடராக்கி, அதை வைத்து பல் துலக்குவார்கள்.
இந்த கீரையில் வளரும் குழந்தைகளுக்கு சூப் செய்து தந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறிவிடும். சொறி, சிரங்கு குணமாகும்.. எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதி தரும்.. குடலில் புண்கள் இருந்தாலும் இந்த கீரை ஆற்றிவிடும். ஆனால், புளி சேர்க்காமல் வெறும் பருப்புடன் சேர்த்து சமைக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications