என்னங்க ஓவரா "முடி" கொட்டுதா.. இத மட்டும் பாலோ பண்ணி பாருங்க.. அப்புறம் பாருங்க.. வேற லெவல் தான்
சென்னை: முடி உதிர்வது பலருக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 முடி வரை கொட்டுவது இயல்பானதுதான்.ஆனால் அதையும் தாண்டி முடி கொட்டுகிறது என்றால் கொஞ்சம் அக்கறை எடுப்பது நல்லது. முடி உதிர்வதை குறைக்க உதவக்கூடும் சில டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய இளம் வயதினர் பெரும்பாலானோருக்கு பெரும் மனக்கவலைகளில் ஒன்றாக முடி உதிர்வது இருக்கும். பார்த்து.. பார்த்து என்னவெல்லாமோ ஷாம்பு , கண்டிஷனர் போட்டு வைத்தாலும் சீப்பை தலை முடிக்குள் விட்டு எடுத்தால் சீப்போடு சில முடிகள் வந்திடுதே என கண்ணாடி முன்பாக நின்று பலரும் நிச்சயம் ஃபீல் பண்ணுவதை காண முடிகிறது. அதிலும் இன்றைய 90 கிட்ஸ்களின் நிலைமை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

ஒருபக்கம் முடி கொட்டிக் கொண்டு போகிறது.. இன்னொரு பக்கம் கல்யாணம் ஆகவில்லை.. தினமும் தங்கள் தலைவிதியை பற்றி நினைக்கிறார்களே இல்லையோ தலைமுடியை பற்றி நினைத்து விடுகிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு ஏகத்திற்கும் பாடாய் பாடுத்துகிறது இந்த முடி கொட்டும் பிரச்சினை... முடி உதிர்தலை ஓரளவு கட்டுப்படுத்தும் சில எளிய டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் கூட உங்கள் பிரச்சினையை ஓரளவு சரி செய்ய வாய்ப்பு உள்ளது. சரி வாங்க இங்கே உள்ள டிப்ஸ்சை பார்க்கலாம்.
* சரியான அளவு தூக்கம் மற்றும் உணவுப்பழக்கம் மிகவும் அவசியம். மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். போதிய அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்
* முடி வளர்வதற்கான எண்ணெய் ஆகியவற்றை சரியான முறையில் பயன்படுத்துவது முடிக்கு வலு சேர்ப்பதோடு உதிர்வதையும் தடுக்க உதவும்.
* அதிக வெப்பம் முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே முடியில் இருக்கும் வெப்பத்தின் அளவை குறைக்கும் வகையிலான heat protectant உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம்.
* சரியான ஷாம்புவை பயன்படுத்துங்கள். குறிப்பாக சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்தலாம். ஷாம்பூவை தேவைப்படும்போது உச்சந்தலையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும், முடியின் வேர்ப்பகுதியில் பயன்படுத்தக்கூடாது.
* ஒரே மாதிரியான ஹேர்ஸ்டைல்களை தொடர்ந்து பின்பற்றாதீர்கள். பெண்கள் என்றால் இறுக்கமான ஜடை பின்னுவது போன்றவற்றை தொடர்ந்து முடிக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். எனவே, ஹேர்ஸ்டைல்களை அவ்வப்போது மாற்றிக் கொள்ளலாம்.

* குளித்து விட்டு வந்த உடன் முடியில் உள்ள ஈரத்தை போக்குவதற்காக துண்டை எடுத்து தேய்ப்பதை அனைவரும் வழக்கமாக கொண்டு இருக்கிறோம். அதற்கு பதிலாக பழைய காட்டன் டி சார் போன்ற டெர்ரி துணிகளை பயன்படுத்தலாம்.
* தலைமுடியில் வேகமாக அழுத்தி தேய்ப்பதற்கு பதிலாக மெதுவாக துடைத்து எடுக்கலாம்.
* முடிகளுக்கு கலரிங் செய்வதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கலரிங்க் செய்வதால் முடி உதிர்வது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே முடிகளை பாதுகாக்க வேண்டும் என்றால் ஹேர் டைகளை கூட நான்கு முதல் 6 வாரங்கள் இடைவெளியில் பயன்படுத்தலாம்.
* தூங்கும் போது உங்கள் தலைமுடிக்கும் தலையணைக்கும் இடையே ஏற்படும் உராய்வு கூட முடி உதிர்தலுக்கு வழி ஏற்படுத்தும். எனவே மெருதுவான தலையணைகளை பயன்படுத்தலாம். தூங்க போகும் முன்னால் முடிகளை சில்க் ஸ்கார்ப்களை வைத்து சுற்றி வைத்துக் கொள்ளலாம்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications