வெளியே போனாலே குப்பென வியர்க்குதா? அசால்டாக விட்றாதீங்க.. இந்த பிரச்சினையாக இருக்கலாம்
சென்னை: வியர்வை ஏற்படுவது உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்துவதோடு நச்சு வெளியேற உதவும். வியர்வை வெளியேறுவது உடலுக்கு நல்லது என்றாலும் சிலருக்கு அளவுக்கதிகமாக வியர்த்து கொட்டி தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இப்படியாக அதிகப்படியாக வியர்வை ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளது. வைட்டமின் டி பற்றாக்குறை எதனால் ஏற்படும் என்றும் இதன் பிற அறிகுறிகள் என்னவென்றும் இங்கே பார்க்கலாம்.
வீட்டை விட்டு வெளியில் சென்று லேசான வெயிலில் கொஞ்ச நேரம் நடந்தால் கூட சிலருக்கு உடல் முழுவதும் குளித்தது போல வியர்வை கொட்டும்.. வெளியில் வெப்பமான சூழல் இருந்தால் வியர்வை ஏற்படுவது இயல்பானதே.. ஆனால், வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாக வியர்க்கிறதே என சிலரும் நினைக்கலாம். இப்படி அதிகப்படியாக வியர்ப்பது, ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

வைட்டமின் டி குறைபாடு: இது பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கும் அறிகுறிகளாகும். அதாவது, உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தாலும் இப்படி அதிகப்படியான வியர்வை ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். வைட்டமின் டி வியர்வை சுரப்பிகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வியர்வை உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எனவே, வைட்டமின் டி பற்றாக்குறையாக இருந்தால், இந்த வியர்வை சுரப்பிகள் அதிகப்படியாக செயல்பட்டு, தேவைக்கு அதிகமான வியர்வையை உற்பத்தி செய்யும். இதனால், உடலில் வியர்த்து கொட்டக் கூடும். வைட்டமின் டி -யை பொறுத்தவரை மனித உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் வைட்டமின் டி-க்கு முக்கிய பங்கு உள்ளது.
இது எதனால் ஏற்படும்?: கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றை சேகரிக்க உதவுகிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் என்பது எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க அடிப்படையானது. இதுதவிர வைட்டமின் டி என்பது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இருதய ஆரோக்கியம், மன நலத்திற்கும் கூட வைட்டமின் - டி மிக முக்கியமானது ஆகும்.
சூரிய ஒளி அதிகம் படாத இடங்களில் வசிப்பது அல்லது பெரும்பாலான நேரங்களில் அறைகளுக்குள்ளே இருப்பது ஆகியவை ஒரு காரணமாக அமையலாம். ஏனெனில், சூரிய ஒளியை அதிகம் எதிர்கொள்ளாதவர்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல வைட்டமின் டி சத்து குறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருந்தாலும் இது ஏற்படும். உடல் பருமன் உள்ளவர்களுக்கும் ரத்தத்தில் வைட்டமின் டி குறையும்.
பிற அறிகுறிகள் என்ன?: உடலில் ஆற்றலை சீரான அளவில் பராமரிக்க வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வைட்டமின் டி பற்றாக்குறையாக இருந்தால், களைப்பு, சோர்வு போன்றவை எப்போதும் இருக்கும். நல்ல தூக்கம் போட்டாலும் நாள் முழுக்க மந்தமாகவே இருக்கும்.
தசை பலவீனம்: தசைகள் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் வைட்டமின் டி அவசியமானது. எனவே, வைட்டமின் டி பற்றாக்குறையாக இருந்தால், தசைகள் பலவீனமாக இருக்கும். இதனால், நமது அன்றாட செயல்பாடுகளில் இது எதிரொலிக்கும். மன அழுத்தத்திற்கும் இது வழிவகுக்கும். ஏற்கனவே சொன்னது போல, கால்சியம் மற்றும் பாஸ்பரஸை கிரகிப்பதில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது.
இவை இரண்டு எலும்புகள் வலுவாக இருக்க அவசியமானது. எனவே, வைட்டமின் டி பற்றாக்குறையாக இருந்தால் எலும்புகள் பலவீமனாமவும் வலி மிகுந்ததவையாக இருக்கும். இது ஆஸ்டியோபோரோசிஸ் வரும் அபாயத்தையும் அதிகரிக்கும். அதுமட்டும் இன்றி தலைமுடியின் வளர்ச்சிக்கும் வைட்டமின் டி மிக முக்கியமானது. எனவே, வைட்டமின் டி குறைவாக இருந்தால் முடி கொட்டுவதோடு வலுவையும் இழக்கும்.
வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?: வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது மட்டும் மின்றி வெளிப்புறங்களில் கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். சூரிய ஒளி படும் வகையில் நடைபயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றை செய்யலாம். அதேவேளையில், மதிய வேளைகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது இதை பின்பற்றக் கூடாது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications