தோளில் வலி.. விரலில் பிடிப்பு.. கெட்ட கொழுப்பை கரைக்கும் பெஸ்ட் உணவுகள்.. இலவங்கப்பட்டை இருக்கா? பலே
சென்னை: கொலஸ்ட்ரால் என்பது என்ன? கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாகிவிடும்போது, அதை எப்படி அறிந்து கொள்வது? கொலஸ்ட்ராலை குறைக்க ஆரோக்கியமான வழிமுறைகள் உண்டா?
கல்லீரலால் உருவாக்கப்படும் கொழுப்பு படிமம் தான் கொலஸ்ட்ரால். நமது ஆரோக்கியத்துக்கு இந்த கொலஸ்ட்ரால் தேவையானது என்றாலும் கூட, சில நேரங்களில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்துவிடும்போதுதான், ஆபத்தும் நமக்கு பெருகிவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம், மாரடைப்பு, போன்ற பயங்கரங்களை ஏற்படுத்தக்கூடியது இந்த கெட்ட கொலஸ்ட்ரால்தான்.

2 வகைகள்: கொழுப்பு வகைகள் 2 உள்ளன.... குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் (எல்டிஎல்) என்பது இதயநோய் மற்றும் பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் போன்ற அபாயத்தை அதிகரிக்க செய்யும் கெட்ட கொழுப்புகளாகும். உயர் அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டின்கள் (ஹெச்.டி.எல்) நல்ல கொழுப்பு என்பார்கள்.. இது உங்களுக்கு உண்டாகும் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கக்கூடியது.
நம்முடைய உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகிவிட்டது என்பதை சில அறிகுறிகள் மூலம் நாமே அறிந்துகொள்ளலாம்.. உடலில் சேர்ந்து கொழுப்புகள் அங்கங்கே சேர்ந்து கொள்ளும்.. இந்த கட்டிகள் எல்லாம் கொழுப்பு சேர்ம கட்டிகள் என்பார்கள்.
அறிகுறிகள்: இந்த கட்டிகள் சருமத்தில் வெளிப்பட துவங்கும்.. அதாவது, தோலில் மஞ்சள் நிறத்தில் கொழுப்பு போல புடைப்பு காணப்படும். சருமத்தில் இல்லாவிட்டாலும்கூட, சிலசமயம், கண்களின் ஓரத்தில் புடைப்புகள் தோலை ஒட்டி வளரும்.. அல்லது உள்ளங்கைகளில் கோடு போல தோன்றும்.. அல்லது கால்களிலும் தோன்றும்.
இதனால் நமக்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்காமல், கால் மற்றும் பாதங்களின் நிறம் மாறிவிடும்.. அல்லது மரத்துவிடும். அல்லது பலவீனமாக உணரலாம்.. தொடைகள், கால்விரல்களில் திடீரென பிடிப்புகள், வலிகள், விறைப்பு தன்மைகள் ஏற்படும்.. அதேபோல, கொலஸ்ட்ரால் அதிகமாகும்போது உடல் எடை அதிகமாகும்.. இதயமும் பாதிக்கப்படும்.
பரிசோதனைகள்: எனவே, இவைகளில் எந்த அறிகுறிகளில் எது தென்பட்டாலும், உடனடியாக டாக்டரை நாம் சந்தித்துவிட வேண்டும்.. இதற்கெனவே உள்ள பரிசோதனைகளை செய்துக்கொள்ள வேண்டும்.. ஹார்ட் அட்டாக்கின் முக்கிய அறிகுறிகள் இவைகள்தான் என்பதால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
அதிக கொழுப்பு என்பது 240 மி.கி/ என்றும், மிதமான அளவு கொழுப்பு என்பது - 200 -239 மி.கிராம் அளவு என்றும், இயல்பான கொழுப்பு - 200 மி.கிராம் என்றும் கருதப்படுகிறது.
முழு தானியங்கள்: கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருப்பது உறுதியானால், ஆரோக்கியமான உணவுமுறைகளிலேயே கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். முழு தானியங்கள் இதற்கு கை கொடுக்கின்றன.. காரணம், சிறுதானியங்களில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.. வால்நட்ஸ், கடுக்காய், சூரியகாந்தி விதைகள், பாதாம் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.. நார்ச்சத்து அதிகமாக இருக்கும் ஆளி விதை, சியா விதையையும் ஓட்ஸ்ஸையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெண்ணெய், பன்னீர் போன்றவற்றை குறைத்துக்கொண்டு, பால், பாலாடைக்கட்டி, பால் பொருட்களை சாப்பிட வேண்டும். மீன்களில் இறால் மீன்களை குறைத்து கொண்டு, சால்மன், மத்தி மீன்களை சாப்பிடலாம். சமையலில் இஞ்சி பூண்டு இரண்டையுமே அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்..
பூண்டு: லவங்கப் பட்டையுடன் மிளகு, வேப்பிலைக்கொழுந்து இரண்டையும் பேஸ்ட் போல அரைத்து வெறும் வயிற்றில் 2 கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தாலே கொழுப்புகள் கரைய ஆரம்பிக்குமாம்.. பூண்டு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். சின்ன வெங்காயத்தையும் தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.
தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் நிறைய உள்ளதால், குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.. எலுமிச்சம்பழச்சாறு, கிரீன் டீ, இஞ்சி டீ, ஆப்பிள் சிடர் வினிகர் இவைகளில் ஏதாவது ஒன்றினை அடிக்கடி குடித்துவர வேண்டும்.. முக்கியமான முறையான உடற்பயிற்சியும், நிறைய சுடுதண்ணீரும் குடித்து வருவதால், கொலஸ்ட்ரால் உடலில் சேருவது குறைய தொடங்கும்
அல்லது அரை ஸ்பூன் இஞ்சி பொடியை, வெந்நீரில் கலந்து தேன் கலந்து குடித்து வந்தாலும், ரத்தத்திலுள்ள கொழுப்புகள் கரைய துவங்ங்கும்.












Click it and Unblock the Notifications