பலாக்கொட்டை.. பளபள சருமம் முதல் பாலுணர்வு தூண்டுவது வரை.. பயன்தரும் பலாப்பழ கொட்டைகள்.. சூப்பர்
சென்னை: பழங்களை நாம் விரும்பி சாப்பிடும் அளவுக்கு, அந்த பழங்களின் விதைகளை நாம் சாப்பிடுவதில்லை.. உண்மையை சொல்லப்போனால் பழங்களை போலவே அதன் கொட்டைகளிலும் நிறைய மருத்துவ நன்மைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் பலாக்கொட்டை.
துத்தநாகம், வைட்டமின்கள், நார்ச்சத்து என ஏகப்பட்ட விஷயங்கள் இந்த பலாக்கொட்டையில் உள்ளன.. இதனால் உங்கள் திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது. முக்கியமாக நிறைய புரோட்டீன் உள்ளது.. தசைகளை வலுவாக்க இந்த கொட்டைகளிலுள்ள புரதங்கள் உதவுகின்றன...

பலாக்கொட்டை : 100 கிராம் பலாக் கொட்டைகளில், ஒரு கிராமுக்கு குறைவாகவே கொழுப்புச்சத்துக்களும், 38 கிராம் கார்போவும் இடம்பெற்றுள்ளன... இந்த பலாக் கொட்டைகளை நன்றாக காயவைத்து, பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். செரிமான கோளாறு ஏற்படும்போதெல்லாம் இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் பலாக்கொட்டைகளிலுள்ளதால், வயதான தோற்றம், சரும சுருக்கங்களுக்கு எதிராக போரிட செய்கிறது. எனவே, பலாப்பழ கொட்டைகளை குளிர்ந்த பாலுடன் அரைத்து சருமத்தில், தேய்த்து வந்தால் சரும பொலிவு கிடைக்கும். அல்லது தேனுடன் கலந்தும் பேஸ் பேக் போல பயன்படுத்தலாம். சரும நோய் பிரச்னைகள் நீங்கும்.
முக பொலிவு: அதுமட்டுமல்ல, முக சுருக்கங்களை குறைக்கவும் இந்த கொட்டைகள் உதவுகின்றன.. அனைத்துக்கும் மேலாக, மைக்ரோ நியூட்ரியன்டுகள், புரதங்கள் அதிகமாக இருப்பது, சருமத்துக்கு கவசம் போல பாதுகாக்க உதவுகின்றன..
இரும்பு சத்து நிறைந்துள்ளதால், பெண்களை அனீமியா அண்டுவதில்லை.. நார்ச்சத்து நிறைந்துள்ள பலாப்பழ கொட்டைகள், மலச்சிக்கலை தீர்க்கின்றன.. வைட்டமின் A இந்த பலாப்பழ கொட்டைகளில் நிறைந்திருப்பதால், கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது.. கண்புரை, மாகுலர் சிதைவு போன்ற கண் தொந்தரவுகளிலிருந்தும் தடுக்கிறது. மாலைக்கண் நோய்களும் தடுக்கப்படுகின்றன.
தலைமுடி வளர்ச்சி: முகத்துக்கு மட்டுமல்ல, தலைமுடி ஆரோக்கியத்துக்கும் இந்த பலா கொட்டைகள் உறுதுணையாகின்றன.. தலைமுடி உதிர்வுக்கு இது பயன்படுகிறது. முக்கியமாக ஆண்களும் இந்த டிப்ஸை பயன்படுத்தி பார்க்கலாம்.
இந்த பலாக்கொட்டையை காயவைத்து பவுடராக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பவுடருடன் சிறிது பயத்தமாவு, சிறிது வெந்தயத்தூள் சூசர்த்து, நல்லெண்ணெயுடன் சேர்த்து குழைத்து கொள்ள வேண்டும். இதனை தலையில் பூசி 15 நிமிடம் ஊறவைத்து குளித்து வந்தால், அரிப்பு நீங்கி, முடி கொட்டுவதும் நிற்கும்... முடியும் வளர ஆரம்பிக்குமாம்.
சிகிச்சை: ஆண்களுக்கு இந்த பலாப்பழ விதைகள் மிகவும் நல்லது என்கிறார்கள்.. பாலியல் உணர்வு தூண்டப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இதில் காணப்படுகிறதாம்.. அதனால்தான், பாரம்பரிய மருத்துவ முறைகளில் பலாப்பழ கொட்டைகள் பாலியல் பிரச்னைகளுக்கு மருந்தாக இன்றளவும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த கொட்டைகளை நெய்யில் வறுத்து சாப்பிடும்போது, சிறந்த பலனை பெற முடியும். எனவே, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனை மருந்தாக எடுத்து கொண்டால், ஆரோக்கியமான பலனை பெறலாம்.
பெஸ்ட்: இந்த பலாக்கொட்டையில் குழம்பு, கூட்டு, குர்மா, பொரியல் என எது வேண்டுமானாலும் செய்யலாம்.. ஆவியில் அவித்தும் சாப்பிடலாம்.. நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம். கேரளாவில் இந்த கொட்டைகளை நன்றாக அரைத்து மாவாக்கி, அல்வா, லட்டு, புட்டு இப்படியெல்லாம் செய்வார்களாம்.. ஆனால், பலாக்கொட்டைகளை சமைக்கும்போது, தேங்காய், சர்க்கரை, நெய் போன்றவற்றை அளவுடன் பயன்படுத்த வேண்டுமாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications