குடல் கேன்சரை தடுக்கும் சிவப்பு அவல்.. யாரெல்லாம் சாப்பிடலாம்? சத்து நிறைந்த சிவப்பு அவலின் சிறப்பு
சென்னை: செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும் சிவப்பு அவல் பற்றி தெரியுமா? சிவப்பு அவலை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா? அவலில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன? குடல் புற்றுநோயை உருவாக்காமல் தடுக்கக்கூடிய சிவப்பு அவலின் முக்கிய பயன்பாடுகள் என்னென்ன?
சிவப்பு மற்றும் வெள்ளை என்று அவலில் 2 வகைகள் உண்டு.. இந்த 2 அவல்களுமே சத்துக்கள் நிறைந்தவைதான்.. வெள்ளை நிறத்திலுள்ள அவலில் கார்போ ஹைட்ரேட், கலோரி உள்ளதால், ஆரோக்கியத்தை உடலுக்கு தருகிறது.. மேலும், நல்ல கொழுப்பையும் அதிகரிக்க செய்கிறது.

சத்துக்கள்: வெள்ளை அவலைவிட, கூடுதல் சத்துக்கள் கொண்டது சிவப்பு அவல்.. கைக்குத்தல் முறையில் தயாராகும் அவலில், நார்ச்சத்துக்கள், வைட்டமின் B, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் நிறைந்திருக்கின்றன. இந்த அவலின் சிவப்பு நிறத்துக்கு ஆந்தோசயனின் என்ற நிறமிதான் காரணமாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை அதிகரிப்பு நிலை திடீரென உருவாகாமல் தடுப்பதற்கு இந்த அவல் உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உடனடியாக குளுக்கோஸ் கலக்காமல் இருக்க உதவி புரிகிறது. அத்துடன், சிவப்பு அவல் கிளைசெமிக் குறியீடு குறைவு என்பதால் இது செரிமான அமைப்பில் விரைவாக செயல்பட்டு குளுக்கோஸாக மாறாது. இதனால் ரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்காது.
அவல் தோசை: அதுமட்டுமல்ல, சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை குறைப்பதற்கும், சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கும் சிவப்பு அவல் உதவுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே, வழக்கமான அரிசி தோசைக்கு பதிலாக, அவல் தோசை செய்து சாப்பிடலாம்.
அதாவது 2 கப் அவல், கால் கப் உளுந்து சேர்த்து 4 மணி நேரம் ஊறவைத்து அரைத்து 5 மணி நேரம் புளிக்க வைத்து தோசையாக சாப்பிட்டால், சத்தானதாக இருக்கும். எனவே, சிவப்பு அவலை நீரிழிவு நோயாளிகள், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று குறிப்பிட்ட அளவு சாப்பிடலாம்.
கொழுப்புகள்: நம்முடைய உடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளில் சுமார் 76.9 சதவீதம் மற்றும் கொழுப்புகளில் 23 சதவீதம் இந்த அவலில் நிறைந்துள்ளது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது. எளிதில் ஜீரணிக்கக்கூடிய பொருள் என்பதால், குடல் வீக்கம் ஏற்படாமல் இருக்கவும் சிவப்பு அவல் பெரிதும் உதவுகிறது. நம்முடைய உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பை நீக்கி அமிலத்தன்மையை தவிர்க்கவும் இந்த அவல் பேருதவி புரிகிறது.
சிவப்பு அவல் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்திகள் கூடும். நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை நெருங்காது. உடல் எடையை கட்டுக்குள் வைப்போருக்கும், எடையை குறைப்போருக்கும் மிகச்சிறந்த சாய்ஸ் இந்த சிவப்பு உணவாகும். அனீமியா தொந்தரவு இருப்பவர்கள், தவறவிடக்கூடாத உணவு இந்த சிவப்பு அவலாகும்.
எலும்பு முறிவு: எலும்புகளை வலுவாக மாற்றி எலும்பு முறிவை தடுக்கக்கூடிய சக்தி சிவப்பு அவலுக்கு உண்டு.. புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்லவிடாமல் தடுப்பதில் சிவப்பு அவல் பெரும் பங்கு வகிக்கிறது..
அவலிலுள்ள வைட்டமின் B6 ஆஸ்துமாவை எதிர்த்து போராட செய்கிறது.. சிவப்பு அரிசியில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் அதிக சத்து நிறைந்தது... எனினும் சிவப்பு அரிசியில் இருக்கும் அத்தனை சத்துகளும் இந்த சிவப்பு அவலில் பெறப்படுகிறதா என்பது குறித்து ஆய்வுகள் அதிகமாக தேவைப்படுகிறது.
கலோரிகள்: சத்துக்கள் நிறைந்த சிவப்பு அவலை காலை டிபனில் எடுத்து கொள்ளலாம். அதாவது,1 கப் அவலில், 250 கலோரிகள் இருக்கின்றன.. அதிலும், வறுத்த அவலில் 333 கலோரிகள் இருக்கிறதாம். குழந்தைகளுக்கு தரும்போது, வேகவைக்காமல், பாலில் ஊறவைத்து வெல்லம் கலந்து தரலாம். எந்த பொருளுடனும் சேர்த்து அவல் சாப்பிடலாம். ஆனால், தயிருடன் மட்டும் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. இதனால் அஜீரணம் ஏற்பட்டு, மந்தத்தன்மை ஏற்பட்டுவிடும்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications