மீனில் "இது" மட்டும் சேர்க்காதீங்க.. கோழிக்கறியில் உள்ள சர்ப்ரைஸ்.. நலன் தரும் சிக்கனை விட்றாதீங்க
சென்னை: கோழிக்கறி செய்தால், கண்டிப்பாக கோழியின் கால்களையும் சேர்த்தே வாங்கணுமாம்.. காரணம், சிக்கனில் இருப்பதைவிட, இதன் கால்களில் அதிக சத்துக்கள் உள்ளதாம்.
சிக்கனை பொறுத்தவரை அனைத்து வயதினருமே சாப்பிடக்கூடிய இறைச்சியாகும்.. சிக்கன் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.. அதனால்தான், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் போன்றோருக்கும் கோழிக்கறி சிறந்த உணவாக திகழ்கிறது.

கோழிக்கறி: கொலஸ்ட்ரால் கோழிக்கறியில் இருக்கிறது என்றாலும், நியாசின் என்ற சத்தும் இதில் உள்ளதால், கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது.. அதேபோல, சிக்கனில் செலீனியம் என்ற சத்து உள்ளதால், மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு கோழிக்கறி சிறந்த தீர்வாக அமைகிறது..
வைட்டமின் B, A, D, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் இந்த சிக்கனில் உள்ளன.. வைட்டமின் B5 நிரம்பியிருப்பதால், மன அழுத்தத்தை இந்த கோழிக்கறி நீக்குகிறது.
இதய நோய்கள்: வைட்டமின் B6 உள்ளதால், இதய நோய்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்த உதவுகிறது.. பாஸ்பரஸ், கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கும், பற்களுக்கும் பலத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது. மக்னீசியம் உள்ளதால், பெண்களுக்கு ஏற்படும் வயிறு வலியை போக்குகிறது.
ஜிங்க் உள்ளதால், ஆண்களின் டெஸ்ட்ரோஜன் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.. புரதம் உள்ளதால், பெண்களுக்கு அத்தியாவசிய தேவையாக இந்த சிக்கன் கருதப்படுகிறது.
கோழிக்கறி: ஆனால், கோழிக்கறியுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.. முக்கியமாக, சிக்கனை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், உடல் உபாதைகள் அதிகமாகிவிடுமாம்.. அலர்ஜி, வயிற்றுக்கோளாறுகளை உண்டுசெய்து விடுமாம்.. அதேபோல சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடும்.. கோழிக்கறியுடன் பால் சேர்த்து சாப்பிட்டால், சொறி, வெள்ளைப்புள்ளிகள், அரிப்பு போன்ற தொந்தரவுகளும் ஏற்படும்.
அதேபோல, சிக்கனையும் தயிரையும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.. தயிர் குளிர்ச்சித்தன்மை வாய்ந்தது.. சிக்கன் உஷ்ணத்தன்மை வாய்ந்தது. அதனால், இருவேறு தன்மையையுடைய உணவை சாப்பிட்டால் செரிமான பிரச்சனையை கொண்டுவந்துவிடும்..
புரோட்டீன்: சிக்கனுடன் மீன் சாப்பிடுவதையும் தவிர்க்க சொலகிறார்கள்.. காரணம், சிக்கன், மீன்கள் என இருவகையான இறைச்சியிலுமே புரதம் அதிகமாக உள்ளது.. ஆனால், இரண்டுமே வெவ்வேறு வகையான புரதங்களாம். இவைகளை ஒன்றாக சேர்த்து நாம் சாப்பிடும்போது, எதிர்வினையை உண்டுபண்ணிவிடுமாம்.. எனவே, கோழிக்கறியை பால், தயிர், மீன் போன்றவற்றுடன் சாப்பிடக்கூடாது என்பார்கள்.












Click it and Unblock the Notifications