கிடுகிடுன்னு ஆடும் பற்கள்.. வலுவிழந்த எலும்பு.. உடல் எடையை குறைக்கும் காளான்.. கர்ப்பிணி சாப்பிடலாமா
சென்னை: கோதுமையைவிட, 12 மடங்கு கூடுதலான ஆண்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்த உணவுதான் காளான்.. இந்த காளான்கள் மனித குலத்துக்கு தரும் மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா?
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத சத்து முதல் பல்வேறு உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் குவிந்து கிடைக்கின்றன. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பெரிதும் கை கொடுத்து உதவுவது காளான்கள் என்றே சொல்லலாம். இதற்கு காரணம், காளானில், புரோட்டீன்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

குறைந்த கொழுப்பு: மற்றொருபுறம், கொழுப்புகளும், மாவுச்சத்துகளும் மிக மிக குறைவான அளவில் காணப்படுகின்றன.. இவையெல்லாம் சேர்ந்துதான், ஆரோக்கியமான உணவாக நமக்கு திகழ்கிறது.
குறைந்த அளவு கொழுப்புகளை கொண்டவை என்பதால்தான், உடலிலுள்ள கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கிறது.. லேசான உடற்பயிற்சிகளை செய்து இந்த காளானையும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே, உடல் எடையில் விரைவில் மாற்றம் வருமாம்..
பற்கள் - எலும்புகள்: உடலுறுப்புகளுக்கு அத்தனைக்கும் பலத்தை தரக்கூடிய சக்தி இந்த காளான்களுக்கு உள்ளது.. முக்கியமாக, பற்கள், எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது..
காளான்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு பற்கள் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் வருவதில்லை. பற்கள் மட்டுமல்ல, நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் இந்த காளான்கள் பெரும் தூண்டுகோலாக உள்ளன.. இதற்கு காரணம், காளானில் அளவுக்கு அதிகமான புரோட்டீன் நிறைந்திருப்பதுதான். அதனால்தான், சருமத்தை பராமரிப்பதற்கு, காளான்களை அடிக்கடி சாப்பிட சொல்கிறார்கள்.. முடி நன்றாக வளர வேண்டுமானாலும், காளான்கள் கை கொடுக்கின்றன.
கால்சியம்: அடிக்கடி சமையலில் காளானை சமைத்து சாப்பிட்டு வந்தால், எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் நெருங்காது. காளானில் கால்சியம் சத்து அதிகம் என்பதால், எலும்பு தொடர்பான நோய்கள் எலும்புப்புரை, எலும்பு வலி, எலும்பு சிதைவு போன்றவற்றைத் தடுக்க உதவக்கூடியது என்கின்றன ஆய்வுகள். எலும்புகள் வலுப்படுவதுடன், புதிய எலும்புகளை உருவாக்கவும் காளான் உதவுகிறது..
காளான்களில் சர்க்கரை இல்லை என்பதால்தான், நீரிழிவு நோயாளிகளுக்கும் காளான் உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை காக்கிறது இந்த காளான்.. கோதுமையுடன் ஒப்பிடும்போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான ஆண்டி-ஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன.
மூட்டு வலி: மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள், காளான்களை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.. காளானில் இருக்கும் வைட்டமின் D சத்து எலும்புகளுக்கும், மூட்டுகளுக்கும் வலுவை தருகின்றன..
வயிற்று புண்ணை எதிர்க்கும் குணங்கள் இந்த காளானில் உள்ளன.. மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற வயிறு சம்பந்தமான உபாதைகளையும் இது சரிசெய்துவிடும்.. அவ்வளவு ஏன்? சளி, காய்ச்சல்கூட உங்களை நெருங்கவிடாது செய்துவிடும் இந்த காளான்கள்.
கர்ப்பிணி: காளான்களை கவனமுடன் பார்த்து வாங்க வேண்டும்.. சாப்பிடுவதற்கு ஒவ்வாத காளான்களும் நிறையவே இருக்கின்றன.. எனவே, சாப்பிடத்தகுந்த காளான்களை பார்த்து வாங்குவதுடன், அவைகளை நன்றாக சுத்தம் செய்து, முழுமையாக வேகவைத்த பிறகே சாப்பிட வேண்டும். அதேபோல, தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது இந்த காளான்கள்.. எனவே, பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.












Click it and Unblock the Notifications