தொங்கும் தொள தொள தொப்பை குறையணுமா? கொழுப்பை ஈஸியாக கரைக்க உதவும் பழங்கள்.. வெண்ணெய் பழத்தை விடாதீங்க
சென்னை: உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா? இதோ இந்த குட்டி டிப்ஸை முயற்சித்து பாருங்கள்
உடல் எடையை வெகுவாக குறைக்க முயற்சிப்பவர்களுக்கு உலர் பழங்கள் வெகுவாக கைகொடுத்து உதவுகின்றன. பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சைகள், வால்நட் பருப்புகள் போன்றவைகளையும் காலை உணவில் சேர்த்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இதேபோல, வைட்டமின் C அதிகம் உள்ள உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடுவதால், கூடுதல் பலன் கிடைக்கிறதாம்.. வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனை வைட்டமின் C உணவுகளே நிறைய வழங்குகின்றன. உடலுறுப்புகளை சுறுசுறுப்பாக இயக்ககூடிய சக்தி, இதுபோன்ற வைட்டமின் C சத்துக்களுக்கே அதிகம் இருக்கின்றன.
கொலஸ்ட்ரால்: இந்த வரிசையில, எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த பழங்களையும் சேர்த்து கொள்ளலாம். இதனால், ரத்தத்தில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் என்கிறார்கள்.. அதில் ஒருசில பழங்களை பற்றி பார்ப்போம்.
முதலில் ஆப்பிளை சொல்லலாம்.. ஆப்பிளில் பாலிபினால்கள், நார்ச்சத்து, பைட்டோஸ்டெரால்கள் போன்றவை நிறைந்துள்ளதால், இந்த சத்துக்கள் அத்தனையும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிகாட்ஸ் பழங்களும், ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீராக பராமரிப்பதற்கு உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பேரிக்காய்: உடலிலுள்ள கொழுப்பு சத்துக்களை குறைக்கக்கூடிய சக்தி பேரிக்காய்களுக்கு உண்டு.. காரணம், இதில் பெக்டின் எற் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது.. எனவே, அடர்த்தி குறைந்த கொழுப்பு புரதத்தின் அளவை குறைக்க இந்த பேரிக்காய்கள் பெரிதும் கைகொடுக்கின்றன.
அதுமட்டுமல்ல, கெட்ட கொலஸ்ட்ரால் மூலம் ஏற்படும் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றை தடுக்கக்கூடிய சக்தி இந்த பேரிக்காய்களுக்கு உள்ளது. அடிக்கடி பேரிக்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள்ளேயே இருக்கும் என்கிறார்கள்.
கொலஸ்ட்ரால்: சிட்ரஸ் வகையான ஆரஞ்சு பழங்களில் பைட்டோஸ்டெரால்ஸ் என்ற பொருள் இருப்பதே, அப்பழத்தின் ஸ்பெஷாலிட்டியாகும்.. இது குடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறதாம். எனவே, ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை வெகுவாக கட்டுப்படுத்தலாம்
உணவு சாப்பிடுவதற்கு முன்பு அரை கப் திராட்சைப்பழம் சாப்பிட்டால் தொப்பை குறைவதாக சொல்கிறார்கள். அதாவது தொப்பை கொழுப்பை குறைப்பதுடன், ஒழுங்கற்ற கொழுப்பின் அளவையும் குறைக்கிறதாம். 12 வார ஆய்வின்படி, 3 மாதங்களுக்கு மேலாக உணவுக்கு முன்பு, அரை கப் புதிய திராட்சைப்பழத்தை சாப்பிட்ட, அதிக எடை கொண்டவர்கள் சுமார் 5 கிலோ வரை இழந்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
அவகேடா: இதில் அவகேடா என்று சொல்லப்படும் வெண்ணெய் பழத்தையும் சேர்த்து கொள்ளலாம். ஆரோக்கியமான ஒமேகா -9 கொழுப்பு அமிலங்கள் இந்த பழத்தில் இருப்பதால், சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கிறது. அத்துடன், கொழுப்பை ஆற்றலாக மாற்றுவதை விரைவுபடுத்தவும் உதவுகிறது.
எனவே, உடல் எடை குறைக்க முயல்பவர்கள், எளிதில் ஜீரணமாகக்கூடிய பழங்களை தினமும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்ள வேண்டும்.. குழந்தைகள் தினமும் 1 கப் பழங்களையும், பெண்கள் ஒன்றரை கப் பழங்களையும், ஆண்கள் 2 கப் பழங்களையும் சாப்பிட வேண்டுமாம்!!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications