குண்டா இருக்கீங்களா? கவலைய விடுங்க! உடல் எடையை குறைக்கும் பெருஞ்சீரக தண்ணீர்! ‛டயட்’லாம் வேணாம்!
சென்னை: உணவில் சுவைகூட்டியாகவும், நறுமணத்துக்காகவும் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று தான் பெருஞ்சீரகம். இது உள்ள சத்துகள் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது பலருக்கும் தெரிந்து இருந்தாலும் கூட பெருஞ்சீரகத்தை பயன்படுத்தியே ‛டயட்' எதும் இன்றி உடல் எடையை குறைக்கலாம் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக தான் உள்ளது.
வாங்க.. இந்த செய்தியில் பெருஞ்சீரகத்தை பயன்படுத்தி உடல் எடையை எப்படி குறைப்பது என்பது பற்றி நாம் பார்க்கலாம். நம் வீட்டு சமையலறைகளில் பயன்படுத்தும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. பெருஞ்சீரகம் உணவுக்கு சுவைக்கூட்டியாகவும், நறுமண பொருளாகவும் இருக்கிறது.

அதோடு பெருஞ்சீரகத்தில் கால்சியம், சோடியம், அயர்ன், பொட்டாசியம் உள்ளிட்டவை உள்ளன. இது நமது உடலுக்கான அத்தியாவசிய சத்துகளாகும். இதனால் தான் சமையலின்போது பெருஞ்சீரகம் சேர்ப்பதை பலரும் வாடிக்கையாக்கி கொண்டுள்ளனர்.
மேலும் சிலர் பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மெல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதன்மூலம் வாய் புத்துணர்ச்சி பெறும். இருப்பினும் கூட பெருஞ்சீரகம் உடல் எடையை குறைப்பதில் மிகவும் முக்கிய பங்காற்றுகிறதாம். அதாவது பெருஞ்சீரக தண்ணீரை குடித்து வருவதன் மூலம் உடலில் இருக்கு தேவையற்ற கொழுப்புகள் குறைந்து எடை குறையுமாம்.
அதாவது காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீரை தொடர்ந்து பருகவது என்பது செரிமான சக்தியை அதிகரிக்கும். மலச்சிக்கல், வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளை போக்கும். மேலும் குடல் சுத்திகரிக்கும் செயலையும் இந்த பெருஞ்சீரக தண்ணீர் செய்கிறது.
மேலும் பெருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. கண்கள் தெளிவாக பார்க்க இந்த சத்து மிகவும் அவசியமாகும். இதனால் கண்பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க விரும்புவோர் பெருஞ்சீரக தண்ணீரை பருகலாம். அதோடு பெருஞ்சீரகத்தில் உள்ள பெட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும், இதய ஆரோக்கியத்துக்கும் பக்கபலமாக இருக்கிறது.

பெருஞ்சீரகத்தில் இத்தகைய நன்மைகள் இருந்தாலும் கூட சில குறைபாடுகளும் உள்ளன. இதனால் உடல் எடையை குறைக்கும் வகையில் பெருஞ்சீரக தண்ணீரை குடிப்பதற்கு முன்பு இதனை நன்கு அறிந்து வைத்து கொள்ள வேண்டும். அதாவது வயிறு சார்ந்த பிரச்சனை, வயிற்று வலி பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் பெருஞ்சீரக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மீறினால் இது வயிறு சார்ந்த பிரச்சனையை இன்னும் அதிகமாக்கும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் பெருஞ்சீரக தண்ணீர் பருகுவதை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் Sensitive Skin கொண்டவர்கள் பெருஞ்சீரக தண்ணீர் குடிக்கக்கூடாது. மீறினால் இது தோல் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் பெருஞ்சீரக தண்ணீர் குடிப்பதற்கு முன்பு டாக்டர் ஒருவரை சந்தித்து ஆலோசனை பெற்று கொள்வது முக்கியமாகும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications