சம்மரை விடுங்க.. இனி எப்போதும் மார்கழிதான்! 'அந்த' விஷயத்துல கெத்தா இருக்கனுமா? இத ஃபாலோ பண்ணுங்க
சென்னை: கோடை காலங்களில் மக்கள் தங்களுடைய அன்றாட வேலையை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இப்படி இருக்கையில் செக்ஸ்-க்கு நேரம் ஒதுக்குவது சவாலானதாக இருக்கிறது என்று புலம்புகின்றனர். மட்டுமல்லாது இந்த வெயிலுக்கு உடல் பயங்கர டயர்டாக ஆகிவிடுகிறது என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் இதற்கு மருத்துவர்கள் சில யோசனையை கூறியுள்ளனர். இதன் மூலம் வருடத்தின் அனைத்து மாதங்களையும் மார்கழி மாதமாக மாற்றிவிட முடியும்.
செக்ஸ் - புரிதல்: முதலில் செக்ஸ் என்றால் என்ன என்பது குறித்து புரிதல் வேண்டும். இந்த உலகம் தவிர வேறு எங்குமே உயிரினங்கள் கிடையாது. அப்படி ரொம்பவும் அரிதாக இருக்கும் இந்த உயிரினங்கள் தங்களை மேலும் பெருக்கி வளரதான் பார்க்கும். இதுதான் ஒவ்வொரு உயிரினங்களின் ஜீன்களிலும் அடிப்படையாக எழுதப்பட்டிருக்கும். மனிதனும் இதற்கு விதி விலக்கல்ல. ஆனால் எல்லா உயிரினங்களுக்கும் இனப்பெருக்க காலம் என்று ஒன்று இருக்கும்.

ஒரு சில உயிரினங்களை தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் இந்த குறிப்பிட்ட காலத்தில்தான் இனப்பெருக்கம் செய்யும். ஆனால் இந்த குறிப்பிட்ட சில உயிரினங்கள் எப்போது வேண்டுமானாலும் இனப்பெருக்கம் செய்யும். இந்த லிஸ்ட்டில் டாப்பில் இருப்பது மனித இனம்தான். இதற்கும் காரணம் இருக்கிறது. மற்ற உயிரினங்களின் குட்டிகள் பிறந்த உடன் நடக்க தொடங்கி விடும். ஆனால் மனித இனம் அப்படி கிடையாது. எனவே இந்த குழந்தையை, அதாவது அடுத்த சந்ததியை வளர்க்க வேண்டும்.
அதற்கு ஒரு இணைப்பு தேவைப்படுகிறது. இதுதான் செக்ஸ். இந்த செக்ஸ் தங்களுடைய குழந்தை தானாக எழுந்து நடந்து, ஓடி, ஆடி தனது சொந்த காலில் நிற்கும் வரை பெற்றோருக்கு செக்ஸ் மீது ஆர்வம் இருக்கும். அதன் பின்னர் பெண்களுக்கு மாதவிடாய் தானாக நின்றுவிடும். பின்னர் இந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். ஆக செக்ஸ்க்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறது. சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். கோடை காலத்தில் ஏன் செக்ஸ் ஆர்வம் குறைகிறது?
கோடைக்காலம்: கோடைக்காலத்தில்தான் நமக்கு அதிக பகல் பொழுது கிடைக்கிறது. எனவே உணவு, மற்ற தேவைகளை மனிதன் கோடைக்காலத்தில்தான் சேமித்து வைத்தான். ரொம்ப தூரம் நடந்து வேட்டையாடுவது, இடப்பெயர்வு போன்றவை சம்மரில்தான் நடக்கும் என்பதால் ஆதிகாலத்தில் மனிதன் பிஸியாக இருந்தான். இது தவிர வெயிலின் கொடுமை உடலை சீக்கிரம் டயர்டாக்கிவிடும். எனவே செக்ஸ் மீது இயல்பாகவே நாட்டம் குறைந்துவிடும்.
ஆதி மனிதனின் தொடர்ச்சிதானே நாம் எல்லோரும். எனவே நமக்கும் கோடைக்காலத்தில் கொஞ்சம் ஆர்வம் குறைவாகதான் இருக்கும். ஆனால் இப்போது நாம் ஒன்னும் காடு மேடு சுற்றி வேட்டையாடுவதில்லையே. எனவே சரியான உணவை எடுத்துக்கொண்டால் இயல்பாகவே செக்ஸ் மீது ஆர்வம் அதிகரிக்கும். வாழைப்பழம், தர்பூசணி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் அதிகம் கிடைக்கும்.
பொதுவாகவே எல்லா பழங்களிலும் இது அதிகமாக கிடைக்கிறது என்பதால் பழங்கள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். மட்டுமல்லாது வெயிலில் உடல் களைப்பாகாமல் பாதுகாக்கும்.
மனசு முக்கியம் பிகிலு: அடுத்து மனம். நாம் தற்போது வாழும் காலத்தில் வேலை, வருமானம், குடும்பம், உறவுகள் என எல்லா முனைகளிலிருந்தும் நமக்கு பிரஷர் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த பிரச்னைகளையெல்லாம் மண்டையில் போட்டு குழப்பிக்கொண்டால் அது நமது செக்ஸ் லைஃபை கடுமையாக பாதிக்கும். எனவே தலையை கூலாக வைத்துக்கொள்ளுங்கள். பிரச்னை வந்தால் சமாளிப்போம், முடியவில்லையெனில் கடந்து செல்வோம் என போய்விட்டால் செக்ஸ் லைஃப் ஆசமாக இருக்கும்.
இயற்கை வைத்தியம்: செக்ஸ் பிரச்னையை பொறுத்த அளவில் ஒருமுறைக்கு இருமுறை மருத்துவரை கலந்தாலோசித்து மருந்துகளை எடுக்க வேண்டும். முடிந்த அளவு அந்த மருந்தில் உள்ள சத்துக்கள் எந்த காய்கறியில் அதிகம் இருக்கிறது என்பதை அறிந்துக்கொண்டு அந்த காய்கறி பழங்களை அதிக அளவில் மருத்துவரின் பரிந்துரையோடு எடுத்துக்கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
தூக்கம்: மனிதனின் ஆயுள் நாட்களில் பாதி நாட்கள் அவன் தூக்கத்தில் கழித்துவிடுகிறான். தூக்கம் இல்லை என்றால் நம்மால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே தூங்குவது அவசியம். நன்கு வளர்ந்த மனிதர்கள் 8-9 மணி நேரம் வரை தூங்க வேண்டும். தூக்கம் குறைந்தாலும் செக்ஸில் ஆர்வம் குறையும். எனவே முடிந்த அளவுக்கு எவ்வளவு நேரம் தூங்க முடியுமோ அவ்வளவு நேரம் தூங்கிவிடுங்கள். மேலே குறிப்பிட்ட மனம் சார்ந்த பிரச்னைகளுக்கும் தூக்கம் சிறந்த தீர்வாக இருக்கும்.
சரக்கு: இப்பது ஒரு லைஃப், அதை அனுபவிக்க வேண்டும் என்று பலரும் ஆல்கஹால் உள்ளிட்ட போதைப்பொருட்களை தேடி செல்கின்றனர். இந்த போதை பொருள் ஒன்றே ஒன்றைத்தான் செய்யும். அது மூளையில் உள்ள டொபமைன் அளவை அதிகரிக்கும். இது உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆனால் இதை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் டொபமைன் சுரப்பதில் சில பிரச்னைகள் ஏற்படும். எனவே செக்ஸில் ஆர்வம் குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவை அனைத்தையும் ஃபாலோ செய்தால் சம்மராவது, வெயிலாவது இனி எல்லா நாட்களும் உங்களுக்கு மார்கழி மாசம்தான்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications