ஃப்ரூட் மோமோஸா? பால், சீஸ், பழம் எல்லாம் சரி! கன் பவுடரை மறந்துட்டீங்களே! நெட்டிசன்கள் அதகளம்
டெல்லி: மோமோஸ் என்ற பெயரில் டெல்லியில் ஃப்ரூட் மோமோஸ் விற்பனை செய்யப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணவை டெல்லியில் எந்த இடத்திலும் பார்க்க முடியாது என்றும் அந்த மோமோஸை விற்பனை செய்யும் நபர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஆவிகளில் வைத்து சாப்பிடும் உணவுகள் உடலுக்கு நன்மையை கொடுக்கும் என்பார்கள். இவை எளிதில் ஜீரணம் ஆகும். இதனால்தான் சிறிய குழந்தைகள் முதல் பல்லு போன தாத்தா, பாட்டி வரை இந்த உணவுகளையே உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதற்கு உதாரணமாக இட்லி, கொழுக்கட்டை, வேக வைத்த காய்கறிகள், இடியாப்பம், ஆப்பம் போன்றவைகளை சொல்லலாம். இதில் சிறிது கூட எண்ணெய் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படுகிறது. இவை உடலுக்கு உபாதைகளை கொடுக்காது.
அது போல் மோமோஸ் என்ற ஒரு உணவு இருக்கிறது. இது கிட்டத்தட்ட கொழுக்கட்டை போன்றது. ஆனால் இதில் காய்கறிகள், இறைச்சிகள் உள்ளிட்டவைகள் சேர்க்கப்படும். இதையும் ஆவியில்தான் வேக வைப்பார்கள். ஆனால் என்ன ஒரு பிரச்சினை இது மைதாவில் தயாரிக்கப்படுகிறது.
வெள்ளை நிறத்தில் இருக்கும் மைதா, சர்க்கரை உள்ளிட்டவைகளை உண்ணக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும் இந்த மைதாவை அடிக்கடி உண்பது உடல் நலனிற்கு கேடு விளைவிக்கும் என்கிறார்கள். ஆனால் இன்றைய குழந்தைகள், இளசுகளின் ஃபேவரைட் உணவு என்றால் அது மோமோஸ்தான்.
மைதா மாவினால் சிறிய பூரி போல் திரட்டிக் கொண்டு அதன் உள்ளே உங்களுக்கு விருப்பமான பூரணத்தை வைத்து அதை ஆவியில் வேக வைக்க வேண்டும். கிட்டதட்ட கொழுக்கட்டைபோல் இருந்தாலும் அதை வித்தியாசமாக மடிப்பதுதான் மோமோஸின் ஸ்பெஷாலிட்டி!
இந்த மோமோஸை எண்ணெயில் போட்டு பொறித்தும் சாப்பிடுகிறார்கள். இந்த நிலையில் டெல்லியில் விற்கப்படும் மோமோஸ் வித்தியாசமானது. இது பழத்தில் தயாரிக்கப்படுவதாகும். இதன் விலை ரூ 170 ஆக உள்ளது. இந்த சர்ச்சைக்குரிய ஃப்ரூட் மோமோஸை தயாரிக்கும் ஒரு தெருவோர வியாபாரியின் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
4 பழங்கள் கொண்ட இந்தியாவின் வித்தியாசமான ப்ரூட் மோமோஸ் என்ற கேப்ஷனுடன் இந்த மோமோஸ் தயாரிக்கப்படுகிறது. பால், சீஸ், கிரீம், பழங்கள் உள்ளிட்டவை சேர்க்கப்படுகிறது. அத்துடன் உப்பு, மிளகு, மூலிகைகள் உள்ளிட்டவையும் சேர்க்கப்படுகிறது.
அந்த வீடியோவில் அவர் எப்படி மோமோஸ் தயாரிக்கிறார் என்ற காட்சியும் அடங்கியுள்ளது. அவர் வறுத்த பன்னீர் மோமோஸை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் காட்சிகளும் வைரலாகி வருகிறது. டெல்லியில் இந்த உணவை எங்கும் நீங்கள் காண முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோமோஸ் தயாரிப்புக்கு பல்வேறு விர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் ஒரு நெட்டிசன், நகைச்சுவையாக ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ளார். அதாவது சகோதரரே எல்லாவற்றையும் சேர்த்தீர்கள், ஆனால் வெடிகுண்டை சேர்க்க மறந்துவிட்டீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிலர் பழங்கள் ஆரோக்கியமானதுதான், அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் மைதா உணவில் பழங்களை சேர்த்து விற்பனை செய்வது தவறானது. அதிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஆரோக்கியம் என்ற பெயரில் இப்படி ஒரு ஆபத்தத்தை அந்த கடை வியாபாரி செய்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications