வெறும் வயிற்றில் இந்த பழங்களை எல்லாம் தப்பித்தவறி சாப்பிடாதீங்க.. அப்புறம் நாள் முழுக்க கஷ்டப்படனும்
சென்னை: உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பழங்கள் சாப்பிடுவது அவசியம் என்றாலும் ஒரு சில பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நம் உடல் நலனுக்கு தீங்கை ஏற்படுத்தி விடும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அஜீரணம், நெஞ்சு எரிச்சல் என்பது உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்தி நாள் முழுக்க தொந்தரவு செய்யக்கூடும். அது என்னென்ன பழங்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பழங்கள் சாப்பிடுவது அவசியம். உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான அளவில் கிடைக்க மூன்று வேளை சாப்பாடு மட்டும் போதாது. ஊட்டச்சத்து மிக்க பழங்களை சாப்பிட வேண்டும். பழங்களை பொறுத்தவரை அதை சாப்பிடும் போது ஊட்டச்சத்து உடனடியாக உடலுக்கு கிடைக்கும்.

அன்றாட உணவுடன் பழங்களை சாப்பிடும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்... பழங்கள் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.. ஆனால், காலையில் வெறும் வயிற்றில் சில பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது இல்லையாம்.. அஜீரணம், நெஞ்சு எரிச்சல் என்பது உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்தி நாள் முழுக்க தொந்தரவு செய்யக்கூடும். காலையில் வெறும் வயிற்றில் எந்த உணவுகளை எல்லாம் சாப்பிடக் கூடாது என்ற விவரங்களை இங்கே காணலாம்..
தர்ப்பூசணி: கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்க கூடிய பழங்களில் ஒன்று தர்ப்பூசணி. நீர்ச்சத்து மிக்க இந்த தர்ப்பூசணி பழங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க கூடியது. கோடைக்காலத்தில் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றாக தர்ப்பூசணி உள்ளது. தர்ப்பூசணி பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிலருக்கு அசவுகர்யத்தை கொடுக்க கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். வயிறு உப்புசம் போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதோடு, அஜீரண கோளாறை ஏற்படுத்துமாம்.

மாம்பழம்: முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் சுவை மிக்கது. மாம்பழத்தின் சுவைக்கு பலரும் அடிமையாகி இருப்பார்கள்.. தேன்சுவை கொண்ட மாம்பழங்கள் கோடை காலத்தில் அதிகம் கிடைக்க கூடிய பழங்களில் ஒன்றாகும். மாம்பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை மற்றும் நார்ச்சத்து மிகுந்தவையாக உள்ளது. மாம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் அஜீரணக் கோளாறை ஏற்படுத்தி அசவுகர்யத்தை கொடுக்கும்.

அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழத்தில் ப்ரோமிலைன் உள்ளது. இது உணவை நொதிக்க வைப்பதற்கான முக்கிய பொருளாகும். அன்னாசி பழத்தில் அதிக அளவில் ப்ரோமிலைன் உள்ளதால் அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனால், வயிறு உபாதைளும் அதிகரிக்கும்.

வாழைப்பழம்: வாழைப்பழத்தில் அதிக அளவில் சர்க்கரை சத்து உள்ளது. எனவே வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்க வைக்கும். இதனால், வயிறு உப்புசம், கிரம்ப்ஸ் போன்றவை ஏற்படும்.

பப்பாளி பழங்கள்: அன்னாசி பழங்களை போலவே பப்பாளி பழங்களிலும் பப்பைன் என்ற என்சைம் உள்ளது. இது உணவில் உள்ள புரோட்டீனை உடைக்கும். எனவே பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இது வயிற்றில் அசவுகர்யத்தை ஏற்படுத்தலாம்..

ஆப்பிள்: ஆப்பிள் பழங்கள் அதிக நார்சத்து கொண்டவை. ஆப்பிள் பழத்தில் வைட்டமின் சி உள்ளது. உடலுக்கு அதிக ஊட்டச்சத்து கொடுக்கும் ஆப்பிள் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வாயு பிரச்சினை மற்றும் அடிக்கடி வயிறு சார்ந்த உபாதைகள் ஏற்படுபவர்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

திராட்சை: திராட்சை பழங்கள் சாப்பிடுவது மிகவும் உள்ளது. திராட்சை பழத்திலும் வைட்டமின் சி உள்ளது. திராட்சை பழத்தில் டார்டாரிக் ஆசிட் உள்ளது. வைட்டமின் பி, சி மற்றும் கே ஆகிய சத்துக்களை கொண்டதாகும். திராட்சை பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அஜீரணக் கோளாறுகளுக்கும் வழிவகுக்கும்.

-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications