முருங்கை இலை மேஜிக்.. "முருங்கைக்கீரை" ஒரு கைப்பிடி போதும்.. தொள தொள தொப்பை தொலைந்தே ஓடும்..அற்புதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருங்கையில் வேர் முதல் இலை வரை அவ்வளவும் மருந்துகள் அடங்கியிருக்கின்றன.. இந்த இலையில் மட்டுமே ஏகப்பட்ட சத்துக்கள் காணப்படுகின்றன.. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முருங்கை இலை பெஸ்ட் சாய்ஸ்.

முருங்கை இலையில், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும், எதிர்ப்பு பண்புகள் என நிறைந்து காணப்படுகின்றன. அத்துடன், முருங்கை இலைகள் குறைந்த கொழுப்பு, ஊட்டச்சத்துகளை மிகுதியாக கொண்டவை..

சத்துக்கள்: முருங்கை இலைச் சாற்றில் ஐசோதியோசயனேட் மற்றும் நியாசிமினின் ஆகியவை உள்ளதால், அவை இதயத்தமனிகள் தடிமனாக இருப்பதை தடுக்க பயன்படுகிறது.. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு காரணமாகிறது.

ஜூஸ் நன்மைகள்: ஜூஸ் அல்லது டீ போல இதை தயாரித்து சாப்பிடலாம்.. எடை குறைப்பில் மிகப்பெரிய பங்கு இந்த முருங்கை இலை டீ-க்கு உள்ளது.. அதாவது, இந்த முருங்கை இலையை காய வைத்து, பொடியாக்கி, காலை வேளையில், டீயில் கலந்து முருங்கை இலை டீயாக குடித்து வரலாம்... உடல்எடை குறைக்க உதவுவதுடன், இதை குடிப்பதால், தோல் நோய்கள் மொத்தமாக தீரும்.. நீரிழிவு நோயாளிகளுக்கு டீ அல்லது காப்பியுடன் முருங்கை இலைப் பொடியை கலந்து உட்கொள்வதன் மூலம், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்..

Have lots of medicinal properties Drumstick leaves and Health tips of drumstick leaves juice

அல்லது ஜூஸ் போலவும் தயாரித்து சாப்பிடலாம்.. முருங்கை இலைகளை நன்றாக கழுவி ஒரு கைப்பிடி அளவிற்கு கொழுந்து முருங்கைகளை தனியாக எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

முருங்கை ஜூஸ்: தோல் நீக்கிய சிறிய இஞ்சித் துண்டையும், சிறிது நீரும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இவைகளை வடிகட்டி, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்தால் ஜூஸ் ரெடி.

அல்லது, ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையில், இஞ்சிக்கு பதிலாக 1 நெல்லிக்காய் சேர்த்து, தண்ணீர் விட்டு நன்கு அரைத்து கொண்டு, அதை வடிகட்டிவிட வேண்டும். இதை தினம் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலே போதும்.. உடல்எடை குறைவதற்கு பேருதவி புரியும்.. நீரிழிவை கட்டுப்படுத்தலாம்.

எலும்புகள்: தினமும் காலை உணவுக்கு அரை மணிநேரத்திற்கு முன்னதாகவோ, அல்லது பின்னதாகவோ இந்த பானத்தை குடிக்கலாம். வாரம் ஒரு முறை விடுமுறை விட்டு குடிக்கலாம். இது வயிற்றில் உள்ள அழுக்கு மற்றும் வாயுவை முற்றிலும் சுத்தப்படுத்தும். செரிமான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது. குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. எலும்புகளுக்கு அபரிமிதமான பலம் கிடைக்கும்

முருங்கை இலையை சுத்தம் செய்து, மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும்... இந்த இலைகளிலுள்ள இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். சிலர் கேழ்வரகு மாவில் அடை செய்யும்போது, முருங்கை இலை கொழுந்தை அதில் சேர்த்து செய்வார்கள்..

முருங்கை இலை: கேழ்வரகும் இரும்பு சத்து.. முருங்கையும் இரும்பு சத்து.. இந்த 2 இரும்பு சத்தும் ஒன்று சேரும்போது, கூடுதல் நன்மை கிடைக்கும்.. பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிற்கு ஒரு முருங்கை மரத்தினை அந்த காலத்தில் பெரியவர்கள் வைத்ததில் ஆயிரம் நன்மைகள் இருப்பதை என்பதை மறுக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+