60 வயதிலும் இளமையாக இருக்கும் நீடா அம்பானியின் வெயிட் லாஸ் சீக்ரெட்! இந்த உணவுகளைதான் உட்கொள்கிறாரா?
மும்பை: இந்தியாவின் பில்லியனர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானிக்கு 60 வயதாக போகிறதா? பார்த்தால் தெரியவில்லையே! முகத்தில் கூட வயோதிகத்திற்கான எந்த சுருக்கங்களும் இல்லையே என பலர் பார்த்து வியக்கிறார்கள்.
3 குழந்தைகளுக்கு தாய், பேரன் எடுத்த பாட்டி இப்படி பல அடையாளங்கள் நீடாவுக்கு இருந்தாலும் அவர் எப்படி எப்போதும் போல் ஒரே மாதிரி இருக்கிறார் என குழம்புவோருக்கு ஒரே பதில்தான்! உடற்பயிற்சி.. யோகா.. ஃபிட்னஸ் இவைதான்.
நீடா அம்பானி சமூக ஆர்வலர், அவர் கணவரின் ரிலையன்ஸ் நிறுவனத்தை கவனித்து வருகிறார். நடுநடுவே புதிய புதிய பிராஜெக்ட்களுக்கு கணவருக்கு உதவி வருகிறார். இப்படி இருக்கும் நீடா அம்பானி எப்படி உடற்பயிற்சி செய்வார் என கேட்கிறீர்களா?

ஸ்டிரிக்ட் டயட்: நீடா உடற்பயிற்சி மட்டும் செய்ய மாட்டார். அத்துடன் உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடித்து வருகிறார். பல கோடிகள் வீட்டில் புரண்டாலும் உணவு விஷயத்தில் நீடாவும் முகேஷும் ரொம்ப ஸ்டிரிக்ட்டாக இருப்பார்களாம். முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் எத்தனை உடல் பருமனாக இருந்தார்.
18 கிலோ எடை குறைப்பு: அவர் உடல் எடையை குறைக்கும் போது நீடாவும் அவருடன் சேர்ந்து வொர்க் அவுட்களை செய்தாராம். அதன் மூலம் நீடா 18 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த உடற்பயிற்சி செய்வது தொடங்கப்பட்டாலும் அந்த ஃபிட்னஸ் மீது அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக அவர் அதையே தினசரி தொடர்ந்து வருகிறார்.
40 நிமிடம் உடற்பயிற்சி: ஃபிட்னஸ்ஸாக இருந்தால்தான் எத்தனை வயதானாலும் ஆக்ட்டிவ்வாக இருக்க முடியும் என நீடா நம்புகிறார்கள். அவர் தினந்தோறும் ஒரு நாள் கூட விடாமல் உடற்பயிற்சி செய்வாராம். 40 நிமிடங்களுக்கு தனது வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சிகளை செய்வாராம். யோகா செய்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறாராம். நீச்சல் பழக்கத்தையும் டான்ஸ் பயிற்சியையும் எப்போதாவது செய்து வருகிறார்.
உடல் ஆரோக்கியம்: தினமும் சீக்கிரம் தூங்கச் செல்வது, காலையில் சீக்கிரம் எழுவதை நீடா வழக்கமாக கொண்டிருக்கிறார். நீடா எப்போதும் ஆரோக்கியமான உணவையே உட்கொள்கிறார். கொழுப்பு, கார்பேஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து புரதம், நார்சத்து கொண்ட உணவுகளையே உட்கொள்கிறார். அவர் காலையில் உடற்பயிற்சிகளை செய்துவிட்டு காலை சிற்றுண்டியாக உலர்ந்த பழங்கள், முட்டையின் வெள்ளை கரு, ஏதேனும் ஒரு பழத்தில் போடப்பட்ட ஜூஸ்- இதுதான் காலை டிபன்.
அமினோ அமிலங்கள்: இதன் மூலம் அமினோ அமிலங்களின் அளவுகளை மெயின்டெய்ன் செய்து தேவையான சத்துகளை பெற்று ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்திருக்கிறார். நீடா அசைவம் சாப்பிடாதவர். அவர் சிகரெட் பிடிக்க மாட்டார், மது அருந்த மாட்டார் (பணக்காரர்கள் பார்ட்டியிலும் நீடா எப்போதும் டீ டோட்டலராம்). மதியம் பச்சை காய்கறிகள், கீரை வகைகள் அல்லது காய்கறி சூப்பை எடுத்துக் கொள்வார். இதன் மூலம் அவரது தோல் பளபளக்கிறது. நாள் முழுவதும் பழங்களையே சாப்பிடுவாராம்.
இரவு சப்பாத்தி: அது போல் தண்ணீரை நிறைய குடித்து அதன் மூலம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவாராம். மேலும் அவருக்கு நீரிழிவு நோயோ ரத்த அழுத்தமோ இல்லை. இரவு உணவாக நீடாவுடன் முகேஷும் இணைந்து குஜராத்தி ஸ்டைலில் எண்ணெய் இல்லாத சப்பாத்தி, பருப்பு, லென்டில்ஸ் ஆகியவற்றை உட்கொள்வார்களாம். இதை தவிர நீடாவின் தினசரி மெனு மாறவே மாறாதாம். தனது குழந்தைகளுக்கும் அவர் உடற்பயிற்சியை செய்வதை ஊக்குவிப்பாராம்.
-
Reliance: 6ஆவது ஆண்டாக ஊதியமில்லாமல் வேலை செய்யும் முகேஷ் அம்பானி! ஏன் என்னாச்சு? -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications