தொந்தியும் தொப்பையுமா இருக்கீங்களா.. உடல்எடை குறைய "இதை" பண்ணுங்க.. மின்னல் வேகத்தில குறையும் வெயிட்
சென்னை: உடல் எடை குறைய வேண்டும் என்றால், பச்சை காய்கறிகளும், உடற்பயிற்சியும் மிக மிக அவசியம்.. இவைகளை தவிர்த்துவிட்டு, உடல் எடையை குறைப்பது சாத்தியமும் கிடையாது.
எனினும், அவைகளுடன் சேர்ந்து ஒரு சில டிப்ஸ்களையும் பின்பற்றினால், விரைவில் எடைகுறைய உதவியாக இருக்கும்.. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், காலையில் எழுந்ததுமே தண்ணீர் குடிப்பதில் இருந்து டயட்டை துவங்க வேண்டும்.
ஒரு டீஸ்பூன் அளவில் பெருஞ்சீரக விதையை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை விரைவாக குறையும்.

பாலக் பன்னீர்: உடல் எடையை குறைப்போர், பாலக் பன்னீரை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும்.. தொப்பையில் உள்ள கொழுப்பை கரைப்பதில், இந்த பாலக் பன்னீர் வெகுவாக உதவுகிறது.. சப்பாத்தியுடன் அல்லது கருப்பு கவுனி அரிசியுடன் பாலக் பன்னீரை சேர்த்து சாப்பிடும்போது, ஆரோக்கியம் இரட்டிப்பாகிறது.. இதை சாப்பிட்ட பிறகு, வயிறு நிரம்பின திருப்தி கிடைக்கிறது.. இதனால் மற்ற தின்பண்டங்களை சாப்பிடும் எண்ணமும் நீங்குகிறது..
அடுத்ததாக, தந்தூரி சிக்கனும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.. தந்தூரி சிக்கன் உடலுக்கு கேடு என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. அது தவறு.. இந்த சிக்கனில், கொழுப்பு குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் இருப்பதால், சிறந்த உணவாக அமைந்துவிடுகிறது.
பொரித்த உணவு: வறுத்த, பொரித்த உணவுகளுடன் ஒப்பிடும்போது, இதில் கலோரிகள் குறைவுதான்.. ஆனால், முடிந்தவரை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடலாம். புரோட்டீன் அதிகம் எடுத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு சிக்கன் + மீன், இந்த இரண்டையுமே தந்தூரியாக செய்து சாப்பிடலாம்..
அதேபோல, ஓட்ஸ் ஒரு சத்தாண உணவு.. நார்ச்சத்து, புரதம் உட்பட நிறைய சத்துக்கள் அதில் உள்ளன.. இரவு அல்லது காலை இதில் ஏதாவது ஒருவேளையில் ஓட்ஸ் சாப்பிடலாம். ஆனால், உப்பு சேர்க்கப்பட்ட ஓட்ஸ் பேக்குகளைவிட, மசாலா ஓட்ஸை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது ஆரோக்கியதுக்கு நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.
உடல்எடை: உடல்எடைக்கு பெஸ்ட் காய்கறிகள், வாழைத்தண்டு, புடலங்காய், பீர்கங்காய், பீன்ஸ், அவரைக்காய், பூசணி, கோவைக்காய், கீரைகள், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் எப்போதும் கலோரிகள் குறைவாகவே இருக்கும். ஆளி விதைகள், முளைகட்டிய பயறு வகைகள், அவகோடா போன்ற நார்ச்சத்து உணவுகளைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மீன் சாப்பிடுவதாக இருந்தால், சாலமன், மத்தி, நெத்திலி போன்ற ஒமேகா 3 அதிகமுள்ளவைகளை தேர்வு செய்யலாம்.
அதேபோல, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, ஒரு கப் பழங்களை சாப்பிடலாம்.. இதை சாப்பிடுவதால்,சாப்பாட்டின் அளவு கணிசமாக குறையும். சாப்பிடப்போகும் அரை மணி நேரத்துக்கு முன்பு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதால், வயிறு நிறைந்த உணர்வு வரும்... பசி எடுக்கும்போதெல்லாம் வயிறு எரிச்சலும் சேர்ந்தே வரும்.. அப்போது சூடான தண்ணீர் குடித்தால், அமில எரிச்சல் சரியாகும்..

திருப்தி உணவு: எப்போது சாப்பிட்டாலும், தரையில் உட்கார்ந்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் சீராகும்.. உணவின் அளவும் குறைவதை நம்மால் உணர முடியும்.. அதேபோல, மெதுவாகவும், மென்றும் சாப்பிட்டால், குறைந்த அளவே சாப்பிடுவோம்.. இதுவே, வேகமாக சாப்பிட்டால் நம்மையும் அறியாமல் அதிகமாக சாப்பிட்டுவிடுவோம்.. மென்று விழுங்குவதே பாதி ஜீரணத்தை தந்துவிடுமாம்.. அத்தடன் வயிற்றின் செரிமான வேலையும் குறைவதுடன், கொழுப்பும் சேராது.
வெள்ளைத் தட்டில் சாப்பிட்டால், உணவு அதிகமாக இருப்பது போல நம் கண்களுக்கு தெரியுமாம். வயிறு நிறைய சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும் என்கிறார்கள்..
எளிது: உடல் எடை குறைய, இப்படி எத்தனையோ விதமான டிப்ஸ்கள் இருக்கின்றன என்றாலும், உடற்பயிற்சி + மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறைதான் மிகமிக முக்கியம்.. இவை மட்டும் இருந்தால் போதும், உடல் எடையை குறைப்பது எளிதாகிவிடும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications