Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க "உடல் எடை" குறையணுமா.. வெயிட்டை குறைத்து "சிக்குனு" ஆகணுமா? இந்த "கருப்பு கஞ்சிய" ட்ரை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்க உடல் எடையை குறைக்க வேண்டுமா? அதுவும் இயற்கையான முறையில், வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு உணவுமுறைதான் இந்த கஞ்சி.

கருப்பு கவுனி என்பது ஒரு அரிசி வகையை சேர்ந்ததாகும்.. இது வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது...
இது கருப்பு கலரில் இருப்பதால் அந்த கலருக்கு ஏற்றவாறே இந்த அரிசியை கருப்பு கவுனி என்று சொல்கிறார்கள்.. இதில் நார்ச்சத்தும், ஊட்டச்சத்தும் அதிகமாக நிறைந்துள்ளது..

Health and lifestyle news are these the health benefits of black rice karuppu kavuni

அரிசி: இந்த அரிசியில் இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற பண்பு உள்ளது.. மேலும், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம் போன்ற சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு அத்தனையும் நன்மையை தரக்கூடியதுதான்.. முக்கியமாக உடல் எடையை குறைப்பவர்கள், இந்த கருப்பு அரிசியை பயன்படுத்தினால், கூடுதல் நன்மை கிடைக்கும் என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகமாக உள்ளவர்களுக்கு, கொலஸ்ட்ராலை குறைப்பது என்பது பெரும்பிரச்சனையாகிவிடுகிறது.. எத்தனையோ முயற்சிகளை எடுத்தும் போதுமான பலன் கிடைப்பதில்லை.. அப்படிப்பட்டவர்கள், தங்களது உணவில் கருப்பு கவுனி அரிசியை சேர்த்துக்கொண்டால், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்... கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, பக்கவாதம் வராமலும் தடுக்கிறது.

சர்க்கரை அளவு: அதேபோல, சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு அருமருந்து என்றே சொல்லலாம்.. கருப்பு கவுனி அரிசியை சமைத்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு பிரச்சனையில் இருந்தும் மெல்ல விடுபடலாம் என்கிறார்கள். செரிமானப் பிரச்னைகள், வாயு சம்பந்தப்பட்ட பிரச்னை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னையையும் சரி செய்யக்கூடியது.

இதயம் சம்பந்தமான பிரச்சனையை போக்குவதிலும் மெகா காரணியாக விளங்குகிறது இந்த கருப்பு அரிசி. இதயம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள், கருப்பு கவுனியில் சாப்பாடு செய்து சாப்பிட்டால் இதயம் பலமடையக்கூடும்.. இந்த வகை கொழுப்புதான் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, இதய பாதிப்பு மற்றும் இன்ன பிற இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துகிறது என கூறப்படுகின்றது.

நிவாரணம்: இதில் உள்ள அந்தோசயனின் சத்துக்கள், ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் அதிகளவு சளி உற்பத்தி ஆகாமல் தடுத்து, அவர்களுக்கு நிவாரணம் அளிக்கிறதாம்.

இந்த அரிசியில் ஏகப்பட்ட புரதசத்துக்களும், நார்சத்துக்களும் அடங்கி உள்ளன.. இந்த நார்ச்சத்துதான், 'LDL' என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க பெரிதும் துணைபுரிகிறது.. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெருக்கி தரும் அருமருந்துதான் இந்த அரிசி.

கருப்பு கவுனி: ஆனால், இந்த அரிசியினை அதிக அளவில் உட்கொண்டால், ஆபத்து என்கிறார்கள்.. அதனால், சரியான அளவில் சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்.. மேலும், இந்த வகை அரிசியில் நார்ச்சத்து மட்டுமே அதிகம் உள்ளதால் இந்த அரிசியை கொஞ்சம் சாப்பிட்டாலும், அதிகளவு உணவு சாப்பிட்ட உணர்வைத் தந்துவிடுகிறது.. கருப்பு கவுனி அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகளை வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 முறை எடுத்துக்கொள்வதால் நன்மை கிடைக்கும்.

கருப்பு கவுனி அரிசி கொண்டு நாம் தினமும் சாப்பிடும் உணவுகளான இட்லி, தோசை போன்றவற்றை சமைக்கலாம். இனிப்பு வகைகளை பொறுத்தவரையில் பாயசம், இனிப்பு பொங்கல் போன்றவற்றை கருப்பு கவுனி அரிசி கொண்டு சமைக்கலாம். மதியவேளைகளில் நாம் உண்ணக்கூடிய சாதத்தையும் கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யலாம். ஆனால், உடை எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், கஞ்சி வைத்து சாப்பிடலாம். அந்த கஞ்சியை எப்படி தயார் செய்வது தெரியுமா?

கஞ்சி செய்முறை: ஒரு டம்ளர் (250கிராம்) கருப்பு கவுனி அரிசி எடுத்து மூன்று முறை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.. பிறகு, ஒரு டம்ளர் அரிசிக்கு 8 டம்ளர் தண்ணீர் அல்லது அதற்கு மேலும் எடுத்துக் கொள்ளலாம். 12 டம்ளருக்கு மிகாமல் எடுத்து 12 மணி நேரம் ஊறவைக்கவும்(சாதாரண தண்ணீர் அல்லது சுடுநீர்).. அடுத்து, அரிசியை வேக வைக்கவேண்டும்.. ஆனால், எவ்வளவு அரிசி எடுக்குறோமோ, அதனுடன் 5 மடங்கு தண்ணீர் கஞ்சிக்குக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும்.

முக்கியமாக, 5 மடங்கு தண்ணீருக்குக் குறைவாகப் பயன்படுத்தக்கூடாது. குக்கரில் அரிசியுடன் 100 கி பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு, சிறிதளவு சீரகம், 5 மிளகு, 5 பல் பூண்டு, 10 - 15 நறுக்கிய சின்ன வெங்காயம், சிறிதளவு மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் கடலெண்ணெய் அல்லது சமையல் எண்ணெயுடன், அரிசியின் அளவில் 5 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக 20 நிமிடம் கொதிக்க விடவும்... இறுதியில், குக்கரை மூடி 12 விசில் வரை விட்டு குக்கரை இறக்கிவிட்டு, குக்கரை திறந்ததும் உப்பு சேர்க்கவும்.

உடைஎடை: அதிக நேரம் கருப்பு கவனி அரிசியை வேக வைத்தால் ருசி அதிகமாகவே கிடைக்கும்.. இந்த குறிப்பிட்ட பொருட்கள் இல்லாமல், அரிசியை மட்டும் தனியாக வேக வைத்தும் கஞ்சி செய்யலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+