Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மஞ்ச மஞ்சளா பல்லு இருக்கா.. கவலைய விடுங்க.. இந்த 7 மேட்டர் இருக்கே.. நீங்களே ஆச்சரியத்தை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய புற அழகை தீர்மானிக்கும் உறுப்புகளில் முக்கியமானது பற்கள் ஆகும்.. வெண்மையான பற்கள் இல்லாமல், மஞ்சள் கறை படிந்து காணப்பட்டால், அது முகப்பொலிவையே மொத்தமாக பாதித்துவிடும். இதற்கு என்ன செய்யலாம்?

பற்களில் கறை படிவதற்கு 2விதமான காரணங்கள் இருக்கின்றன... பல் சரியாக துலக்காவிட்டாலும், அல்லது சாப்பிட்ட பொருள்கள் பற்களில் தேங்குவதாலும், கறைகள் ஏற்பட்டுவிடும்..

Health and lifestyle news, Do you know how to remove yellow stains from teeth

பெரும்பாலும் மஞ்சள் கறையே பற்களில் படிந்திருக்கும் என்றாலும், சில சமயம், கருமை, பழுப்பு, நிறமாகவும் அழுக்குகள் படிந்திருக்கும்..

பற்களில் படிந்திருக்கும் பிளேக்குகளில், கால்சியமும் பாஸ்பரசும் இணைந்திருக்கும்.. இவைகள்தான், நாளடைவில் கறைகளாக மாறிவிடுகின்றன.. இந்த கறைகளை நீக்காவிட்டால், இவைகளிலுள்ள பாக்டீரியாக்கள் உற்பத்தி அதிகமாகி, பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகரித்து விடும் அபாயம் உண்டு என்கிறார்கள். இவைகளை எளிய முறையில் வீட்டு மருத்துவத்திலேயே நீக்கிவிடலாம் என்கிறார்கள். இதற்காக சில டிப்ஸ்கள் சொல்லப்படுகின்றன.

முதல் டிப்ஸ்: ஒரு பெரிய கிண்ணத்தில், பேக்கிங் சோடா + உப்பு இந்த இரண்டையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை பிரஷ்ஷால் டூத் பேஸ்ட் போல எடுத்து பற்களில் நன்றாக தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்... பிறகு, தண்ணீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து கலந்து அதை சிறிது சிறிதாக வாயில் ஊற்றி சில விநாடிகள் வைத்திருந்து வாயை கொப்பளிக்க வேண்டும்.

அடுத்து, சாதாரண நீரில் ஒருமுறை வாயை கொப்பளிக்க வேண்டும்.. இவைகளை செய்யும்போது, பற்களில் உள்ள கடினமான கறைகள் சற்று தளர்வடைந்து இருக்கும்... இந்த சமயத்தில் டூத் பிக் எடுத்து பற்களின் மேல் படிந்துள்ள கறைகளை மெதுவாக நீக்கலாம். இறுதியாக, ஆன்ட்டி செப்டிக் மௌத் வாஷில் வாய் கொப்பளிக்க வேண்டும். ஒருவேளை மஞ்சள் கறை அதிகமாக இருந்தால், தொடர்ச்சியாக 2 முறை கூட செய்யலாம்.. அடுத்தடுத்த நாட்களிலும் செய்யும்போது, மஞ்சள் கறை காணாமல் போயிடும்.

இரண்டாவது டிப்ஸ்: ஸ்ட்ராபெர்ரி பழத்தை கொண்டும், மஞ்சள் கறையை நீக்கலாம்.. அந்த பழத்தை மசித்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து கொண்டு, இவைகளை டூத் பிரஷ்ஷால் எடுத்து பற்களில் கறைகள் உள்ள பகுதியில் மிதமாக தேய்க்க வேண்டும்.. எலுமிச்சை + ஸ்டிராபெர்ரி இவைகள் இரண்டிலுமே அமிலத்தன்மை உள்ளதால், பற்களின் கறைகள் மேல் வினையாற்றி அவற்றை போக்கி சுத்தம் செய்ய உதவும்.. இந்த முறையை மாதத்திற்கு 2 முறை செய்து வந்தாலே போதும்..

மூன்றாவது டிப்ஸ்: 2 ஸ்பூன் பேக்கிங் பவுடர் எடுத்துக் கொண்டு, அதை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.. இதைக்கொண்டு, டூத் பிரஷ்ஷால் தேய்த்து வந்தாலே பற்களில் உள்ள கறைகள், பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.. இதற்கு காரணம், பேக்கிங் பவுடரில், சோடியம் பை கார்பனேட் உள்ளதால், கறைகளை அடியோடு நீக்கிவிடும்..

நான்காவது டிப்ஸ்: ஒயிட் வினிகரை பயன்படுத்தியும் கறைகளை நீக்கலாம்.. இந்த ஒயிட் வினிகரில் ஆன்டி பாக்டீரியா அடங்கி உள்ளது.. இதனால், கறைகள், அழுக்குகளை சரிசெய்ய முடியும்.. அரை கப் தண்ணீரில் 2 ஸ்பூன் வினிகரும் ஒரு ஸ்பூன் உப்பும் கலந்து அந்த நீரால் தினமும் இரண்டு முறை வாய் கொப்பளித்து வந்தாலும் பலன் தரும்..

ஐந்தாவது டிப்ஸ்: ஆரஞ்சு தோலை பயன்படுத்தியும் கறைகளை போக்கலாம்.. ஆரஞ்சு பழத்தின் தோலை, பற்களில் கறை உள்ள இடங்களில் சில நிமிடங்கள் வைத்து தேய்த்து வரவேண்டும்.. அல்லது, ஆரஞ்சு பழத்தின் தோல்களை மிக்ஸியில் அரைத்து அதை பற்களில் ஸ்கிரப்பாக பயன்படுத்தி வந்தாலும் பற்களில் உள்ள அழுக்குகள் மற்றும் கறைகள் நீங்கும்.

ஆறாவது டிப்ஸ்: கற்றாழை ஜெல்லை வைத்தும் கறைகளை போக்கலாம்.. இதிலுள்ள கசப்புத் தன்மை பற்களின் கறைகளைப் போக்கக்கூடியதாகும்.. 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 4 ஸ்பூன் கிளிசரின், 4 ஸ்பூன் பேக்கிங் சேடா, 1 எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை கால் கப் தண்ணீரில் ஊற்றி கலந்துகொள்ள வேண்டும்.. இந்த கலவையை டூத் பிரஷ்ஷில் பற்களை தேய்க்க வேண்டும்.. பிறகு, விரல்களாலும் ஸ்கிரப் செய்ய வேண்டும்.. இதை வாரத்தில் 3 முறை செய்தாலே போதும்..

ஏழாவது டிப்ஸ்: தக்காளி + ஸ்டிராபெர்ரி பழத்தின் சதைப்பற்றை மசித்து பற்களின் மேல் தடவி 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் கைகளாலோ அல்லது டூத் பிரஷ் கொண்டோ தேய்த்தால் பற்களில் இருக்கும் கறைகள் குறைய ஆரம்பிக்கும். இந்த முறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.

வைட்டமின் சி: இவைகளை தவிர, உணவுப்பழக்கத்திலும் சில மாற்றங்களை செய்து கொள்ளலாம்.. பற்களில் உள்ள மஞ்சள், பழுப்பு கறைகள் போக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகள் கைகொடுக்கின்றன.. இவைகளிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் பற்களில் கறைகள் உண்டாகக் காரணமாக இருக்கும் பாக்டீரியாக்களை தாக்கி அழிக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.

அதேபோல, காரமான உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் பற்களில் கறைகள் ஏற்படாதாம். காரணம், வாயில் சலைவாய் உற்பத்தியை இந்த காரம் அதிகரிக்கும்.. இதனால், பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் அழுக்குகள், கறைகள் உண்டாகாமல் சுத்தம் செய்யும் பண்பு உண்டு. எனவே, தினமும் 4 மிளகை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், அது சலைவாயை அதிகம் உற்பத்தி செய்வதுடன், பற்களில் கறைகள் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.

கொய்யாப்பழம்: எல்லாவற்றையும்விட, முக்கியமானது கொய்யா பழம்.. இந்த கொய்யா மற்றும் அதன் இலைகள் பற்களில் உண்டாகும் பிளேக் மற்றும் கறைகளை அகற்ற உதவும்... இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் ஈறுகளில் உண்டாகும் வீக்கம், பற்களில் ஏற்படும் தொற்றுக்களைக் குறைத்து பற்களுக்குப் போதிய பாதுகாப்பை வழங்குகிறது.. தினமும் 2 கொய்யா இலைகளை எடுத்து சுத்தம் செய்து அதை மென்று துப்பினாலே போதும். பற்கள் பளிச் பளிச்தான்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+