ஹெல்த்.. சுளுக்கு படக்குனு பிடிச்சுக்குச்சா.. கவலைய விடுங்க.. கைவசம் இவ்ளோ மேட்டர் இருக்கே.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுளுக்கு பிடித்து கொள்வது எதனால் தெரியுமா? யார் யாருக்கு சுளுக்கு பாதிப்பு ஏற்படும், அதற்கான எளிய மருத்துவம் என்னவென்று தெரியுமா?

நம்முடைய கை, காலை தேவையில்லாமல் அசைத்துவிட்டாலோ, அல்லது திடீரென எழுந்து நிற்கும்போதோ அல்லது திரும்பிப் படுக்கும்போதோ அல்லது காயங்கள் ஏற்படும்போதோ சுளுக்கு ஏற்படுவது இயல்பானதுதான்..

Health and lifestyle news, do you know whats muscle sprain and what are the home remedies

தசைப்பிடிப்பு: அதேசமயம், கால்சியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் குறைபாடு இருந்தாலும், திசுக்கள் சோர்வடைந்து, சுளுக்கு ஏற்பட்டுவிடும்.. அடிக்கடி சுளுக்கு பிடித்துக்கொள்கிறது என்றால், கால்சியம், பொட்டாசியம் குறைபாடும்தான் காரணமாக இருக்கலாம்.. அதேபோல, உடலுக்கு எந்தவிதமான அசைவுகளையும் தராமல், ஒரே இடத்தில், உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவர்களுக்கும் சுளுக்கு ஏற்பட்டுவிடும்.. உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கும் தசைபிடிப்பு அல்லது சுளுக்கு அடிக்கடி ஏற்படும்.

இதற்கு ஆங்கில மருத்துவத்தில் நிறைய மருந்துகள் இருக்கின்றன. எனினும், வீட்டிலேயே எளிமையான முறையில் சுளுக்கை சரிசெய்ய முடியும் என்கிறார்கள்.. நம்முடைய முன்னோர்கள் அன்று பயன்படுத்திய சில வீட்டு வைத்தியங்கள் இன்றும் உபயோகமாகி கொண்டிருக்கின்றன என்றும், இவைகளில் முதலில் முயற்சி செய்துபார்த்துவிட்டு, அப்போதும் சுளுக்கு அல்லது தசைபிடிப்பு நீங்காவிட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

வீட்டு வைத்தியம்: சுளுக்கு என்பது தசைகளை மட்டும் பாதிப்பதல்ல.. எலும்புகளையும் சேர்த்தே பாதிக்கும்... அதனால்தான், நம் முன்னோர்கள், எலும்புகளை உருவிவிட்டு, சுளுக்கை நீக்குவார்களாம்.. காரணம் நம் உடலின் திசுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்பதால், எலும்பையும், தசையையும் தனித்தனியே பிரிக்க முடியாது.. "சாதாரண சுளுக்கு" நீங்குவதற்கு வீட்டு வைத்தியத்தில் சொல்லப்படும் டிப்ஸ்கள் இவைகள்தான்:

கழுத்து பகுதியில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டால், ஜாதிக்காயை உடைத்து, அதனுடன் சிறிது பால் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.. பின்னர் அதை வெதுவெதுப்பாகும்வரை நீரில் கொதிக்க வைத்து, சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட வேண்டும்.. மறுநாள், மீண்டும் இதே போல பற்று போட வேண்டும். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் பற்று போட்டால் சுளுக்கு மெல்ல மறையும்.

கல் உப்பு: முதுகு பகுதியில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டால், பூண்டுடன் சிறிது கல்உப்பு சேர்த்து நன்கு இடித்து, சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டால் சரியாகிவிடுமாம். கால் கைகளில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டால், பிரண்டையை நன்கு பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். பிறகு அதை இதமான சூட்டில் சுளுக்கு உள்ள காலிலோ அல்லது கைகளிலோ தடவி வந்தால் சுளுக்கு நீங்கிவிடும்.

சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் கற்றாழை ஜெல் கொண்டு மசாஜ் செய்து வந்தாலும் தசைப்பிடிப்பு நீங்கும். ஆயுர்வேதத்தில் தசை பிடிப்பு பிரச்சினைகளுக்கு கற்றாழைதான் மிக முக்கிய மருந்தாக உள்ளது.. தசை வலி, தசை பிடிப்பு, சுளுக்கு போன்றவற்றிற்கு கிராம்பு எண்ணெய்யை தடவி, மசாஜ் செய்து வந்தால் சுளுக்கு நீங்கும்.. தினமும், 3 அல்லது 4 முறை கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர, சுளுக்கு விரைவில் சரியாகும்.

வெங்காயம்: கணுக்கால், பாதங்களில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டால், இதற்கு வெங்காயம் நல்ல தீர்வை தருகிறது.. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு சுத்தமான துணியில் வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் நன்கு இறுக்கமாக கட்டிவிட வேண்டும். அந்த வெங்காயத்தின் சாறு பாதிக்கப்பட்ட இடத்தில் படுமாறு வைத்திருக்க வேண்டும்.. தினமும் 2 முறை இப்படி செய்யலாம். ஒரு முறை செய்யும்போது 3 மணி நேரம் வரை பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டி வைத்திருந்தால், நன்மை பிறக்கும்.

ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி- இக்ப்ளமேட்டரி, நம் உடலில் ஏற்படும் வீக்கத்தை போக்க உதவுகிறது.. தசைப்பிடிப்பு ஏற்பட்ட பகுதியில் ஆலிவ் எண்ணெயை மிதமான சூட்டில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்தால் வலி குறையும். சூடான நீரில் 3 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை கலந்து ஒத்தடம் தந்தாலும், சுளுக்கு சரியாகும்.

கற்றாழை: விளக்கெண்ணெயை சுத்தமான துணியில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும்.. ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு அந்த பகுதியை துடைக்க வேண்டும்.. இதனால் வீக்கம் குறைய துவங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+