ஓமவள்ளி இலை.. வாயு முதல் வாதம் வரை அடித்து விரட்டும் மேஜிக் கீரைகள்.. ஓமவல்லி இலையின் சூப்பர் பலன்கள்
சென்னை: மருத்துவ குணம் கொண்ட மூலிகையான ஓமவள்ளியின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? இவைகளை சமையலில் எப்படியெல்லாம் பயன்படுத்தி கொள்ளலாம் தெரியுமா?
ஓமவள்ளி இலைகளை, கற்பூரவல்லி இலைகள் என்றும் சொல்வார்கள்.. செரிமான பிரச்சனைக்கும், நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைக்கும், மிகச்சிறந்த தீர்வாக அமைவது இந்த இலைகள்தான்.
இந்த இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். இதனால் ஜலதோஷம், தலைவலி நீங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் தீரும்.

அதிகப்படியான கபம் பிரச்சனை இருப்பவர்கள், இந்த இலையை அரைத்து நீர் கலந்து கொதிக்க வைத்து, ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் நிவாரணம் கிடைக்கும். ஓமவள்ளி இலையை தண்ணீரில் சேர்த்து சுடச்சுட ஆவி பிடித்தாலும் தீர்வு கிடைக்கும்.
ஓமவள்ளி மருந்து குழம்பு: இந்த இலைகளை அலசி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலியில் மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, வெந்தயம், தனியா என அனைத்தையும் தனித்தனியாக சேர்த்து வறுத்து, மிக்சியில் பவுடராக்கி கொள்ள வேண்டும்.. அதே வாணலியில் சிறிது எண்ணெய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி இதையும் தண்ணீர்விட்டு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, நறுக்கி வைத்துள்ள ஓமவள்ளி இலைகளை போட்டு வதக்கி, அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அரைத்து வைத்துள்ள விழுதை கொட்டி, அதற்கு பிறகு, வறுத்து அரைத்த பொடியையும் சேர்த்து கிளறி இறக்கினால் மருந்து குழம்பு தயார். சளி, கபம், ஜூரம், நீர்க்கோவை, தலைபாரம் போன்றவற்றுக்கு சிறந்த தீர்வு இந்த குழம்பு.
மார்பு சளி: இந்த ஓமவள்ளி இலையை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, சிறிது பனகற்கண்டு சேர்த்து குடித்து வந்தால், உடலுக்கு அவ்வளவும் நன்மை பயக்கும். இந்த இலையின் சாறு எடுத்து, சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சளி, இருமல் பிரச்சனை தீரும்.. மார்பு சளி கட்டுக்குள் வரும். இந்த இலைகளில் ரசம் வைக்கலாம்... பஜ்ஜி செய்யலாம்.. பக்கோடாக்கள் செய்யலாம்.
இந்த இலைகளை கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, கடலை மாவுடன் சேர்த்து, ஓமவள்ளி பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம். அல்லது காய்கறி சூப்களிலும் இந்த இலைகளை சேர்க்கலாம்.
வாயு பிரச்சனை: வைட்டமின் C மற்றும் வைட்டமின் A ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், சருமத்துக்கும், கண்களுக்கும் பாதுகாப்பை தருகின்றன.. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது.. மலச்சிக்கல் முதல் வாயு பிரச்சனை வரை தீர்ந்துவிடும். முழங்கால் வலி, மூட்டுவலி முதல், கீல்வாதம்வரை மருந்தாக பயன்படுகிறது இந்த இலைகள். இந்த இலைகள் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன என்று ஆய்வுகளும் சொல்கின்றன.
முக பொலிவுக்கும் இந்த இலைகள் பயன்படுகின்றன.. ஓமவள்ளி இலைகளை, கடலை மாவு, அரிசி மாவு போன்றவற்றுடன் ரோஸ் வாட்டர் கலந்து மிக்சியில் அரைத்து, முகத்தில் பேஸ்ட் போல தடவி 20 நிமிடம் ஊறவைத்து கழுவிவிட வேண்டும். வாரம் 2 அல்லது 3 முறை செய்தாலே, முகப்பொலிவு கூடிவிடும்.












Click it and Unblock the Notifications