படகு விபத்து! தமிழ்நாடு அரசு சார்பில்.. சந்தோஷ் ஹடிமானி IPS வியட்நாம் விரைய முதல்வர் விஜய் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வியட்நாம் படகு விபத்தில் தமிழர்கள் 10 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் அவர்களது உடல்களை பத்திரமாக, தமிழகம் கொண்டுவர தமிழக அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. இதற்காக ஐபிஎஸ் அதிகாரியான சந்தோஷ் ஹடிமானி IPS வியட்நாம் போக முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.

விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கான மருத்துவ உதவி.. உட்பட அனைத்து உதவிகளையும் இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்திருக்கிறது. இப்படி இருக்கையில், உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

வியட்நாமில் என்ன நடந்தது?

Vijay

வியட்நாமில் சுற்றுலாவுக்காக இந்தியர்கள் சிலர் சென்றிருக்கின்றனர். இதில் 32 பேர், தீவு சுற்றுலாவுக்கு சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற படகு ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 10 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களின் உடல்களை தமிழகத்திற்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்த தொடங்கியிருக்கின்றனர்.

இதையடுத்து தமிழக அரசு மத்திய வெளியுறவுத்துறையுடன் இணைந்தது தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இலவச உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

இப்படி இருக்கையில்தான் தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஐபிஎஸ் அதிகாரியான சந்தோஷ் ஹடிமானி வியட்நாம் செல்ல உத்தரவிடப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் விஜய் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+