விசாரணையை வச்சுக்கிட்டு இஷ்டத்துக்கு பேசும் முதல்வர் விஜய்! சிபிஐயிடம் திமுக புகார் மனு!
சென்னை: கரூர் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்திருந்த முதலமைச்சர் விஜய், அக்குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்கியிருந்தார். பின்னர் மக்கள் மத்தியில் அவர் பேசியிருந்த விஷயங்கள் திமுகவினரிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. இப்படி இருக்கையில், முதல்வரின் பேச்சு குறித்து, திமுக சிபிஐயிடம் புகார் மனு அளித்திருக்கிறது.
கடந்த ஆண்டு விஜய் கரூர் வந்திருந்தபோது, அவரை காண மக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில், 41 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில், தேர்தலில் பெற்றி பெற்று முதலமைச்சராக தேர்வானதையடுத்து நேற்று விஜய் கரூருக்கு சென்றிருந்தார். அவரது வருகையும், அரசு பணிக்கான ஆணை கொடுக்கப்பட்டதும், மக்களிடையே பேசியதும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக தவெக கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள் கூட, அரசு பணி ஆணை வழங்கப்படுவதுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
அதேபோல திமுக தலைவர்களை அட்டாக் செய்து விஜய் பேசியிருந்ததும் விமர்சனங்களை உருவாக்கியிருந்தது. இப்படி இருக்கையில் விஜய்யின் பேச்சு விசாரைணையை பாதிக்கும் என்று திமுக சிபிஐயிடம் புகார் அளித்திருக்கிறது.
41 பேர் மரணத்திற்கு திமுகவும், காவல்துறையும்தான் காரணம் என்று முதல்வர் விஜய் பேசியிருந்தார். இந்த பேச்சு விசாரணையை பாதிக்கும் என்று சிபிஐக்கு அளிக்கப்பட்ட புகாரில் திமுக கூறியிருக்கிறது. விசாரணையை பாதிக்கும் என்பதால் விஜய் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி சிபிஐக்கு அளித்துள்ள புகாரில் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே நீதிமன்ற விவகாரத்தில் திமுக நெருப்பாக களமிறங்கியிருக்கிறது. குறிப்பாக அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் திமுக வைத்த வாதங்கள் தீயாய் இருந்தன. அதேபோல, விஜய் கரூருக்கு போவதற்கு முன்பு செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்று தவெக போட்டிருந்த பிளானில்.. நீதிமன்றம் மூலம் மண்ணை வாரி போட்டியிருந்தது திமுக.
இதன் தொடர்ச்சியாக தற்போது விஜய்யை குறி வைத்து சிபிஐக்கு புகாரை நகர்த்தியிருக்கிறது திமுக. சிபிஐ இந்த புகாரை பெரியதாக எடுத்துக்கொள்ளுமா? அல்லது கண்டுக்கொள்ளாமல் தவிர்க்குமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications