நாலஞ்சு இலை போதும்.. வெறும் வயிற்றில் இந்த கொழுந்து சாப்பிட்டு பாருங்க.. காத்திருக்கும் பெரிய அதிசயம்
சென்னை: அறுசுவைகளில் ஒன்றான கசப்பு சுவையை நாம் எந்த அளவுக்கு ஒதுக்காமல் உணவில் சேர்த்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு இனிமையான வாழ்வு கிடைக்கும்..
கசப்பு என்றாலே கண்முன் வருவது பாகற்காய், வேப்பிலை போன்றவைதான். இவை இரண்டுமே சர்க்கரை நோயாளிகளின் அருமருந்தாகும்.. அதிலும் இந்த வேப்பிலையானது முழுவதுமே மருத்துவம்.

வேப்பிலை: ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதால், ஆயுர்வேதத்தில் வேம்பு-க்கென்றே ஒரு தனி இடம் உள்ளது..
இந்த இலைகள்தான் ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கிறது.. வேப்ப இலையை நாலஞ்சு எடுத்து, தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே எத்தனையோ பிரச்சனைகள் தீர்க்கின்றன.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.. தினமும் 5 முதல் 6 வேப்ப இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். புற்றுநோய் வளர்ச்சியை தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
சுவாசம்: சுவாசம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த இலை ஒரு தீர்வை தரும்.. தொற்றுக்களில் இருந்து நம்மை காப்பது இந்த வேப்பிலைதான்.. வெயில் காலங்களில் ஏற்படும் அம்மை போன்றவைகளுக்கு, வேப்பிலையை தவிர வேறு எதையுமே யோசிக்க முடியாது.. அம்மை நோய் புண்களின் தீவிரத்தை தடுப்பதில் வேப்பிலைக்கு பெரும் பங்கு இருக்கிறது.
சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்குக் கிருமிநாசினியாக உதவுவது இந்த வேப்பிலைதான். வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசி வந்தால், பித்த வெடிப்பு, கால் பாத எரிச்சல், நகச்சுத்தி குணமாகும்.
இந்த இலையை அரைத்து சருமத்தில் தடவி வந்தால், சொரி, சிரங்கு உட்பட எல்லாமே பறந்துபோய்விடும். சருமமும் காக்கப்படும். இந்த இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனை தீரும்.
வேப்பிலை சாறு: வேப்ப இலை சாறுடன் தேன் கலந்து குடித்துவந்தால், மஞ்சள் காமாலை பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.. மேலும், கல்லீரலில் தொந்தரவு இருந்தாலும் சரி, அதற்கும் இந்த இலை நிவாரணத்தை தரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இந்த வேப்ப இலை சாறு, ரத்தத்தை சுத்திகரிக்க செய்து, கெட்ட கொழுப்பையும் குறைக்க உதவும்.
சர்க்கரை நோயாளிகள் இதனை அடிக்கடி சாப்பிடலாம்.. அதாவது, ஒரு லிட்டர் நீரில், 20 வேப்பிலையை போட்டு, அந்த நீரை பாதியாகும் வரை நன்கு கொதிக்க வைத்து, இலைகளை வடிகட்டி குடித்து வந்தால், அவ்வளவும் நல்லது. சாப்பாட்டுக்கு முன், அரை டம்ளர் மட்டும் குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள்.
குடல் புழுக்கள்: குழந்தைகள் நிறைய இனிப்புகளை சாப்பிடுவதால், அவர்களது வயிற்றில் குடல் புழுக்கள் பிரச்சினை இருக்கும். பெரியவர்களுக்கும் குடல் புழுக்கள் பிரச்சினை ஏற்படும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு வேப்பிலைதான்.
குழந்தைகளுக்கு கொழுந்து இலைகளை தரலாம். இதில் அவ்வளவாக கசப்பு இருக்காது. லேசான இனிப்பு சுவையும் இருக்கும் என்பதால், அந்த கொழுந்து இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, குழந்தைகளுக்கு தரலாம். இதனால் வயிற்று பூச்சிகள் வெளியேறி, வயிறு சுத்தமாகும்.
அதேபோல, வேப்பங்கொழுந்தை அரைத்து, உருண்டை செய்து, தேனில் நனைத்து காலையில் விழுங்கினால், உடலில் ஏற்படும் எந்தவித அலர்ஜியும் காணாமல் போகும். வேப்ப இலையை நன்கு அரைத்து உடலில் பூசி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளித்தாலும், சருமத்தில் உள்ள அலர்ஜி காணாமல் போகும். வேப்பிலையை அரைத்துக் கட்டினால், ஆறாத ரணம்கூட ஆறும்.. பழுத்து உடையாத கட்டியும் உடைந்து குணமாகும்.
கொரோனா: வேப்பிலையுடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவினால், சொறியும் சிரங்கும் பறந்தோடும்.. வேம்பில் ஒரு வகையான மலைவேம்பின் சாற்றினை குடித்துவந்தால், டெங்கு ஜூரம் கட்டுப்படும்.. இந்த அளவுக்கு மருத்துவ குணத்தை நிரப்பி வைத்திருப்பதால்தான், இந்த கொடூர கொரோனா நேரத்திலும் நம்மை இந்த வேப்பிலை கைவிடவில்லை.












Click it and Unblock the Notifications