கீரைகளில் பெஸ்ட் நறுந்தாளி..பளபள சருமத்துக்கு தாளிக்கீரை.. ஆண்மை குறைபாட்டை போக்கும் பலே தாலிக்கீரை
சென்னை: ஆண்மை குறைப்பாட்டினை போக்குவதற்காகவே உள்ள பிரத்யேக கீரைகள் மிக சொற்பமாகவே இருக்கின்றன. அதில் தவிர்க்க முடியாததுதான் இந்த தாலிக்கீரை.. இதன் பிற நன்மைகள் என்னென்ன? இதனை எப்படி உணவில் சேர்த்து கொள்வது தெரியுமா?
குளிர்ச்சியை தரக்கூடிய இந்த தாளிக்கீரைகள்.. கிராமப்புறங்களில் இந்த கீரைகளை அதிகமாக காணலாம்.. வேலிகள், சிறு காடுகள் ஆகியவற்றில் காணப்படும் கொடியினமாகும்.. புறநகர்ப்பகுதிகள், காட்டுப்பகுதிகளிலும் இந்த கீரைக்கொடி வளரும்.. நறுந்தாளி கீரை என்றும் இதற்கு மற்றொரு பெயர் உண்டு.

குளிர்ச்சி: இந்த செடியின், பூக்கள், கீரைகள், என அத்தனையுமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கும்.. ஆனால், பெரும்பாலும், இந்த இலைகளைதான் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உள் உறுப்புகளில் ஏற்படும் புண், அழற்சி, வாய்ப்புண், சிறுநீர்ப்பாதையில் தோன்றும் நோய்களை இந்த இலைகள் தீர்க்கக்கூடியது.. உடல் கொதிப்பு, எரிச்சல் போக்கும். அதனால்தான், இந்த இலைகளை அரைத்து உடலில் தலைமுதல் கால்வரை தேய்த்து குளித்து வந்தால் உடல் அரிப்பு நீங்கும் என்பார்கள்.. இதனால் தோல் நோய்களும் அணுகாது. சருமம் பளபளப்பு அடையும்.
புண்கள்: வயிற்றுப்புண், வாய்ப்புண்களை ஆற்றக்கூடியது. ஆடு, மாடுகளுக்கும் இந்த கீரை உணவாகிறது.. அடிக்கடி தாளிக்கீரை சாப்பிட்டு வருபவர்களுக்கு குடல் புண்கள் ஏற்படுவதில்லையாம்.
பொதுவாக, ஆண்மை குறைபாட்டை தீர்ப்பதற்கு, பிரதானமாக 5 வகையான கீரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.. தூதுவளை, பசலைக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை போன்றவற்றுடன் சேர்த்து இந்த தாளிக்கீரையையும் பரிந்துரைப்பார்கள்..
காமம் பெருக்கும் வல்லமை படைத்தது. எனவே, விந்தணு குறைபாடுகளை இந்த கீரை தீர்க்கிறது.. இந்த இலையை சுத்தம் செய்து பருப்புடன் சேர்த்து கடைந்து குழம்பாகவோ, கூட்டாகவோ சமைத்து சாப்பிடலாம்.
புண்கள்: அதேபோல, குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு.. உள் உறுப்புகளில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு..












Click it and Unblock the Notifications