Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருங்கைக்கீரையை விடுங்க.. இந்த கீரையில் இவ்ளோ இருக்கா? கீரைகளை செய்யும்போது கவனம்.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீரைகள் ஏன் நமக்கு மிகவும் அவசியமாகின்றன.. எனினும், கீரைகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? எந்த உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது தெரியுமா?

40-க்கும் மேற்பட்ட கீரைகள் இருக்கின்றன.. ஒவ்வொரு கீரையும், ஒவ்வொரு தனித்துவம் உண்டு.. தனித்தனி மருத்துவ நன்மைகளும்உண்டு. எனினும், சில குறிப்பிட்ட நன்மைகள் அனைத்து கீரைகளிலுமே பொதுவாக கிடைக்கின்றன. சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் சி போன்ற முக்கிய மூலப்பொருட்கள் அதிகம் உள்ளன..

Health Benefits of Agathi Keerai and why dont you Eat Fish and Spinach with Curd

கீரைகள்: கீரைகளை சாப்பிடுவதால் ரத்த விருத்தி அதிகமாகும்.. ஹீமோகுளோபின் பிரச்சனை தீருவதுடன், ரத்த சுத்திகரிப்புக்கும் கீரைகள் நல்லது.. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். கீரை பொரியல், கீரை கூட்டு, கீரை குழம்பு, கீரை மசியல், கீரை சப்பாத்தி இப்படி பல விதங்களில் கீரைகளை சமைத்து சாப்பிடலாம்.

கீரைகள் என்றாலே சத்துக்கள்தான் என்றாலும், அந்த சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமானால், முறையாக சமைக்க வேண்டும்.. அதேசமயம் கீரைகளை அதிகம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

அளவுக்கு அதிகமான கீரை சாப்பிட்டால், உடலில் நச்சு விளைவை உண்டுபண்ணிவிடுமாம். அதிக நார்ச்சத்து வாயு, வீக்கம், பிடிப்புகள், வயிற்று கோளாறுகள் ஏற்பட்டுவிடும்.. அதனால், சிறுநீரகக்கல் பாதிப்பு இருப்பவர்கள், நிறைய கீரை சாப்பிடக்கூடாது.. இதனால், ஆக்ஸாலிக் அமிலம் அதிகமாகி, பிறகு, அதனை வெளியேற்றுவது சிரமமாகிவிடும்.

கீரைகள்: மூட்டு பிரச்சினை இருப்பவர்களும், மூட்டு வலி, வீக்கம் உள்ளவர்களும் நிறைய கீரை சாப்பிடக்கூடாது.. கீல்வாதம் பிரச்சனைக்கு ஆளாக நேரிடும்.. கீரைகளில் அமிலம் துத்தநாகம், மெக்னீசியம், கால்சியத்துடன் இணையும்போது, தாதுப்பற்றாக்குறையை உண்டாக்கிவிடும்.

அதேபோல, தயிருடன் கீரையை சாப்பிடக்கூடாது.. காரணம் அஜீரணம் ஆகிவிடும் என்ற பயம்தானே தவிர, வேறெதுவும் இல்லையாம். கீரையில் உள்ள பச்சையம் மற்றும் அதில் உள்ள நார்சத்துகளை ஜீரணிக்கக் கூடிய நொதிகள் இரவில் குறைவாகவே சுரக்கும்.. அதனால் கீரை ஒருவித மந்த நிலையை உருவாக்கிவிடும். இந்த கீரைகளால் அதிக கலோரிகள் கிடைக்கின்றன. இதனால் ஜீரணத்தில் சிக்கல் ஏற்படடலாம். அஜீரணம் என்றால், வயிற்றுப்போக்கு, வாந்தி வரலாம்.

பசலைக்கீரை: பசலைக் கீரையுடன் எள் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.. இறைச்சியுடன் கீரையை சேர்த்து சாப்பிடக்கூடாது.. செரிமானக்கோளாறு ஏற்படுவதுடன், கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாம்.. எனவே, கருவாடு, மீன், நண்டு போன்ற கடல் உணவுகள் சாப்பிடும்போது மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது.

அகத்திக்கீரைக்கு, மருந்துகளை முறிக்கும் தன்மை உண்டு. அதனால், சித்த மருந்துகள் சாப்பிடும்போது இந்த கீரையை சாப்பிடக்கூடாது. அதாவது, மருந்தாக செயல்படவேண்டியது அதற்கு எதிராக செயல்பட்டு சொறி சிரங்கை ஏற்படுத்திவிடும் என்பார்கள்.

மாரடைப்பு: அகத்திக்கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது... மது அருந்தியபிறகு, இந்த அகத்திக்கீரையை சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மாரடைப்பு, இதயம் தொடர்பான பாதிப்புகள் வருமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+