Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோற்றுக்கற்றாழை.. "இந்த" நோயைகூட துரத்தியடிக்கும் கற்றாழை.. ஜெல் + ஜூஸ் = சர்வரோக நிவாரணி கற்றாழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு செடியில் இத்தனை நன்மைகள் ஒளிந்திருக்கிறதா? என்று ஆச்சரியத்தை தருவதுதான் சோற்றுக்கற்றாழை.. பார்ப்பதற்கு முள் போலவே தெரியும் என்றாலும், அதனுள் இருக்கும் மருத்துவ குணத்தை யாராலும் மறுத்துவிட முடியாது.

இந்த கற்றாழையில் எத்தனையோ வகைகள் உண்டு.. இதில், சோற்றுக்கற்றாழைதான், மருத்துவத்தை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது.. பார்ப்பதற்கு முள் செடிதான்.. ஆனால், பலவித மருந்துகள் தரும் நன்மையை, ஒரு சிறிய துண்டு கற்றாழை தந்துவிடும்.. அந்த அளவுக்கு மருத்துவ நன்மைகளை தரக்கூடியது இந்த சோற்றுக்கற்றாழை.

கற்றாழையில் வைட்டமின் B, C சத்துக்களை உள்ளடக்கியது இந்த கற்றாழை.. வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் தான் மருத்துவ குணம் அதிகம். ஆனால், இதை பயன்படுத்துவதற்கென சில முறைகள் உள்ளன.

Health Benefits of Aloe Vera and Do you know Aloe Vera Juice is the Excellent diet for all

கற்றாழைகள்: கற்றாழையிலுள்ள மஞ்சள் நிறத்தில் பாலை வடித்துவிட்டு, அதன் தோலையும் நீக்க வேண்டும். இப்போது, சதைப்பகுதியை மட்டும் எடுத்து, குறைந்தது 10 முறையாவது கழுவ வேண்டும்.. காரணம், இந்த கற்றாழையின் மேல்பகுதியில் அலோனின் என்ற கெமிக்கல், நமக்கு உபாதைகளை தந்துவிடும். அதனால்தான், அந்த கசப்பு போகும்வரை, கற்றாழை ஜெல்லை கழுவ வேண்டும் என்பார்கள்.

இந்த கற்றாழையுடன் தேன் சேர்த்து, மிக்ஸியில் ஜூஸாக அரைத்து வைத்து இந்த ஜூஸை அப்படியே குடித்தால், பெண்களுக்கான மாதவிலக்கு பிரச்சனைகள் நீங்கும். மலச்சிக்கலை நீக்கும்.. ரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்பினை வராமல் தடுக்கும்..

உடல் எடை குறைய: உடல் எடையை குறைக்க வேண்டுனால், இந்த சோற்றுக்கற்றாழை மிகச்சிறந்த மருந்தாகும்.. தினமும், வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை குடித்துவந்தால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடை குறைந்துவிடும். அதனால்தான், உடல்எடை குறைய வாக்கிங், ஜாக்கிங் செய்யும் பகுதிகளில், கற்றாழை ஜூஸ் கடையை கட்டாயம் வைத்துவிடுகிறார்கள் வியாபாரிகள்.

கற்றாழை குளிர்ச்சியை தரக்கூடியது. எனவே, மோருடன் சேர்த்து குடிக்கும்போது, உடல் குளிர்ச்சி பெறும்.. கற்றாழையின் சதைப்பகுதியை அரைத்து கொண்டு, அதனுடன் எலுமிச்சம் சாறு, சிறிது கல் உப்பு சேர்த்து குடித்தால், உடல் சூடு நீங்கும்.. குடல்புண்ணும் ஆறும்.. நீர்க்கடுப்பு, வயிறு எரிச்சல்களும் தணியும்..

தாம்பத்திய உறவு: தாம்பத்திய உறவு சிறக்க, கற்றாழையின் வேர்களை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி எடுத்து, சுத்தமாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, இட்லி பானையில் பால் சேர்த்து, ஆவியில் வேர்களை வேகவைத்து எடுத்து, நன்றாக காயவைக்க வேண்டும். இறுதியில் இதை பொடி செய்து வைத்து கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் பால் கலந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்பார்கள்.

சிலர், இந்த சதைப்பகுதியை தண்ணீரில் நன்றாக கழுவி, மோருடன் சேர்த்து அரைத்து, கல் உப்பு + பெருங்காயம் + இஞ்சி சேர்த்து தாளித்து குடிப்பார்கள்.. கோடை வெயில் தணியும்வரை இந்த மோர் குடித்துவந்தால், எந்த சரும பிரச்சனையும் அண்டாது, அத்துடன், குளிர்ச்சியும் கிடைக்கும். சிலர் இந்த கற்றாழையின் சதைப்பகுதியை வைத்து, குழம்பு செய்வார்கள்.. தோசையும் செய்வார்கள்..

அலர்ஜி: இதனால், உடலில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.. கற்றாழை ஜூஸ் குடித்து ஒரு மணி நேரத்துக்கு எதையும் குடிக்காமல் இருப்பது நல்லது. அதேபோல, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற பெண்கள், அலர்ஜி உடையவர்கள் டாக்டரிடம் ஆலோசித்துவிட்டே கற்றாழை ஜூஸை பயன்படுத்த வேண்டும்.

சருமத்துக்கு இந்த கற்றாழை தரும் பலன்கள் அபரிமிதமானவை.. கற்றாழையை பயன்படுத்த துவங்கிவிட்டாலே உங்கள் முகம் பளிச்தான்.. அதனால்தான், ஃபேஸ் கிரீம்கள், சோப்புகள், ஷாம்ப்புகளையெல்லாம், பெரும்பாலும், இந்த கற்றாழையில் இருந்தே தயாரிக்கிறார்கள்..

பருக்கள்: இந்த கற்றாழையுடன் தேன் சேர்த்து, மிக்ஸியில் ஜூஸாக அரைத்து வைத்து கொண்டால், முகத்துக்கு தடவி வரலாம். முகத்தில் உள்ள மங்கு, பருக்கள், தழும்புகள், சுருக்கங்கள், நீங்கி சருமம் பொலிவாகும். ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். ஆனால், கழுவும் முன், மசாஜ் போல செய்யலாம்.

Health Benefits of Aloe Vera and Do you know Aloe Vera Juice is the Excellent diet for all

சென்சிடிவ்: ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால், கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் + ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் போல செய்து, கழுத்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவிவந்தால், முகத்திலுள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கும். மேலும், தோல் அரிப்புக்கு மிகவும் நல்லது.. அதுவும் வெயில் காலத்தில் இந்த கற்றாழையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். கருவளையம், கழுத்து பின்பக்கம் படர்ந்துள்ள கருமை, போன்றவற்றையும் நீக்குகிறது.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் இருந்தல், இரவு தூங்கும்முன்பு, கற்றாழையின் சதைப்பகுதியை, பாதத்தின் அடியில் தடவினால் எரிச்சல் குணமாகும். கற்றாழையை சாறுபோல எடுத்து, அதனுடன் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கொதிக்க வைத்து, தலைமுடிக்கு தடவி, அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால், இளநரை மறைந்துவிடும்..

கற்றாழை: அல்லது சோற்றுக் கற்றாழையை, இரண்டாக பிளந்து, அதனுள் சிறிதளவு வெந்தயத்தையும் போட்டு மூடிவிட வேண்டும். 2 நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு, அந்த எண்ணெய்யை தேய்த்து குளித்து வந்தாலும், நரைமுடி நீங்கும் என்பார்கள். இதுபோல, கணக்கிலடங்கா நன்மைகளை தரும் கற்றாழை, இயற்கையின் "சர்வரோக நிவாரணி" என்று சொன்னால் அது மிகையாகாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+