10 ஆண்டுகளில் 6வது பிரதமர் அவுட்! பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் திடீர் ராஜினாமா.. புதிய குழப்பம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் அரசியலில் மீண்டும் ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகும் ஆறாவது பிரதமர் ஸ்டார்மர் ஆவார். இந்த அதிரடி மாற்றத்திற்கான காரணங்கள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

பிரிட்டன் நாட்டில் கடந்த 2024ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது. சுமார் 14 ஆண்டுகளாகப் பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி நடந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தொழிலாளர் கட்சி ஆட்சியை அமைத்தது. கீர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றிருந்தார்.

UK Prime Minister resings Britain England World

ராஜினாமா

இதற்கிடையே பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், தனது தொழிலாளர் கட்சிக்குள்ளேயே எழுந்த கடும் அழுத்தம் காரணமாகப் பதவி விலகும் முடிவை எடுத்துள்ளார். லண்டனில் உள்ள பிரதமர் இல்லமான 10 டவுனிங் தெருவில் இருந்து தனது மனைவியுடன் வெளியே வந்த அவர், தனது ராஜினாமா முடிவை அறிவித்தார்.

தொடர்ந்து அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் எனது நாட்டின் நலனை முன்னிறுத்தியே அமையும். அதனால்தான் நான் பதவி விலகுகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராகப் பொறுப்பேற்றது எனது வாழ்வின் மிகச்சிறந்த தருணம். மக்களின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே நான் அரசியலுக்கு வந்தேன்" என்றார்.

UK Prime Minister resings Britain England World

உரை

தனது பதவி விலகல் உரையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது அரசு செய்த சாதனைகளை ஸ்டார்மர் பட்டியலிட்டார். அவர் மேலும், "2024 பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தினோம். குறிப்பாக, பணவீக்கத்தை விட மக்களின் ஊதியம் ஒவ்வொரு மாதமும் உயர்ந்துள்ளது. சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டது.. மேலும், தொழிலாளர்கள் மற்றும் வாடகைக்குக் குடியிருப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்தோம். சுமார் 5 லட்சம் குழந்தைகளை வறுமையிலிருந்து மீட்டெடுத்தோம்" என்றார்.

இவ்வளவு சாதனைகளை அவர் குறிப்பிட்டாலும், கடந்த சில மாதங்களாக ஸ்டார்மரின் தலைமைக்கு எதிராகப் பல புகார்கள் எழுந்தன. தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, சொந்தக் கட்சியினரும் விமர்சித்தனர்.

சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு

குறிப்பாக, தொழிலாளர் கட்சியின் முக்கியத் தலைவரான ஆண்டி பர்னம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது, ஸ்டார்மருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. ஸ்டார்மரின் தலைமைக்கு எதிராக ஆண்டி பர்னம் களம் இறங்கியதுடன், சொந்த கட்சியான தொழிலாளர் கட்சியிலேயே சுமார் 100-க்கும் மேற்பட்ட எஎம்பிக்கள் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்தினர். இந்த உட்கட்சிப் பூசலே அவரது பதவி விலகலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

தொடர் கதை

கடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டன் பிரதமர் ஒருவர் ராஜினாமா செய்வது இது 6வது முறையாகும். கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் இத்தனை பிரதமர்கள் மாறுவது இதுவே முதல்முறை. பிரிட்டனில் நிலவும் பொருளாதாரச் சிக்கல்கள், பொதுச் சேவைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் போன்ற நீண்டகாலப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் அடுத்தடுத்த அரசுகள் திணறி வருவதையே இந்தத் தொடர் மாற்றங்கள் காட்டுகின்றன.

தற்போது ஸ்டார்மர் விலகியுள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரிட்டன் அரசியலில் நிலவும் இந்த நிலையற்ற தன்மை அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+