கல்லீரலை காக்கும் அரைக்கீரை.. ஆண்களுக்கு ஆனந்தம் தரக்கூடிய அறைக்கீரை! அரைக்கீரையின் அதிசய மருத்துவம்
சென்னை: உள்ளுறுப்புகளை பலப்படுத்துவது முதல் தலைமுடி வளர்ச்சி, சரும ஆரோக்கியம், கண்கள் பாதுகாப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடியது அரைக்கீரைகள்.. இந்த அரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
அரைக்கீரையிலுள்ள சத்துக்களை அளவிடவே முடியாது.. நீர்ச்சத்து 87 சதம், புரதச்சத்து 28 சதம், கொழுப்புச்சத்து 0.4 சதம், தாதுப்பொருட்கள் 24 சதம், மாவுப் பொருட்கள் 7.4 சதம் அளவிலும் உள்ளன. தாதுப்பொருட்களில் சுண்ணாம்பு, மணிச்சத்து, இரும்பு, சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் போன்றவை நிறைந்திருக்கின்றன.. மேலும் வைட்டமின் A, C, நிரம்பியிருக்கின்றன.

அளவுக்கு அதிகமான சத்துக்கள்
அல்கலாய்டுகள், பிளேவோனாய்டுகள், கிளைக்கோஸைடுகள், டெரிபினாய்டுகள், கரோட்டினாய்டுகள், அமராந்தோஸைடுகள், அமாரிசின், பீட்டாலைன், அமாநாந்தைன் என பல்வேறு தாவர மூலக்கூறுகள் இந்த அரைக்கீரையில் அடங்கியிருக்கின்றன.
பார்ப்பதற்கு குட்டையாக இருக்கும் இந்த அரைக்கீரையின் வேர்கள் கனமானவை. உஷ்ணத்தை தரக்கூடிய இந்த கீரையை, காய்ச்சல், குளிர், கபம் பிரச்சனைக்கு பயன்படுத்தலாம்.. அல்லது சுக்கு மிளகு, இஞ்சி, மஞ்சள் போன்றவைகளை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால், ஜன்னி, வலிப்பு நோய், குளிர்க்காய்ச்சல், நெஞ்சு சளி கரைந்துவிடும்.
ரத்த அழுத்தத்திற்கு நல்லது
மெக்னீசியம், பொட்டாசியம் தாதுக்கள் இந்த அரைக்கீரையில் உள்ளதால், ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை பாதுகாக்க உதவுகிறது. வாயு பிரச்சனை, வாத பிரச்சனை, அஜீரண பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை, நரம்பு பிரச்சனை, சரும பிரச்சனை, இவை அத்தனையையும் போக்கும் ஒரே கீரை, இந்த அரைக்கரையாகும்..
வல்லாரைக் கீரையை போலவே, இந்த அரைக்கீரையும் ஞாபக சக்தியை பெருக்கக்கூடியது.. அதுமட்டுமல்ல, கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளும் நெருங்குவதில்லை. அதனால்தான் வளரும் பிள்ளைகளுக்கு இந்த அரைக்கீரையை வாரம் 2 முறையாவது தர வேண்டும் என்பார்கள்..
நார்ச்சத்துக்கள் ஏராளம்
அதுமட்டுமல்ல, இக்கீரையில் மெல்லிய நரம்புகளை கொண்ட நார்ச்சத்துகள் அதிகமாக இருப்பதினால் வளரும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.. இதனால் குடற்புண்களும் ஆறிவிடும். சிறுநீரகத்தில் கற்களை சேர விடாமல் தடுக்கக்கூடியது இந்த அரைக்கீரை..
வழக்கமாக கீரைகள் என்றாலே ரத்தசோகையை விரட்டக்கூடியது. அதிலும் இந்த அரைக்கீரை கூடுதல் இரும்புச்சத்து நிறைந்தது.. பாசிபருப்புடன் இந்த கீரையை 21 நாட்களுக்கு சமைத்து சாப்பிட்டு வந்தால், ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகமாகி, நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி தரும்.
ஆண்மை குறைபாடுகள்
ஆண்மை குறைபாட்டை போக்கக்கூடிய தன்மை இந்த அரைக்கீரைக்கு உண்டு.. சின்ன வெங்காயம், அரைக்கீரை இவைகளை நெய்யில் வதக்கி கடைந்து சாப்பிடுவது ஆண்களுக்கு நல்லது என்பார்கள்.. அதேபோல, இந்த கடைசலை பெண்கள் சாப்பிடும்போது, உறுதியும், ஆற்றலும் உடலுக்கு கிடைக்கும்.
இந்த கீரையின் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.. அல்லது இந்த கீரையிலிருந்து சாறு எடுத்து, அதில் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இதனால், பேன், பொடுகு, தொல்லையும் நீங்கும். அல்லது இந்த கீரையின் விதைகளை எண்ணெய்யிலிட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்துவர தலைமுடி நன்றாக வளரும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications