Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனை வாங்கினால் "இதை" வாங்குங்க.. மீனிலேயே பெஸ்ட் இதுதான்.. உடல் எடை மளமளன்னு குறைய உதவும் மீன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன்வகைகள் உடலுக்கு நல்லது என்றாலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சிலவகை மீன்களில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? அவைகளால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போமா?

கானாங்கெளுத்தி: கானாங்கெளுத்தியை, அயிலை மீன் என்றும் சிலர் சொல்வார்கள்.. புரோட்டீன் அதிகம் உள்ள மீன் ஆகும்.. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது..

Health Benefits of Ayirai Fish and Do you know what nutrients are in which fish

உயர் ரத்த அழுத்தம் அழுத்தம் இருப்பவர்களுக்கும் மிகச்சிறந்த மீன் இது.. எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.. மற்ற உணவுகளில் இல்லாத அளவுக்கு வைட்டமின் D இந்த மீனில் நிறைய உள்ளது. அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மீனை எடுத்துக்கொண்டால், ஆயுள் நீட்டிக்கும் என்கிறார்கள்..

புரதச்சத்து அதிகமாக இருப்பதால், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் கிடைக்கிறது.. கார்போஹைட்ரேட் இல்லாததால், உடல் எடையை குறைக்க இது மிகச்சிறந்த உணவாகும்.. இந்த வகை மீனை அடிக்கடி உண்டால் மன அழுத்தத்தில் இருந்து காத்து கொள்ளலாம். கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற மீன்வகை இது.

கிழங்கான் மீன்: புரோட்டீன் அதிகமுள்ள மீன்களில் இந்த கிழங்கானும் ஒன்று.. அதனால் வளரும் குழந்தைகளுக்கு இந்த மீனை அடிக்கடி தருவார்கள்.. நரம்பு மண்டலத்தை இந்த கிழங்கான் மீன் பலப்படுத்துகிறது.. மனச்சோர்வை எளிதாக்குகிறது... கிழங்கான் மீன் சாப்பிடுவது சருமத்துக்கு மிகவும் நல்லது.. தோலில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்கிறது.. அதனால்தான், வெயில் காலங்களில் இந்த கிழங்கான் மீனை நிறைய சாப்பிடுவார்கள்.

வாதநோய்களை தடுப்பதில் கிழங்கான் மீனுக்கு நிறைய பங்கு உள்ளது. புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கப்படுகிறது.. கிழங்கானிலுள்ள மீன் எண்ணெய்யானது, மூட்டுவலியைக் குறைத்து நிவாரணம் தரக்கூடியது. இந்த கிழங்கான் குளிர்ச்சி தன்மையை உடையது.. எனவே, மூலப்பிரச்சனை உள்ளவர்கள் கிழங்கான் மீனை வாரம் 2 முறையாவது சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.

அயிரை மீன்: கெட்ட கொழுப்புக்கள் குறைவாகவும், நல்ல கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளது. த்த நாளங்களுக்கு மிகவும் நல்லது... ரத்த ஓட்டத்தை தடையின்றி சீராக்குகிறது.. ரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.. யாராவது, ஹை-பிபி எனப்படும் உயர் ரத்த அழுத்த பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த அயிரை மீனை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் இந்த மீனை சாப்பிடுவதால், அபாயம் குறைகிறதாம்.. அயிரை மீனை சாப்பிடுபவர்களுக்கு, கண்களில் பெரிதாக பாதிப்புகள் வருவதுகிடையாது.. அவ்வளவு ஏன், மாலைக் கண் நோயையும்கூட தடுத்து நிறுத்திவிடும் இந்த குட்டி மீன்கள்.

அயிரை மீனிலுள்ள வைட்டமின் E சத்தானது, சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.. அயிரை மீனிலுள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளையும், பற்களையும் வலுவாக்குகிறது.. அயிரை மீனிலுள்ள அமினோ அமிலங்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துகிறது.. அயிரை மீனிலுள்ள காம்ப்ளக்ஸ் சத்துக்கள், கர்ப்பிணிகளுக்கும், வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் தருகிறது.

நெத்திலி: அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு மட்டுமின்றி சருமமும் பொலிவோடு அழகாக இருக்கும். இதில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், புரோட்டீன்கள் அதிகமாக இருப்பதால் இது உடல் எடையை குறைப்பதற்கு வழி வகுக்கும்... நம்முடைய கண் பார்வையை கூர்மையாகும்.. மகப்பேறு காலத்திலும், தாய்ப்பால் சுரக்க, பெண்களுக்கு நெத்திலி மீனை சமைத்து தருவார்கள்..

சுறா : 75 சுறா மீன் வகைகள் இருக்கின்றன.. ஆனாலும், கொழுப்பே இல்லாதது இந்த சுறா மீன்.. சுறா மீன் வாங்கும் போது பெண் சுறா மீனையே வாங்க வேண்டும். பெண்களுக்கு, குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கு சுறா புட்டு அதிகம் செய்து தருவார்கள்.

மத்தி மீன்: இதய நோய்கள் அத்தனைக்கும் இந்த மத்தி உபயோகப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், தைரியமாக சாப்பிடக்கூடியது இந்த மத்தி மீன்.. இதனால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படும். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.. கர்ப்பக்காலத்தில் பெண்கள், இந்த மீனை சாப்பிட்டுவரும்போது, குழந்தைக்கும் தாய்க்கும் நிறைவான கால்சியம் கிடைக்கும்.

அதேபோல, மெனோபாஸ் காலங்களில் ஆஸ்டியோபெராசிஸ் என்ற பிரச்சனைக்கு ஆளாகாமல் தடுப்பதும் இந்த மத்தி மீன்தான். கண் குறைபாடுகள்: முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும். கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் இந்த மீனை சாப்பிட்டு வந்தால், கண் குறைபாடுகள் நீங்கும்..

தோல் நோய், மூளை, நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, போன்ற பிரச்சனைகளுக்கு மத்தி மீன் சிறந்தது.. வைட்டமின் D சத்து அதிகம் உள்ளதால், பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. உடல்எடையை குறைக்க நினைப்பவர்கள், வாரம் 2 முறை மத்தி மீனை உணவில் சேர்த்து கொண்டால், அத்தனையும் ஆரோக்கியம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+