மூங்கில் தண்டு.. சுவாச கோளாறு, மாதவிடாய் சிக்கலை நீக்கும் மூங்கில் குருத்து.. பலப்பல மருத்துவ குணம்
சென்னை: மருத்துவ குணம் மிக்க மூங்கில் தண்டுகள் எனப்படும் மூங்கில் குருத்துகள் பற்றி தெரியுமா? எந்தெந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் இந்த மூங்கில் குருத்துக்களை சாப்பிடலாம் தெரியுமா? பெண்கள் சாப்பிடலாமா? இதை சுருக்கமாக இங்கே காண்போம்.
இதிலுள்ள தண்டுகளையே மூங்கில் குருத்து என்பார்கள்.. மூங்குறுத்து என்றும் சொல்வார்கள். இதில் கொழுப்புகள் கிடையாது.. கலோரிகளும் கிடையாது.. பாக்டீரியா, வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் தாவரமாகும்.

நுரையீரல்: நுரையீரலுக்கு பலத்தை தரக்கூடியது.. அதனால், ஆஸ்துமா, இருமல், பித்தப்பை பிரச்சினைகளை தீர்க்கிறது. சுவாச கோளாறுகள் இருந்தால், மூங்கில் குருத்துக்களை தேனுடன் கலந்து கஷாயம் போல செய்து குடிக்கலாம்.. இதனால் காய்ச்சல் இருந்தாலும் பறந்துவிடும். அலர்ஜி இருந்தாலும் சரியாகிவிடும்.
நார்ச்சத்து அதிகம் என்பதால், உடல் எடைக்கு உதவக்கூடிய தாவரமாக இருக்கிறது.. அதாவது, இந்த மூங்கிலின் தளிர்கள், உடல் பருமனை குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த மூங்கில் தளிர்களில் உள்ள பைட்டோஸ்டெரால்ஸ் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எல்டிஎல் கொழுப்பை கரைக்க உதவுவதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
மாதவிடாய் கோளாறு: மாதவிடாய் கோளாறுகள் இருப்பவர்கள், மூங்கில் தண்டுகளை, மூங்கில் இலை சாறு போன்றவற்றை சாப்பிடும்போது, மாதவிலக்கு சீராகும்.
இதய தமனிகளில் இருந்து கொழுப்புகளை எளிதாக்கக்கூடிய பண்பு இந்த குருத்துகளுக்கு உண்டு. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடியது.. வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் மூங்கில் குருத்தினை மருந்தாக உட்கொள்வார்கள்.
தவிர்க்கலாம்: மலச்சிக்கல் உள்ளவருக்கு இந்த மூங்கில் குருத்து மிகச்சிறந்த மருந்தாகும். உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு பிரச்சனை உள்ளவர்கள், மூங்கில் குருத்துக்களை சாப்பிட்டு வரவேண்டும்.. ஆனால், குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்கள், பாலூட்டும் பெண்கள், தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இப்படி எண்ணற்ற நன்மைகளை தந்தாலும் மூங்கில் தண்டின் சாற்றை குடிக்கும்போது, டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெறுவது கட்டாயமாகும்.












Click it and Unblock the Notifications