வெற்றிலையின் சீக்ரெட்.. இடுப்பில் சதை சல்லுனு கரைக்கணுமா? உடல் எடை குறையணுமா? நல்ல பலனை தரும் இஞ்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டுமானால், கலோரிகளின் அளவு மிகவும் முக்கியம்.. இடுப்பு கொழுப்புகளை கரைக்க, கலோரி குறைவான உணவை சாப்பிடுவதுடன், இடுப்பிற்கு அதிக அழுத்தம் தரக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். இதில், வீட்டிலுள்ள உணவுப்பொருட்களை சாப்பிட்டு வரும்போது, உடல் எடை குறைப்புக்கு வழி வகுக்கின்றன.. அதில் சிலவற்றை பார்ப்போம்.

இதில் முதலாவதாக இஞ்சியை எடுத்துக் கொள்வோம்.. தினமும் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்து குடித்து வருவதால், இடுப்பு பகுதியிலுள்ள கொழுப்புகள் மெல்ல கரைய துவங்கும். தொடர்ந்து கொழுப்புகளை உடலில் சேர்க்க விடாமல் செய்யும்.

betel leaf ginger weight loss

அதேபோல, சிறிது இஞ்சி சாறுடன் தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் குடித்து, அத்துடன், வெந்நீரை குடித்து வருவதால், இடுப்பு பகுதியிலுள்ள கொழுப்பு, தொப்பை கரையும்.

கர்ப்பிணிகள்: இஞ்சியின் உறைதல் எதிர்ப்பின் காரணமாக வீக்கம், வயிற்று பிரச்னைகள், இதய பகுதியில் எரிச்சல் போன்றவை ஏற்படலாம் என்பதால், தினமும் 4 கிராமுக்கு மேல் சேர்க்கக்கூடாது.. கர்ப்பிணிகள், ரத்தக்கோளாறு, நீரிழிவு, இதயக்கோளாறு, ரத்தம் உறைதல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை தடுக்கலாம்.

அடுத்ததாக, உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பன்னீர் திராட்சை ஒரு பெஸ்ட் சாய்ஸ் ஆகும். இதைத்தவிர, நீர்ச்சத்து நிறைந்த பழமாக உள்ளதால், செரிமானம் சிறப்பாக நடப்பதுடன், கெட்ட நீரையும் உடலிலிருந்து வெளியேற்றுகிறது.

தயிர், வெல்லம்: அதேபோல, தயிருடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வருவதால் உடலின் எடை குறைய துவங்கும். வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்பை கரைக்க கூடியது வெல்லம்.. தயிரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும், கால்சியமும் உள்ளதால், தெர்மோஜெனீசிஸின் செயல்முறையை அதிகரிக்க செய்கிறது.. வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி, தேவையற்ற எடையையும் குறைக்க துணைபுரிகிறது.

அதனால்தான், தயிர் சாப்பிடுபவர்கள் உடல் எடை எப்போதுமே சீராக காணப்படும். தினமும் ஒரு கப் தயிர் அளவுடன் சாப்பிடுதால், ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கலாம் என்கிறார்கள்.

வெற்றிலைகள்: வெற்றிலைகளையும் உடல் எடை குறைக்க பயன்படுத்தலாம்.. வயிற்று சதையை குறைப்பதில் வெற்றிலைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.. காலையில் வெற்றிலை, பாக்கு போடுவதாக இருந்தால், பாக்கு அளவை அதிகமாக சேர்த்து கொண்டாலே, துவர்ப்பு சுவையான பாக்கு, மலமிளக்கியாக செயல்பட்டுவிடும்..

அதுமட்டுமல்லாமல், இளம்கொழுந்து வெற்றிலையுடன் 5 மிளகு சேர்த்து, வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள கழிவுகள் நீங்குவதுடன், வயிற்றுப்பகுதியிலுள்ள கொழுப்புகளும் கரைய துவங்கும். 2 வெற்றிலை, 2 மிளகு, 5 உலர் திராட்சை மூன்றையும் இரவில் தூங்கும் முன்பு சாப்பிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். வெற்றிலைகளை நசுக்கி, தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை மட்டும் குடித்தாலும், குடல் இயக்கம் சீராகும்.

சின்ன வெங்காயம்: சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், ஊளைச்சதையும், அடி வயிறு, இடுப்பை சுற்றியுள்ள கெட்ட கொழுப்புகளும் குறையும்.. பனங்கிழங்கில் ஏராளமான நார்ச்சத்து அதிகம் என்பதால், உடற்கழிவுகள் மட்டுமல்லாமல், வயிற்று பகுதிகளிலுள்ள கொழுப்பையும் கரைக்க தூண்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+